கவிதை௧ள்

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

செல்வராஜ் ஜெகதீசன்




01
கொஞ்சமும்…

கொஞ்சமும்
எதிர்பார்த்திருக்கவில்லை
தேநீர்க் குவளையை
வைக்கும் ஸ்டாண்டாக
ஒரு கவிதை புத்தகத்தை
வைத்திருப்பார்
அந்த புத்தகக் கடைக்காரர்
என்று.


02
சாயல்…

இரு தளங்களுக்கிடைப்பட்ட
படிக்கட்டுகளில் வைத்து
காதலைச் சொன்ன கணம்
விழிகள் உருட்டி
மருண்ட உன் முகத்தின்
சாயலேதுமின்றி
இருந்தது
பிரிவதற்காய் நாம்
தேர்ந்து கொண்ட ஒரு
பிற்பகல் வேளையில்
மூடிய லிப்டின் கதவுகள்
உள் வாங்கிப்போன
உன் முகம்.

03
உதவும் பொருட்டு…

லிப்டில்
ஏறிய ஒருவனுக்கு
உதவும் பொருட்டு
விரைவாய் மூடும்
பொத்தானை அழுத்தினேன்.
அதுவரை பேசிக்கொண்டிருந்த
அவன் அலைபேசியின்
தொடர்பு விட்டுப் போனது.


Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதை௧ள்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


01
சாஸ்வதம்…

அன்பு
பெரும்வம்பு

ஆசை
அலைக்கழிப்பு

சிற்றின்பம்
சில்லறை அவஸ்தை

பேரின்பம்
பெருங்கனவு

பெண்மனம்
புதைகுழி

பிறவி
பேரவஸ்தை

கலைகள்
காலவிரயம்

மரணம்
சாஸ்வதம்.

o

02

நிலா…
நீ நான் நிலா
நான் நிலா நிலா
நீ நிலா நிலா

அவன் அவள் நிலா
அவன் நிலா நிலா
அவள் நிலா நிலா

நீ அவன் நிலா
நான் அவள் நிலா
நிலா நிலா நிலா.

o


Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதை௧ள்

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


01

எதிர்பாரா ஒரு தருணம்…!
எப்போதும் வாய்ப்பதில்லை.
எதிர்பார்த்த ஒன்று

எதிர்பாரா ஒரு தருணத்தில்

எதிர்ப்படும் வேளை.


02

நானின்றி…!

என்னிடம்

நானில்லை.

உன்வசமும்

நானில்லை

என்றால் வா.

உணர்வுதளம் கடந்து

சும்மா

உரையாடிக் கொண்டிருப்போம்.


03

ஒன்றன்றி…!

ஒன்றில்லை.

ஒன்றுமில்லை.
ஒன்றன்றி
ஒன்றுமே இல்லை.


04.
எத்தனை நாட்கள்…!

பிறந்த நாள்

பேர் வைத்த நாள்

கண்ட நாள்

கல்யாணம் கொண்ட நாள்

பிரிந்த நாள்

சேர்ந்த நாள்

சோக நாள்

சொர்க்கம் போன நாள்

நினைவு நாள்

சோற்றுக்கலையும் வாழ்க்கையில்

சொல்லிக்கொள்ளத்தான்

எத்தனை நாட்கள்.


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி