காற்றினிலே வரும் கீதங்கள் – 33 தனிமைத் தகிப்பிலே !

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா

காற்றினிலே வரும் கீதங்கள் – 33 தனிமைத் தகிப்பிலே !

மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

வானமயில் நீயெனக்கு வண்ணமயில் நானுனக்கு !
பானமடி நீயொனக்கு ! பாண்டமடி நானுகக்கு !
ஞான ஒளி வீசுதடி ! நங்கை நின்ற்ன் சோதிமுகம் !
ஊனமறு நல்லழகே ! ஊறுசுவையே கண்ணம்மா !

பாரதியார் (கண்ணம்மா என் காதலி !)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 33
தனிமைத் தகிப்பிலே !
+++++++++++++++++++++++++++

கொந்தளிக்கும் முகிற் கூட்டம்
குடித்து விட்டுக்
கும்மாளம் போடும் உருண்டு
குப்புற வீழ்ந்து !
ஆயினும்
கண்ணனிட மிருந்து எனக்கு
எந்தச் சேதியும்
ஏந்தி வரவில்லை அவை !
கேட்டாயா
மயிலின் அந்தக் கூக்குரலை ?
செவியில் பட்டதா
தூரத்தில் பாடும் அந்தக்
குயிலின்
துன்பக் கீதம் ?
மின்னல் வெட்டுகிறது
காரிருளில் !
விலக்கப் பட்ட ஒரு மங்கை
நடுங்கிக்
கலங்கிய வண்ணம்
இருக்கிறாள்
இடிமழைக் குளிர்காற்றில் !
என் வாலிபக் காலம்
போகிறது !
மீராவின் இதயம்
கருமேனியான் பின்னே செல்கிறது !
நெஞ்சத்தில் இன்றிரவு
தனிமைத் தகிப்பிலே
வஞ்சக எண்ணம் பாம்பு போல்
தலை தூக்கும் !

*****************************
(English Translation By : Jane Hirshfield )

*****************************
(முற்றும்)

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 18 2008)]

Series Navigation

மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா

மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா

காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பாலும் கசந்ததடீ ! – சகியே
படுக்கை நொந்ததடீ ! . . .
நாலு வைத்தியரும் -இனிமேல்
நம்புதற் கில்லை என்றார் !

உணவு செல்லவில்லை ! – சகியே
உறக்கம் கொள்ளவில்லை !
மணம் விரும்பவில்லை ! – சகியே
மலர் பிடிக்கவில்லை !

குணம் உறுதியில்லை ! – எதிலும்
குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே – சுகமே
காணக் கிடைத்த தில்லை !

பாரதியார் (கண்ணன் என் காதலன் !)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 32
மருத்துவன் நீதான் !
+++++++++++++++++++++++++++

காதல் பித்து பிடித்துள்ளது
எனக்குத் தோழியரே !
ஒருவருக்கும் அது தெரிய வில்லை !
முள்ளாய்க் குத்துகிறது
என் படுக்கை !
என் நேசன் படுக்கை
வேறிடத்தில்
விரித்துள்ள போது
எப்படித் தூக்கம் வரும்
எனக்கு ?
முள்ளின் தன்மை அறிந்தவர்
ஒருவர்தான்
புண்ணின் வலியை உணர்வார் !
நகை வணிகன் ஒருவனே
நகை மதிப்பை அறிவான் !
இழந்தேன்
என்னரும் ஆபரணத்தை !
அத்துயர் என்னை
வீடு வீடாய்
விரையச் செய்கிறது ! ஆயினும்
என் பித்தை நீக்கிட
எந்த மருத்துவனும்
வந்திலன் !
பிரபுவை அழைக்கிறாள் மீரா
கருமை நிறக் கண்ணா !
மருத்துவன் நீதான்
குணப்படுத்து என்னை !

*****************************
(English Translation By : Jane Hirshfield )

*****************************
(தொடரும்)

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 11 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 31 காத்திருக்கிறாள் பிரபுவுக்கு !

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் !
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்
ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் !

நேரம் முழுவதிலும் அப்பாவி தன்னையே – உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் !
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் – பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கம் !

பாரதியார் (கண்ணன் என் காதலன் !)

++++++++++++++++++++++++

காற்றினிலே வரும் கீதங்கள் – 31
காத்திருக்கிறாள் பிரபுவுக்கு !

