ஐந்து கவிதைகள்

This entry is part of 32 in the series 20090512_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


01

அழைத்துப் போய்வந்த
ஆசிரியரின் அத்தனை
கெடுபிடிகளுக்குப் பின்னும்
இன்னமும் நினைவில்
அந்த ஸ்கூல் பயணம்
இன்பச் சுற்றுலா என்றே.


02

இலவசமாய்
அரிசி டிவி

இயற்கை
உபாதைக்கு

கட்டண
கழிப்பிடங்கள்.


03

எதிர்வரும் பேருந்தில்
அடிபடும் அபாயம்.
இடப்புறம் நகர்ந்து
நடந்தேன்.
இளவயது மாதொருத்தியை
இடித்தபடி.


04

யாருமற்ற பூங்காவில்
ஊஞ்சல்
ஆடிக்கொண்டிருக்கிறான்
என் மகன்.
எவரையோ சேருமென்று
கவிதைகள்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
நான்.


05

ஏதோவொன்றின்
தொடர்பாகவே

எதுவொன்றின்
நினைவும்.


Series Navigation