வேத வனம் -விருட்சம் 38

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue


இந்திரனே பருகு
இனிய சோமம் இதோ
பாலும் நீரும் சேர்ந்து
கற்களிடை இறுகி
கம்பளி பிழிபட்டுக்கிடைத்த சோமம் இது
சுவாஹா வஷட் சொல்லி எழும்
சோமம் இது

விண்ணின் மைந்தர்களே
புள்ளி க்குதிரை பூட்டிய தேரில்
ஈட்டிக் கைகொண்டு
ஆபரணம் பல பூண்டு
வரும் பரத குல
வாரிசு நீங்கள்
தருப்பைப்புல் மீதமர்க
சோமம் பருகுக ( ரிக் 2/36)

சூரியனைக்கிரணங்கள்
விடுதலைசெய்ய
அவன் எழும்புகிறான்
விடுபட்ட பயணங்கள்
தடை பட்ட யுத்தங்கள்
தொடர்கதையாகின்றன
இரவுப்பெண் தானே
நெய்த ஆடையால்
உலகம் மூடுகிறாள்
ஒயாதுழைப்பவன் இரவு வந்திட
உறங்கிப்போகிறான்
களைப்பறியா ச்சூரியன்
பருவங்கள் நிர்மாணித்தான்
தூங்கும் உலகத்தை அவன்
தட்டி எழுப்புகிறான்

தாய் உஷை
தனயன் அக்கினி
அக்கினியே அன்னத்தின் சூக்குமம்

புவி மீதுறை
தண்ணிரை வானம் சேர்த்தவனே
அக்கினியே
வறண்ட தேயத்து
மிருகங்கள்
தாகமுறுகின்றன
பட்சிகளுக்கு வனம்
தந்தவன் நீ
பறவைக் கூடுகளில்
மிருகங்கள் தத்தம்வீட்டில்
வருணன் நீருக்குள்
தத்தம் இடமே அதுவதும். ( ரிக் 2/38)

அசுவினிகளே நீவி£ர்
சோமம் பிழி சோடிக் கற்கள்
கவி பாடும் சபைஅந்தணர்கள்
இரட்டை வீரர்கள்
ஒரு சதை ஆடுகள்
தம்பதி நீவிர்
இரு கொம்புள்ள ஆவினம்
வேகப்புரவிகள்
காளைக்குக்காத்திருக்கும் சகடங்கள்
சிரஞ்சீவியாய் நாற்றுக்கள்
இரு நதிகள்
இரு கண்கள்
இரு கைகள்
இரு கால்கள்
இனியனப் பேசும் உதடுகள்
சீவிதம் அரும்பு முலைகள்
சுவாசிக்கும் சோடி நாசிகள்
நல்லன புகு இரு செவிகள்
கைகளாய் ச்சமைந்து
எமக்கு வலிமை தாரும்
உத்தம வீரர்கள் பெற்றெடுத்த வரிசு யாம்
வேள்வி செய்கிறோம்
அசுவினிகளே உடனிங்கு எழுந்தருளுங்கள். ( ரிக் 2/39)


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி