பிளவுகள்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

கவிதா நோர்வே


பிளவுகள்

கறுப்புவானம்

கறுப்பு நாட்கள்

எந்த கனவுமற்ற இரவு

கண்டிருக்கிறாயா

நீ!

வானத்தின் கண்ணீர்

ஏந்தி

சுருண்டு கிடக்கும்

புற்களின் நுனியை

காற்றும் தீண்டாமல்

கடந்து போகிறதே

தெரிகிறதா உனக்கு!

எனக்குள் துவண்டுவிட்ட

மென்மைக்கருகில்

தலைவிரி கோலமாய்

அமர்ந்திருக்கும் காளியின்

அகோரம்

நீ காணவில்லை?

எனது இந்த அவதாரங்களால்

அழியப்போவது

நட்சத்திரக் கனவுகளும்

எமதான நம்பிக்கைளும்;தான்

இன்று ரத்தம் சொட்டும்

என் மார்பை ஆட்கொண்டு

முன்னய நாட்களில்;

நீ தானே வீற்றிருந்தாய்.

உனது புத்தகத்தில

எனது அத்தியாயம்

புன்னகையுடனே முடியட்டும்.

புன்னகையின் ஓரத்தில்;

எட்டிப்பார்க்கும்

கண்ணீர்த்துளிகள்

எனது கண்களிலேயே

காய்ந்து போகட்டும்.


kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே