பாப்லோ நெருடாவின் கவிதைகள் -11 << அடிக்கடி மாறுபடும் ஒருத்தி ! >>
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கண்கள் என்னை விட்டு அவள்
பின்னே சென்றன
கறுத்தப் பெண் ஒருத்தி என்னைக்
கடந்து சென்ற போது !
கருமுத்தால் ஆக்கப் பட்டு
கருந் திராட்சைக் கனிபோல்
இருந்தவள் எனது
குருதியைக் கலக்கி அடித்தாள்
தன் அக்கினி வாலால் !
பின் தொடர்ந்து போவேன் அந்தப்
பெண்டிரை யெல்லாம் !
பொன் கூந்தல் பெண்ணொருத்தி
வெளுத்த தோற்றம் !
தன் கவரும் கொடைகளை அசைத்துத்
தங்கக் குடம் போல் சென்றாள் !
பின்னே சென்றன உடனே
கண்கள் வாய் திறந்து
அலைகள் செல்வது போல் !
முலைகள் தாக்கிய
மின்னலில் பொங்கிடும்
எந்தன் குருதி !
பின் தொடர்ந்து போவேன் அந்தப்
பெண்டிரை யெல்லாம் !
ஆனால் நான் உன்னை விட்டு
அப்பால் இருந்து
காணாமல் உள்ள போது
அகலாமல் ஏங்கும் வேளை
உன்னை நாடிச் செல்லும்
என் உதிரம் !
என் வாய் முத்தங்கள் !
என் கறுப்பழகி நீ ! என் சிவப்பழகி நீ !
நெட்டை மாது ! சின்ன ராணி !
மெலிந்தவளே ! நலிந்தவளே !
இழிந்தவளே ! நீ எனக்கு
எழில் மாது !
உடல் முழுதும் பொன்னால்
வடிக்கப் பட்டவள் நீ !
வெள்ளியில்
வார்க்கப் பட்டவள் நீ !
கோதுமை
உருவாக்கிய கோதை நீ !
மண்ணில்
பண்ணிய பாவை நீ !
தண்ணீரில்
உண்டான பெண்மணி நீ !
கடல் அலைகள் போலிருக்கும்
உடல் அமைந்தவள் நீ !
கரங்கள் அணைத்திட எனக்கு
உருவானவள் நீ !
உதடுகள் முத்தமிட எனக்கு
உரிமை யானவள் நீ !
ஆத்மா தழுவிட எனக்காக
ஆக்கப் பட்டவள் நீ !
+++++++++++++++
பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).
முன்னுரை :
பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.
இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.
1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.
பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.
பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.
1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 18, 2008)]
- சட்டக் கல்லூரியில் இரத்தக் காட்டேரிகள்
- ஒரு அசலான மனுஷன் – என். எஸ். கிருஷ்ணன்
- நூலாய்வு : கனவுச் சந்தை (உலகச் சிறுகதைகள் – எஸ்.ஷங்கரநாராயணன் மொழிபெயர்ப்பு)
- “பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் துவக்கப் புள்ளியாக ஒபாமா”
- நினைவுகளின் தடத்தில் – (21)
- தானத்தில் சிறந்தது உடல்தானம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -5
- நகரத்தின் ஆன்மாக்கள்
- தாகம்
- ஒரு தினக் குறிப்பு
- அப்பாவின் சொத்து
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை
- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 56 எல்லாம் நீ ! எனக்குரியவன் நீ !
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- உறவுச் சங்கிலிகள்
- குட்டி மகளின் ஞாபகம்
- நிழலற்ற பெருவெளி…
- நிலையின்மை
- மானிடவியல்
- மௌனித்த நேசம்
- தீபாவளி 2008
- கடவுளின் காலடிச் சத்தம் – 4 கவிதை சந்நிதி
- எம்.பி.எம்.அஸ்ஹர் என்னும் உன்னத மனிதர்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -11 << அடிக்கடி மாறுபடும் ஒருத்தி ! >>
- இதயம் சிதைந்த இயந்திர மனிதன்
- வேத வனம் விருட்சம் 11 கவிதை
- மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் “அரசியல் பேசுவோம்” நிகழ்ச்சி
- திசைமாறிய பறவைகளின் கூடு
- இந்திய தேசியக் கொடி நிலவில் விழும் உளவியுடன் சந்திரனில் தடமிட்டு இடம் பிடித்தது ! (கட்டுரை : 3)
- ஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்!
- ஒரு பனை வளைகிறது !
- நெருப்பில் காய்ச்ச வேண்டிய பொதுப்புத்தி
- திருகுர் ஆன் மொழிபெயர்ப்பும்,புரிதலும்
- அட்மிஷன்
- ஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு
- “அநங்கம்” மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 36 ச.து.சு.யோகி
- கவிதை௧ள்
- நாம் காலாண்டிதழ்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினைந்து
- ” கண்ணம்மா என்னும் அழகி “
- விஸ்வநாதன் ஆனந்த்
- நனவாகும் கனவு
- ஒபாமா
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- மதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களூக்கு ஒரு பாராட்டு மடல்
- கடலில் வீசப்பட்ட குழந்தை
- கோடி கொடுத்துத் தேடினால்
- பாவலர் பாரதியார் நினைவேந்தி…!
- வரம்புகளை மீறி