மனிதன் என்று

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

கவிதா நோர்வே



எம் பெயரை நாம்
கூவுவதில்லை
அடையாளப்படுத்துவது வேறு
அறைகூவல் விடுவது வேறு

சொல்லிக் கொள்வதால்
நீ நீயாக முடியுமா
நான்தான் வானாக இயலுமா
தாழ்வு மனம் புதைத்து
வேர்கள் படர்த்தி
விருட்சம் வளர்

முங்கில் ஒடித்து
பிரம்புகள் செய்தோம்
இனி அதை எடுத்து
துளை இட்டு
இசைக்குழல் செய்வோம்

கொடும் மரணமுற்ற மனிதர்கள்
செதுக்கிய உயிலில்
மனிதனாய் இருக்கச் சொல்லி
மனு இருக்கிறதே
படிக்கவில்லை?

நாய்களும்
நரிகளும்
பூக்களும்,
புதர்களும் போல
நாமும்
உலகின் மனிதர்களாய்
கூடி சமைப்போம்

நாம் தமிழன் என்று
இனியாவது
அவனைச் சொல்லவிடு!

முடியும்!

நீ மனிதன் என்று
பெயர் மாத்து!


kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே