வேத வனம் விருட்சம் 25

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

எஸ்ஸார்சி


வைராக்யம் மூன்றுவகை
வேரில்லாதது முதல்வகை
தோன்றிய காரணம்
தொலையத்
தொலைந்துவிடும் அது.
ஆன்மீகப்பாதைக்கு
ஆதாயம் தாராது
அடுத்து வருவது
ஆழ்ந்த வைராக்யம்
அதி ஆழ்ந்த வைராக்யம்
ஆன்மத்தேடலுக்கு
ஆறு காட்டுவன இரண்டுமே.

மனத்தில் நற்குணம் புகப்புக
விடைபெறும்
ஆளுகைக்குணத்தொடு
அயர்வுக்குணமும்
மனம் தூயதாகி
சுடர் விளக்காய்
ஒளிர்ந்திடும் அமைதியில்.

மனம் காரணமாகும்
பற்றுக்கும்
விடுதலைக்கும்.
ஆளுகை, அயர்வுக்குணங்கள்
பிணைச் சங்கிலிகள்
நற்குணத்தால் நிறைமனம்
விடுதலைக்குத்
துணைநிற்கும் எப்போதும்.

அன்னம்
பிராணன்
மனம்
அறிவு
ஆனந்தம்
ஐந்துத்திரைகள்
மறைக்கும் இவை
அவிழ த்தென்படும் ஆன்மா
கடையக்கிடைத்திடும் வெண்ணை போல.

மனமெழு ஆசைகள்
ஒய
இருப்பின் நிலை உறுதிப்படும்
உச்ச அமைதிவசமாகி
பேர்அறிவு பிடிபடும்.

யானே அது
எதனிலும் என்நிலை விரவி
எதனுள்ளும் உறை பிரக்ஞை யான்
அறிவுத்தீயால்
அழிவுறட்டும் அறியாமை வனம்
மன வலிதொலைத்து
ஆனந்தம் பெறுக
அன்பு குழந்தாய் ஏனோ தாமதம்.

யான் இவ்வுடல்
யான் இவ்வுணர்வு
யான் இம்மனம்
யான் இவ்வறிவு
எனக்கே மகிழ்ச்சி
எனக்கே துயரம்
யானே பிராம்ணன்
யானே வலிவிலி
யானே கருப்பு
யானே செவிடன்
யானே ஏழை
அவள் என் தாரம்
அவன் என் செல்வன்
இது என் வீடு
இவையோடு
இன்னும் பின்னும்
எத்தனை யுண்டோ
விடு விடு விட்டுத்
தூரப்போயேன்
நின்னை அறிவாய் நின்னுளே.

மண் தான்
சட்டியாய்
பஞ்சு ஆடையாய்
ஆன்மமே
அனைத்துமாய்.
நிகழ் அனந்தம்
நின்முன்
ஆய்ந்துத்தெளி
தேர்ந்து ஒர்.

மனம் தன் போக்கில்
திரியத்திரிய
உலகம் அதன்வசம்
மனம் நின் போக்கில்
கொணரக்கொணர
யாதுமாகிக்காண்பாய் நின்னை. ஜ்யோதிர் பிந்து உபநிசத் 4-12


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி