வேத வனம் விருட்சம் 70

This entry is part of 31 in the series 20100128_Issue

எஸ்ஸார்சிஆதியில் தோன்றியது எது
பேறறிவு என்பதெது
வண்ணக்கலவை
வாச ஈர்ப்பு
வந்த விதம் அறிவோமா
விண் தோன்றிட்டது முதலில்
பேறறிவுவாகியதே குதிரை
வண்ணக்கலவையோ இரவு
கதிரோனே காந்திக்கு ஆதாரம்
தனித்துச்செல்வோன் யார்
தோன்றி முளைப்போன் யார்
வாட்டும் குளிருக்கு
மாற்று வழங்கிக்
குதுகூலம் தருவதெவென்
அவனே விசாலமாய்ச்சூழும்
பகலவன்
பூமியின் கடை எல்லை எது
மய்யம்தான் எது
பலமுள்ள குதிரையின் சூக்குமம் தான் என்ன
பேசும் பேச்சுக்கோர் மா இடம்
அறிவாயோ நீ
ஞானம் புவியின் எல்கை
யக் ஞம் புவியின் மய்யம்
சோமன் குதிரைக்கு
வலு க்கொடை தருவோன்
பேச்சின் பெரு மய்யம்
பரமமே ( கிருஷ்ண யஜுர் 7/353)

அம்பை அம்பாலிகை
சொர்க்கம் உறை சௌபாக்கிய
யுவதிகளே
புல் மேயும் மான்
புஷ்டியானது அறியுமோ
ஆ¡¢யனுக்கு மகிழ்ச்சி
அளிப்போன் தன் உணவு
எங்கே தேடுகிறான் ( கி.ய. 7/354)

அக்கினி புவியொடு
வாயு வானொடு
கதிரோன் விண்ணோடு
திங்கள் தாரகையோடு
வருணன் நீரோடு
சாமம் ¡¢க்கோடு
பிராமணன் க்ஷ்த்¡¢யனோடு
அரசன் மக்களோடு
இரதம் குதிரையோடு
தலைவன் சனங்களோடு
எப்படி பொருந்துவரோ
அப்படி ப்பொருந்துவரோ
இங்கெனக்கும் ( கி.ய.7/357)

புவி தங்கி
சுகம் தங்கிடு
அக்கினிக்கு வந்தனம்
வானம் வதிந்து
உலகம் உய்யக்கொண்ட
வாயுக்கு வணக்கம்
விண்ணுறை சூ¡¢ய
ஒளி கொடையோனுக்கு
எம் வந்தனம்
எம் எசமானுக்கு
உலகம் தாருங்கள் ( கி. ய.7/368)
—————————————————–
—————————————————————————————————–

Series Navigation