ஒரு நிலாக்கிண்ணம்

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

இனியவன்


கடலளவு தாகம்தான்
தணிந்து விட்டது
ஒரு பனித் துளி பட்டதுமே.
எத்தனை முறை தெரியவில்லை
ஒரு பட்டாம் பூச்சியின் சிறகினால்
வானத்தை அளந்து பார்த்தது.
ஆயிரம் கால
தவம் போல
ஒரு மரமாய் நிற்க
சபலங் கள்
சபலப் பட்டன.
ஒரு நிலா கிண்ணம்,போத வில்லை
வாழ்க்கையின் ரகசியங்கள்
நட்சத்திர துகளின் வழியே
வழிய வழிய………
சேகரிக்க.
கடந்து போன மார்கழியில்
நுகர்ந்த பூ
இன்றும் மணம் வீசுகிறது
என் மனதில்
வேர் விட்ட செடியிலிருந்து.
ஒரு மாலை பாதையின்
அனுபவமென திருப்பங்கள் நிறைந்த
வளைவுதான் காலம்,
கனிய கனிய
மூச்சின் வெப்பம்
கதகதப்பூட்டுகிறது
உயிர்ப்பின் இருப்பை
பெண்ணெ
கடைசியாய் ஒன்று
தேவதைகள் என்பவர்கள்
தெரு இறங்கி வருவதில்லை
மாழை நாள் சாளரங்களின்
சாரல்களாய்
மனம் இறங்கிப் போவதை
கண்டு கொள்ளலாம்
பூக்குடை தூக்குபவளின் சிரமம்
பூ கூடை க்குத் தெரிவதில்லை
நானும் அப்படித்தான்
உன்னை சுமந்து

quill@tachyon.in

Series Navigation

இனியவன்

இனியவன்