காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !

This entry is part of 45 in the series 20080814_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பாலும் கசந்ததடீ ! – சகியே
படுக்கை நொந்ததடீ ! . . .
நாலு வைத்தியரும் -இனிமேல்
நம்புதற் கில்லை என்றார் !

உணவு செல்லவில்லை ! – சகியே
உறக்கம் கொள்ளவில்லை !
மணம் விரும்பவில்லை ! – சகியே
மலர் பிடிக்கவில்லை !

குணம் உறுதியில்லை ! – எதிலும்
குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே – சுகமே
காணக் கிடைத்த தில்லை !

பாரதியார் (கண்ணன் என் காதலன் !)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 32
மருத்துவன் நீதான் !
+++++++++++++++++++++++++++

காதல் பித்து பிடித்துள்ளது
எனக்குத் தோழியரே !
ஒருவருக்கும் அது தெரிய வில்லை !
முள்ளாய்க் குத்துகிறது
என் படுக்கை !
என் நேசன் படுக்கை
வேறிடத்தில்
விரித்துள்ள போது
எப்படித் தூக்கம் வரும்
எனக்கு ?
முள்ளின் தன்மை அறிந்தவர்
ஒருவர்தான்
புண்ணின் வலியை உணர்வார் !
நகை வணிகன் ஒருவனே
நகை மதிப்பை அறிவான் !
இழந்தேன்
என்னரும் ஆபரணத்தை !
அத்துயர் என்னை
வீடு வீடாய்
விரையச் செய்கிறது ! ஆயினும்
என் பித்தை நீக்கிட
எந்த மருத்துவனும்
வந்திலன் !
பிரபுவை அழைக்கிறாள் மீரா
கருமை நிறக் கண்ணா !
மருத்துவன் நீதான்
குணப்படுத்து என்னை !

*****************************
(English Translation By : Jane Hirshfield )

*****************************
(தொடரும்)

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 11 2008)]

Series Navigation