பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்

This entry is part of 32 in the series 20090512_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஒரு குன்று உள்ளது
என் தேசத்தில் !
ஒரு நதியும் உள்ளது
என் தேசத்தில் !

என்னோடு வா !

மேலே ஏறிச் செல்லும் இரவு
மலை மீது !
கீழே இறங்கி வரும் பசி
நதி நோக்கி !

என்னோடு வா !

எவராக இருக்கப் போகிறார்
துயர்ப் படுவோர் ?
எவரென்று நானறியேன்
ஆயினும் அவர் அனைவரும்
என் தேச மக்கள் !

என்னோடு வா !

என்னைத்தான் விளிக்கிறார் மக்கள்
எனக்குத் தெரியவில்லை !
என்னிடம் முறையிடுகிறார் :
தாங்கள் யாவரும்
இன்னல் அடைவதாய்ச்
சொல்லி !

என்னோடு வா !

என்னிடம் சொல்கிறார் அவர்கள் :
“உமது மக்கள்
அதிர்ஷ்டம் இல்லாதவர் !
மலைக்கும் நதிக்கும் இடையில்
பசியோடும் துயரோடும்
தனியாய்ப்
போராட விரும்பிலர் !
காத்திருக்கிறார் உமது உதவிக்குத்
தோழரே !

நீ தான் எனக்கு !
உன்னைத்தான்
நான் காதலிப்பது
சின்னப் பெண்ணே !
என் கோதுமைச்
செங்கதிரே !

எமது போராட்டம்
கடுமை யானது !
நமது குடிவாழ்வும்
கடின மானது !
ஆயினும் நீ என்னோடு
அருகில் வா !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 11, 2009)]

Series Navigation