வேத வனம் -விருடசம் 72

This entry is part of 26 in the series 20100212_Issue

எஸ்ஸார்சி


கொடுக்கப்படுவது எது
கொடுக்கப்படுவதெ வருக்கு
ஆசையே அனைத்து
அளித்தலுக்கும் மூலம்
கொடுத்தலும் பெறுதலும்
காமத்தின் நீட்சி ( சுக்ல யஜுர் 7/48)
இல்லறம் புரிவோரே
இன்பம் உமதாகட்டும்
பெண் குழந்தைகட்கான
கர்ப்பப்பை சுத்தமுறுக
பெண் குழந்தைகள்
தம் தாய்மாரை காக்கட்டும்
செய்படு வேள்வி யிங்கு
தேவருலம் வானம்
பிதுருலகம் செல்கிறது
வேள்வி எண்திசையும் விரிந்திடுக
வளமார் குதிரை பொன்னொடு
பொழியட்டும் இங்கு ( சு.ய. 8/)
வேள்விக்குதிரையே
வாஜ பேயமே நீ
வாயு வேகம் பெறுக
இந்திரனின் வலக்கரமே
ஆகிடுகுக இங்கு
உலகம் தெரிந்த மருத்து
நின்னை ப்பிணைக்கட்டும்
உன் பாதங்கள் துவஷ்டாவால்
விரையும் வலிமை எய்துக
தாயே தரணியே வந்தனம்
தவம் நின் அதிபதி
நிலைத்தவன் நிர்வாகி
அரசன் எம் ஆள்வோன்
வளம் நலம் செல்வமுமாய்
உழவுக்கு உறுதுணை
புவித்தாய் நீயே
வேள்வி செய் எசமான்
தாய் நாமமிது
தந்தை நாமமிது
குடும்ப ப்பேரிது
இவனே காவலன்
எம்மக்கட்கும்
எமது பிராமணர்கட்க்கும் ( சு. ய. 9)

Series Navigation