இறைமையின் பெயரால்

This entry is part of 24 in the series 20081113_Issue

செம்மதிஇராணுவப்பிரங்கிகளுக்குள்
அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர்
குருதிச்சுனையில்
புதைந்த கவசவண்டிகள்
அப்பாவிகளின் பிணங்களின் மேல்
நகர்த்தப்பமகின்றன
துப்பாக்கிகளின் ஒவ்வோரு தோட்டாக்களிலும்
மனிக உயிர்கள் குடியிருந்தன
நாளைய பகல்கள்
இன்றைய இரவுகளைக் கொடுத்து
வேண்டப்பட்டுக்கொண்டிருந்தன
நாளைய தீபாவளிக்கு
பட்டாசு வெடிக்கும் கனவுடன் துங்கிய
பிஞ்சுகளை
எறிகணைகள் பட்டாசுகளாய்
பிய்த்துப் போகிறது.
குழந்தைகள் வெடிகுண்டுச்சிதறல்களுடன்
விளையாடிக்கொண்டிருந்தனர்
பதுங்கு குழிகளுகுள்
ஒரு தேசம் குடியிருந்தது
வெடிகுண்டுகளுக்குப்பயந்தவையாய்
மழை வெள்ளமும் பதுங்கு குழிக்குள்
பதுங்கிக்கொண்டது
கால்களுக்குக்கீழ் மழை வெள்ளம்
தலைக்குமேல் கந்தக முளையர் கக்கும்
உலோகச்சிதறல்கள்
உவர்ப்பு நீரிலும் சிவப்பு நீரிலும்
கரைந்து போனது ஏதிலிகள் வாழ்வு
அகதிகளின் உணவுத்தட்டுக்களில்
ஆயுதங்கள் இடப்பட்டிருந்தன
பிணங்கள் நிலங்களை
விழுங்கிக்கொண்டிருந்கன
ஆவிகள்போரில் நிற்பதாய்
படைகளின் துணைவியற்கு
சம்பளம் வழங்கப்பட்டது
ஏழைகள் ஏலம்விடப்பட்டனர்
இறைமையின் பேயரால்….

Series Navigation