சிறகுகளே சுமையானால்…

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

ப.மதியழகன்


சுமையை இறக்கி வைக்க
உண்மையான நண்பனில்லை
அந்தஸ்து பார்க்காத உறவினரில்லை
குழிபறித்துக் காத்திருக்காத
அக்கம் பக்கத்தானில்லை
எனது சறுக்கல் கண்டு
குதூகலிக்காத சகபணியாளனில்லை
மனைவியிடம் சொல்லலாமா
– என்று எண்ணாமலில்லை
“ஆம்பளை அழுவலாமா
ஐயனாரு பயந்து ஒதுங்கலாமா?”
-என்று இரவெல்லாம் புலம்புவாள்
தலையணைகளை தன் கண்ணீரால்
குளிக்கவைப்பாள்.
“ஆத்தா, அப்பன் போயாச்சு
எல்லோருக்கும் தாயும், தந்தையுமா
நீ தான் இந்த ஊருக்கு மத்தியில
கோவில் கொண்டு குடியிருக்க
அம்பிகையே, ஆண்டவனே
அங்கே என் ஆயி, அப்பனை
எங்க,எப்படி வச்சிருக்க?
மனுசா தான் இப்படிண்ணு
தினம் தினம் வேதனையில
மனம் புழுங்குறேன்
மகேசன் எப்படிண்ணு கூடிய சீக்கிரம்
மரிச்சு போய்
உங்கிட்ட தெரிஞ்சிக்கறேன்!

mathi2k9@gmail.com

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்