இன்னவகை தெரிந்தெழுவோம்

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

தமிழநம்பி




மூண்டெழுந்த கொந்தளிப்பை முகம்மாற்றித் தணித்துவிடும்
முடிவைக் கொண்டு
தூண்டலினால் காவலரும் துடிப்புவழக் குரைஞரு்மே
துலக்க மின்றி
வேண்டாராய்ப் பகையுணர்வில் வெறுப்புற்று மோதிடவும்
விளைவாய்ப் பல்லோர்
ஆண்டடிதாக் குதல்களுக்கே ஆளானார் அவற்றோடே
அவர்கள் ஊர்தி

காவலரின் கைத்தடிகள் கடுந்தாக்கில் நொறுங்கிவிழ
கலங்கா நின்ற
நாவலராம் வழக்குரைஞர் நனிமிகவே தாக்கமுற
நடுங்கா நெஞ்சின்
கோவமிகக் காவலர்குண் டாந்தடிகள் கட்டடத்தைக்
குறியாய்த் தாக்க
வேவலுற எரிந்ததுகாண் விளைவிலொரு காவலகம்
வெறுப்பி னாலே!

இன்னவகை மோதலினால் எவருக்கே இனிமையென
எண்ணிப் பாரீர்!
முன்னணியில் நின்றிருந்து முனைந்தீழப் போர்நிறுத்த
முழக்கம் செய்தோர்
வன்குரலை ஒடுக்கிடவே வலிந்தங்குக் காவலரை
வரச்செய் தாரே!
இன்னவகை புரிந்தெழுவோம்! ஈழஉற வைக்காக்க
எழுவோம் மீண்டும்!


thamizhanambi44@gmail.com

Series Navigation

தமிழநம்பி

தமிழநம்பி