வெவ்வேறு உலகங்கள்

This entry is part of 34 in the series 20100206_Issue

நாவிஷ் செந்தில்குமார்


வீட்டின் முன்னே
பறந்துகொண்டிருந்த
பலூனும்
வண்ணத்துப்பூச்சியும்
ஒரு நூலால்
கட்டப்பட்டிருந்தன…
எது எதை இழுத்துவந்ததென அறிய
நூலை அறுத்தேன்
இரண்டும் வெவ்வேறு திசைகளில்
பயணித்தன
குழந்தைகளின் உலகத்திலிருந்து
தத்தம் உலகத்திற்கு!

Series Navigation