வேத வனம் விருட்சம் 24

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

எஸ்ஸார்சி


வாழ் முனிகள்

தளைகள் தாண்டி

பெருமகிழ்ச்சிக்கு வசமானோர்

ஆசை

ஆவல்

ஆணவம்

விலகிட

எதனின்றும் தாமே

தள்ளி வாழ்வார்

இழப்புக்கே இடமில்லை

ஒழுக்கமும்

உயர் செயலும்

காலத்தால்தே கனிபவை

வருந்திட வாய்க்காது

ஒம்புக இடையறா நற்செயல். – விசாரபிந்து உபநிசத்-13-14.

கால்களொடு கைகள்

கண்களொடு செவிகள்

பேச்சும் மூச்சும்

எல்லாப்புலனும் வலிமை பெறுக

பிரம்மத்தின் சாதனங்கள்

அவையிங்கு அனைத்துமே

பிரம்மத்தை துறப்பதும்

பிரம்மம் என்னை ஒறுப்பதும்

இல்லை ஆகுக

பிரம்மத்தை யான் மறுத்தல்

பிரம்மம் எனை அறுத்தல்

இல்லை ஆகுக

உபநிடதம் பேசும் நல்லன

என்னுள் எழுந்து

எனதான்மா ஆனந்தமெய்துக.

எழுக அவை என்னுள்

பொலிக அமைதி, அமைதி, அமைதியெங்குமே- ஜ்யோதிர்பிந்து உபநிசத் சாந்தி மந்திரம்.

மாசிலா சுயஞ்சோதி

பிரம்மம் என்பது

மாறிலாதது

காலம் வென்றது

அளவிற்கெட்டா

அகாரணம் அது.

நாம ரூபம் கடந்து

உயர்வும் தாழ்வுமுதறிய

என்றுமுளது.

மனம் வாக்கு

தொட்டுவிடா

எங்குமுள

ஞானவெளி.

அனைத்துள்ளும் ஒளிந்து

அனைத்துமே ஆகிய

ஆன்மப்ப்பொருள்

எதனுள்ளும் எஞ்சிய

எல்லாவற்றின் ஆன்மா

ஒப்பிலி அது

ஏழுகோடி மாமந்திரங்களில்

யானே பிரம்மமாகிறேன்

உச்சத்தின் உச்சம்

ஒயாது ஒதுக

ஒயாது ஆய்க

அய்யமே இல்லை

அணுகளவும்

சித்திக்கும் அப்போதே விடுதலை.. ஜ்யோதிபிந்து உபநிசத் 1-3.

essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி