கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Kahlil Gibran’s Paintings
“Man with Two Women”
செல்வம் ! நேர்மையற்ற காதலுக்கு மூலமானது ! போலி வெளிச்சத்தைத் தேடுவது ! எதிர்பார்ப்புச் செல்வீகத்தை (Fortune) நோக்கி ஓடுவது ! நச்சு நீர்க் கிணறு ! முதிய வயதின் இல்லாமைப் பரிதவிப்பு (Desperation) !
கலில் கிப்ரான்.
நீ மகிழ்ச்சியுடன் உள்ள போது உன் நெஞ்சுக்குள் ஆழ்ந்து சிந்தித்துப்பார் : உனக்குத் துக்கம் எது கொடுத்துவோ அதுதான் உனக்கு உவகை அளித்துள்ளது என்பதைக் காண்பாய்.
உன் மனம் நோகும் போது மறுபடியும் உன் இதயத் துள்ளே நீ நோக்கு : மெய்யாக உனக்கு மகிழ்ச்சி அளித்ததே உன்னை அழ வைத்திருக்கிறது என்பதை நீ அறிவாய்.
கலில் கிப்ரான்.
<< பூவின் கானம் >>
இயற்கையின் குரலாய் மீண்டும்
உரைக்கப் படும்
நான் ஒருவித வார்த்தை !
நீல நிற வானக் கூடாரத்தி லிருந்து
பச்சைக் கம்பளத்தின் மேல்
வீழும் தாரகை நான் !
குளிர் காலம் கருத்தரித்த
மூலங்களில்
நானொரு பெண் மகவு !
வசந்த காலம்
பெற்றெடுத்த பிள்ளை !
வேனிற் காலத்தின் மடியில்
வளர்ந்து வந்தது !
இலையுதிர் காலப் படுக்கையில்
உறங்கியது !
பொழுது புலர்ந்ததும் என்னைத்
தழுவுது தென்றல்
ஒளி உதயத்தை அறிவிக்க !
பறவை இனத்தோடு
சேர்கிறேன்
பரிதி ஒளிக்கு மாலையில்
விடை கொடுக்க !
சமவெளி எங்கும்
எமது எழில் மய நிறங்கள்
அலங்கரிக்கும் !
வாசனைத்
தென்றலில் நறுமணம்
வீசி வரும் !
உறக்கம் என்னை
அணைத்திடும் வேளையில்
இரவின் விழிகள்
என்னைக்
கவனமாய்க் காத்திடும் !
காலையில்
கண்விழிக்கும் போது நான்
காண்பது
பகலின் ஒற்றைக் கண்
பரிதியை !
பனித்துளியே ஒயினாகும்
எனக்குப் பருகிட !
பறவை இனத்தின் குரல்களே
எனக்குக் கேட்கும் !
புல்லின் அசைவுக்கு
இணையாகப்
புரிவது நான் நடனம் !
காதலரின் வெகுமதி நான் !
கல்யாண
மலர் வளையம் நான் !
ஒரு கணத்து மகிழ்வுக்குத்
தரப்படும்
நினைவுப் பரிசு நான் !
இறந்தவருக்கு இருப்பவர் தரும்
இறுதிக் கொடை !
துயரிலும்
எனது பங்குண்டு !
மகிழ்விலும்
எனது பங்குண்டு !
மேல்நோக்கி மட்டும் பார்க்கிறேன்
வான் ஒளியை !
ஒரு போதும்
கீழ்நோக்கிப் பார்த்திடேன்
என் நிழலை !
மனிதன் கற்க வேண்டும்
இந்த ஞானத்தை !
(தொடரும்)
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 11, 2009)]
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.
- புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- தூரதேசத்திருந்து
- புத்திஜீவிகள்
- மரணம் பேரின்பம்
- ஐந்து கவிதைகள்
- அதிரூபவதிக்கு…..
- பூங்கா!
- வேத வனம் – விருட்சம் 34
- ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்
- மனச்சுமை
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்
- மூர்த்தி எங்கே?
- ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன
- சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி
- மே 2009 வார்த்தை இதழில்…
- அ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு
- Call for Submissions for the 8th International Tamil Short Film Festival
- நேசகுமாருக்கு என் பதில்
- நீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை
- பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!
- ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு
- தலைவாசல்
- வ.ந.கிரிதரனின் “நான் அவனில்லை”
- பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்
- சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி
- நேசக்குமார் அவர்களின் கட்டுரை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2
- மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009