தாகூரின் கீதங்கள் – 45 பிரிந்து செல்வோம் !

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இறுதிக் கீதத்தைப் பாடிவிடு !
பிரிந்து செல்வோம்
நம் பாதையில் !
மறந்து விடு
இனிமேல் நமக்கு இல்லாத
இந்த இரவுகளை !
இனிநான் எவளை
இறுக அணைக்க முனைவேன் ?
ஒருபோதும்
கனவுகள் எவரையும்
கைது செய்யா !
ஆசைக் கரங்கள் இனி நெஞ்சோடு
ஆலிங்கனம் செய்யும்
சூனியத்தை !
கீறிப் போகும் அதனால்
என்னிதயம் !

கைகளோடு கைகள் பின்னிக்
கலந்து கொள்ளும் !
கண்களோடு கண்கள் உற்று நோக்கிக்
கவ்விக் கொள்ளும் !
அவ்விதம் காதல் பதிவானது
நம்மிதயங்களில் !
பங்குனி மாத இரவிலே பூரணப்
பொங்கு நிலா !
செவ்வந்திப் பூக்கள் நறுமணம்
கவ்விடும் காற்றில் !
புழுதியில் கிடக்கிறது எனது
புல்லாங்குழல்
புறக்கணிக்கப் பட்டு !
தொடுத்த பூமாலையை நீ இன்னும்
முடிக்க வில்லை !
எளிய கவிதையாய்ப் போனது
எனக்கும் உனக்கும் இருந்த
நேசப் பிணைப்பு !

************

1. The Gardener,
Translated By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 18 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா