பாப்லோ நெருடாவின் கவிதைகள் -35 << கோதுமைப் பதார்த்தம் நீ >>

This entry is part of 27 in the series 20090507_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன் பாதம் முதல்
உன் கூந்தல் வரை பளிச்சிடும்
ஒளிச் சுடரும்
உன் மெல்லிய உடலுக்குள்
ஒளிந்துள்ள வல்லமையும்
உன்னத முத்துக்கள் அல்ல !
சில்லிட்ட வெள்ளியும்
அல்ல !
நீயோ கோதுமைப்
பண்டத்தில்
உண்டாக்கப் பட்டவள் !
வெப்பக் கணப்பில் விளைந்த
மாவுப் பதார்த்தம் !

தானியப் பயிர்கள்
அறுவடை செய்த போது
மேனிக் குள்ளே வளர்ந்தன
உன்னதக் கதிர்கள் !
தக்க பருவ காலத்தில்
உப்பிய மாவுப் பதார்த்தம் !
உருண்டு திரண்டு பொங்கின
இரண்டு கொங்கைகள் !
என் காதல்
எரியும் நிலக்கரியாய்
உனக்குக்
காத்திருக்கும் தயாராய்க்
காசினியில் !

கோதுமை ரொட்டி போல்
குவிந்த நெற்றி
உன்னிரு கால்கள் !
உன் வாய் இதழ்கள் !
நான் புசிக்கும் உணவாய்த்
தோன்றினாய் நீ
உதய வேளை ஒளியோடு !
என் காதலி
பச்சைக் கொடி காட்டும்
கோதுமைத்
தின் பண்டம் !

குருதியின் பாடத்தைக்
கற்றுக் கொடுத்தது உனக்கு
அக்கினி !
கோதுமை மாவிலிருந்து !
உனது புனிதத்தை
நீயே
உணர்ந்து கொண்டாய்
உன் தாய்மொழியும்
உன் நறுமணமும்
கோதுமைப்
பண்டத்தி லிருந்து
உண்டானவை !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 4, 2009)]

Series Navigation