வேத வனம்- விருட்சம் 69

This entry is part of 35 in the series 20100121_Issue

எஸ்ஸார்சி


விசுவ கருமன்
அவன் எங்கள் பிதா
தெளிவிப்போன் எம்மை
சக்தி வழங்கிடுக எமக்கு
அவனைக்காணுதல் இயலாது
அறிவின்மை அகங்காரம்
சுழல் சிக்கிய சீவன்கள்
துதிக்கலாம் அவனை அம்மட்டே
வானம் தேவர் அசுரர்
இப்புவி இதற்கப்பால்
உய் மறைபொருள் எது
அஜன் நாபி அது
உலகம் அனைத்துக்கும் மூலம்
விசுவகர்மன் கந்தர்வன்
செடி கொடிகளுக்குப் பிதா
தொடரும் படைப்பு வரிசை
விருட்சம் என்பது யாது
வனம் முன்னம் எங்கிருந்தது
ஔளி எப்படிப்
பூஉலகைக் கொணர்ந்தது
ஒளியின் மூலம்தான் யாது
சிந்தனை செய்க
அறிவுடையோர் அத்தனைபேரும் ( கிருஷ்ண யஜுர் 4/233)
எம் பக்கம் இந்திரன் சார்க
எம் அம்புகள் வெற்றி தருக
எம் வீரர்கள் வென்று வருக
எம் போர்வாளுயர்க
எம் குதிரைகள் பலமுறுக
வெற்றித்தேரொலி வெள்ளமென எழுக ( கி. ய.4/236)
மனிதர்கள் கைக்கொள்
சத்திய நெறிதனைக்
காணக்கீழ் வரும் வருணன்
புனிதமாய்த் தேனொக்கும்
தண்ணீரைத்தருகிறான்
அவையே மானிடர்க்கு
சுகம் பலம் அருள்பவை.
மேகங்கள் உடைந்து
ஒருமையுடன் பொழியும் மாரி
நாதஞ்செய்து புவி மீது வீழ்வதாலே
நதி என்னும் பேர் வந்தது
சிந்துக்களே நதிகள் அத்தனையும்
வருணன் தூண்டி
மழைவந்த பின்னர் மட்டுமே
இந்திரன்வந்ததாலே
ஆப என்பன நதிகளே
இந்திரன் விழைவது மறுத்த
நதிகள் தம் போக்கில்
மறிக்கப்பட்டன ஆகத்தான்
வாஹகம் என்னும்
பெயர் நதிகட்கு வந்தது
நீர் வழியிடை ஒர் தேவன் எழ
நீர் உயரம் கூட்டியது
ஆகவே நீர் உதகம்
என்னும் பேர் கொண்டது ( கி.ய. 5/277)
இந்திரனே அக்கினியே
பிரகசுபதியே
பசுவொடு குதிரைகள் வலிமையுறுக
பலம் அருள்க எமக்கு
பிராமணர்கள் புனிதம் பெருக
அரசர்கள் ஆளும் ஆற்றலும்
வைசியர்கள் தொழிற்திறமும் பெறுக ( கி .ய. 296 )
அக்கினி என்னும் பசு
இவ்வுலகை வென்றது
உன் உலகு இது
இவ்வுலகை வெற்றிகொள் நீ

வாயு என்னும் பசு
இவ்வுலகை வென்து
உன் உலகு இது
இவ்வுலகை வெற்றிகொள் நீ
ஆதித்தன் என்னும் பசு
இவ்வுலகை வென்றது
உன் உலகு இது
இவ்வுலகை வெற்றிகொள் நீ
வாழும் உலகைப் புரிந்துகொள்
வையம் உனதாவதுணர்வாய் ( கி.ய. 5/315)

Series Navigation