இயன்றதின் பொருட்டு…

This entry is part of 27 in the series 20090507_Issue

செல்வராஜ் ஜெகதீசன்114 பக்க விகடனை
முழுதாய்ப் படித்து
முடிக்கும் வரை
காத்திருந்து பார்த்த பின்
கையில் கொடுக்கப்பட்ட
மருத்துவமனை
நுகர்வோர் கருத்துப் படிவத்தில்
”நன்று” என்றே எழுதித் தந்தேன்.
இழுத்துப் பிடிக்கும்
இயந்திர வாழ்க்கையில்
இதழ் ஒன்றைப் படிக்க
இப்படி ஒரு சமயம்
இயன்றதின் பொருட்டு.

Series Navigation