தாகூரின் கீதங்கள் – 51 மீண்டும் உனக்கு அழைப்பு !

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


காரிருள் சூழ்ந்தது இரவில்
காதலி வெளியேறிய வேளை !
உறங்கிப் போயினர் மற்றவர் !
உசிப்பி அழைத்தேன் அவளை
இரவு நேரத்தில் !
“திரும்பி வா என் கண்மணி !
உறங்கி விட்டது உலகு !
ஒருவரும் பாரார் நீ
ஓடி வருவதை !
ஒன்றை ஒன்று உற்று நோக்கி
விழித்துக் கொண்டுள்ளன
விண்மீன்கள் !”
வசந்த காலம் தவழும் போது
மொட்டு விடும் மரங்கள் !
முகிழ்த்து மலரும் சமயத்தில்
மறுபடி அழைத்தேன் :
“திரும்பி வா என் கண்மணி !
சிறுவர் பூக்களைத் தாறு மாறாய்
வீசிக் கொண்டு
விளையாடி வருகிறார் !

பூத்து விரிந்த ஒரு பூவை
இங்கு நீ வந்து
எடுத்துக் கொண்டால்
இழப்பு எதுவு மில்லை !
சீரழிக்க விழைவோர்
செல்வத்தை இன்னும்
செலவழித்தே வருகிறார் !
விழித்தவர் பேசுவது காதில்
விழுகிறது !
“என் கண்மணி ! திரும்பிவா
அன்பில் மூழ்கியபடித்
தவிக்குது
தாயின் இதயம் !
வாய் முத்தம் வாங்கிட
தாயிடம் நீ
ஓடி வா
யாரும் அதை
மாறாகப் பாரார் !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 29, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா