கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நான் சூரியனுக்குக் கீழ் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுவிட்டேன். எல்லாம் வெறும் பகட்டு ஒப்பனைகள் ! ஆன்மாக்களின் வெறுப்புக் கொந்தளிப்புகள் !”
எக்லெஸியாஸ்டஸ் (Ecclesiastes, Hebrew Bible)
“மரணமே ! பட்டப் பகலில் நீ வீர நடை போட்டுச் செல்கிறாய். விடியாது இருள் மண்டிய இரவில் நின்று நாங்கள் உன்னை விளிக்கிறோம். எங்களின் கூக்குரல்கள் கேட்க வில்லையா உன் காதில் ? செத்துப் போனோரின் ஆன்மாக்களை எங்கள் தூதர்களாய் உன்னிடம் நாங்கள் அனுப்பினோம் ! அவரது வேண்டுகோளை நீ நிறைவேற்றினாயா ?
எங்கள் கூக்குரல் எல்லாம் சேர்ந்து தெய்வ லோகத்தில் கேட்கட்டும். ஆயினும் மரணம் எம்மை எள்ளி நகையாடி அந்திப் பொழுதில் செந்நிறத்தை நோக்கிச் செல்கிறது.”
கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
+++++++++++
கோலாகல அரங்கத்தில் உலாவும்
சாலமன் ஆன்மாவே !
அண்ட சரா சரங்களின் கிழிந்த
ஆடையை அகற்றிய நீ
இன்னல், பலவீனத்தில்
உதித்துள்ள
இச்சொற்களை இங்கே விட்டு
ஏகினாய் !
இன்னும் சிறைப் பட்டுள்ள
அவ்வித உடல்களை
நீ அவல
நிலைக்குத் தள்ளினாய் !
++++++++++++
இந்த மனிதப் பிறப்புக்கு
ஓர் அர்த்தம்
இருப்பதை நீ அறிவாய் !
மரணம் நமக்கு அதைச் சற்றும்
மறைப்ப தில்லை !
ஆயினும்
மனித இனம்
எப்படி அடையும்
ஒப்பிலா ஞானம்
ஆத்மா
புவிப் பிடிகளி லிருந்து
விடுதலை பெறாது ?
*************
உனக்கு இப்போது புரியும்
ஆன்மாவின் வெறுப்புக் கொந்தளிப்பால்
வாழ்க்கை
வடிவாக வில்லை யென்று !
பரிதியின் கீழே
நிகழ்பவை யாவும்
பகட்டு ஒப்பனைகள் அல்ல !
வாழும் மானிடம்
எல்லாம் சத்தியத்தை நோக்கிச்
செல்லும் !
எப்போதும் செல்லும் !
உன்னத ஞானமாய்
எண்ணி
துயர்ப்படும் மாந்தர் நாம்
வையக விதி முறைகளில்
கைதிகள் ஆனோம் !
ஆயினும் அவை யெல்லாம்
நல் மனதை இருட்டடித்து
நம்பிக்கை உணர்வை
அடைத்து விடும்
மடைக் கதவுகள் !
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 10, 2010)
- மொழிவது சுகம் 11-: நமக்குள் உள்ள இன்னொருவன்
- ஓட்டை பலூன்
- எச்சரிக்கை……!
- அவர்கள் காதலிக்கட்டும்..!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- முப்பத்து மூன்று!
- மொழிக் குறிப்புகள்
- அர்சால்
- முள்பாதை 20
- துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை
- ஒரு மகள்.
- எங்கோ பார்த்த முகம்
- அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8
- உதிர்ந்த இலைகள்
- எப்போதும் முந்துவது…
- கனவு தேசம்
- வேத வனம் விருட்சம் 76
- நித்யானந்தாவும் நேசக்குமாரும்
- மகளிர் தினம்
- எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி
- இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -5
- செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்
- தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1
- முக்காட்டு தேவதைகள்
- எனது மண்ணும் எனது வீடும்
- பாவனைப்பெண்