அடிவானத்திலிருந்து நகரத்திற்கு

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

கே.பாலமுருகன்


அடிவானத்திலிருந்து ஒவ்வொரு துளியாக
கரைந்துகொண்டிருந்த எல்லாம்வித ஒழுகலும்
ஒரு மலையென உருவெடுத்து
பசுமைகளை சரியவிட்டிருந்தது.
அடையாளம்காட்டிய விரல்களெல்லாம்
மலையை சிறுசிறு பிரிவுகளாக
தனக்குரிய பிம்பமென உருவிக் கொண்டார்கள்.
மலையடிவாரத்தின் காட்டாறுகள்
மலையை நகர்த்திச் சென்று
நகரத்தின் நடுநிசியில் விட்டு வந்தன.
மலை இப்பொழுது ஒரு கோபுரமென
நடமாடவும் ஏறிச் செல்லவும்
ஒரு கூட்டத்தைக் கொண்டிருந்தது.
மலைக்கு நகர மேம்பாடுகள் தெரிந்ததால்
தனது பாதி உறுப்புகளைக் கழற்றி எறிந்து
உடல் அரசியலில் தன்னை நிறுவிக்கொண்டன.
இந்தக்கணத்திலிருந்து மலை
சிதைவுக்குள்ளாகி நகரத்திற்குச் சொந்தமாகியிருந்தன.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்