டெர்மினெட்டர் ஒன்றும் இரண்டும்

This entry is part of 29 in the series 20091225_Issue

நட்சத்திரவாசி


அந்நியத்திலிருந்து மின்னல் தெறிக்க
வந்துதித்தான் டெர்மினேட்டர்
பழையது போல நிர்வாண கோலத்தில்
தமது இயந்திர விழியால்
தம்மை போர்த்திக்கொள்கிறான்
ஏதோ சொல்லிவைத்தார் போல
அவனுக்காக காத்திருக்கும் எதிரியின்
புல்லட்டுகளை அலட்சியம் செய்கிறான்
வேகமாக நகர்ந்து கொள்கின்றனர்
சாலையில் அனாதையாக தனித்து
விடப்பட்ட குழந்தையொன்று
வீறிட்டழுகிறது
எதிரியிடம் இருந்து குழந்தையை
பாதுகாத்து விட்டானவன்
எதிரியை சுட்டு வீழ்த்தி
பொடிபொடியாக்கி
பின் ஒவ்வொரு அடியும்
குழந்தையை பாதுகாக்கவேண்டி
உயிர்தெழுந்து வரும் எதிரி
டெர்மினேட்டரிடமிருந்து
அசகாய பராக்கிரம சாகசங்களுடனான
ஒவ்வொரு நகர்தலும்
காத்திருக்கிறது
டெர்மினேட்டர் ஒன்றுக்கும்
டெர்மினேட்டர் இரண்டுக்கும்
இடையில்
விடை சொல்ல முடியா போராட்டம்.

Series Navigation