மலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

தமிழில் : பா.அ.சிவம்



1. தேடல்

இந்த கடற்கரையில்தான்
சந்தித்தோம் …
கிளிஞ்சல்களின் ஓடுகள்
சங்கீத அலைகள்
பால் வெள்ளைப் பாறை

இந்த வனத்தில்தான்
சந்தித்தோம் …
பாசி படர்ந்த கற்கள்
புற்களின் பூக்கள்
நடனக்கார இலைகள் …

இந்த மன ஓரத்தில்தான்
சந்தித்தோம்
தனிமையை உதறி
உணர்ச்சியை கலைந்து
காதலைக் கொண்டாடி
இந்த வலிதான்
மருந்திட்டது ….

2. இரவு பயணி

மீண்டும் நிசப்தத்திற்குத்
திரும்புகிறேன் …
அமைதியில்தான் எல்லாம்
இருக்கிறது ;
அடங்கியும் போகிறது …
இதற்கு முன் நாம் சந்தித்த இடங்களில்
எல்லாம்
பறந்து திறிந்து கொண்டிருக்கிறது
பொத்தி வைக்கப்பட்ட அன்பு …
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறேன்
என்னை நானே
என்று வரை இதுவென ?

மலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI

தமிழில் : பா.அ.சிவம்

Series Navigation

பா.அ.சிவம் , மலேசியா

பா.அ.சிவம் , மலேசியா