பனி சூழ்ந்த பாலை!

This entry is part of 30 in the series 20091218_Issue

வேலன்


வறட்சியின் நிமித்தமாய்
உயிர் விட்டிருந்த
அச்சூன்யமிக்க வனாந்திரத்தில்
விருட்சம்
பலக்கண்டிருந்த
ஓர் ஆலமரம்
திக்கற்று
நின்று கொண்டிருந்தது!

நெடுந்தூர பயணத்தின்
முடிவில்
தன் பிறப்பிடம்
காண வந்திருந்த
காகம்
பழுப்பேறிய அதன்
நிலைக்கண்டு
பெருங்குரலெடுத்துக் கதறத்
துவங்கியது!

பெருக்கெடுத்து ஓடிய
கண்ணீர்த்துளிகள்
உழன்ற நாவின் வழியே
கிழவனின் விரல்களை ஒத்த
வேர்களை ஆதரவாய்த்
தழுவிச் செல்ல
அதன் நூற்றாண்டுகால
பசுமையான நினைவுகள்
கரையத் துவங்கியிருந்தன!

– வேலன்

Series Navigation