காதல் வண்ணக்
கறை பூசும் என் உடம்பில்
கிரிதரன் நிறத்தில் !
உலகத்தின் ஐம்புலன் உடுப்பை
அணிந்த போது
கண்கட்டு விளையாட்டுப்
பெண்ணாகக்
களிப்போடு இருந்தேன் !
அரண்மனை வாசியாய்
சீரும் சிறப்பில்
பேருடன் இருந்த போது,
பிறவிக் கடல் நீக்கும்
கிரிதரன் எனது
கரம் பற்றிக் கொண்டான் !
கருமேனியான்
கவினில் மயங்கிப்
பொருளனைத்தும் வழங்கினேன்
அன்னியருக்கு !
காதலனைக் காணாதவர்
கடிதம் எழுதுவர் !
என்னிதயத்தில் குடியிருப்போன்
புகுவதும் இல்லை ! போவதும் இல்லை !
பிரபுவுக்குத் தன்னை
மீரா அர்ப்பணித்து விட்டாள் !
இரவோ பகலோ காத்திருப்பாள்
கிரிதரனுக்கு !

*****************************
(English Translation By : Jane Hirshfield )

*****************************
(தொடரும்)

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 4 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 30 பூவிதழில் சிக்கிய தேனீ !

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

தூண்டிற் புழுவினைப் போல் – வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக – எனது
நெஞ்சம் துடித்ததடீ !
கூண்டுக் கிளியினைப் போல் – தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன் !
வேண்டும் பொருளை எல்லாம் – மனது
வெறுத்து விட்டதடீ !

பாரதியார் (கண்ணன் என் காதலன் !)

++++++++++++++++++++++++

காற்றினிலே வரும் கீதங்கள் – 30
பூதவிதழில் சிக்கிய தேனீ !

++++++++++++++++++++++++

பாதை முழுதும் புதுமை
பொங்கும்
காதலைப் பற்றி
என்ன சொல்வீர் தோழியரே ?
உன்னத மானவனுக்கு
உன் நேசத்தை அளிக்கும் போது
முதற் படியில்
சிதைந்து போவதுன் மேனி !
அடுத்துத் தயாராய் இரு
அவன் உன் சிரசில்
அமர்ந்து கொள்ள !
விளக்கொளியை வட்டமிடும்
விட்டில் பூச்சி போல்
தீயிக்கு இரையாகத்
தயாராகு !

வேட்டையில் வேடனிடம் ஓடி
மாட்டிக் கொள்ளும்
மானாய் வாழ்ந்திடு !
குள்ளப் பறவை
தீக் கங்குகளை விழுங்கும்
நிலவு மேல் கொண்ட
நேசத்துக் காக !
களிப்புடன் மடிவேன்
கடல் நீரை அருக முடியாத
மீனைப் போல் !
தேனீ போல் மாள்வேன்
இனிக்கும் பூவிதழ்கள் மூடிச்
சிக்கிக் கொண்டு !
தன்னைக் கோமகனுக்கு
தாரை வார்த்து
மீரா சொல்கிறாள் :
“ஒற்றைத் தாமரை என்னை
விழுங்கிக் கொள்ளும்
முழுமையாக !”

*****************************
(English Translation By : Jane Hirshfield )

*****************************
(தொடரும்)

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 27 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது !

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மேனி கொதிக்குதடீ ! – தலைசுற்றியே
வேதனை செய்குதடீ !
வானி லிடைத்தை யெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார் !
மோனத் திருக்குதடீ ! – இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே !
நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ ?

பாரதியார் (கண்ணன் என் காதலி !)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 29
வாழ்நாள் குறுகியது !
++++++++++++++++++++++++

மறுபடியும் இதே மனித உடம்பில்
பிறப்பது அபூர்வம் !
புறக்கணித் தெறியாதே
சென்ற பிறப்பினில் பெற்ற
உன் நல்வினைப் பரிசை !
கடந்திடும் வாழ்வு ஒரு நொடியில் !
விழுந்த இலை மீண்டும்
கிளையில் சேராது !
பரவி விரிந்தது
ஆத்மா குடி புகும்
பிறவிப் பெருங்கடல் !
கிரிதரா !
விரைவில் ஏற்றுக் கொள்
என்னை !
எம்மை ஏந்திக் கொண்டு
படகாய் இந்த வாழ்வினைக்
கடக்க உதவுவது
உனது திருப்பெயர் !
பிறவிக் கடல் அலை கடந்திட
முக்தி அடைந்தவர்
ஒரே மொழியைப் பாடுகிறார்
மீராவோ டிணைந்து;
“உறங்கியது போதும் !
விழித்தெழு ! வாழும் நாட்கள்
சிறுத்தவை !”

*****************************
(English Translation By : Jane Hirshfield )
*****************************

(தொடரும்)

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 20, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 28 கண்ணன் என் அரசன் !

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நித்தம் சோற்றினுக் கேவல் செயவந்தேன் !
நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான் !
வித்தை நன்கு கலாதவன் என்னுள்ளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான் ! . . . .
சக்கரத்தை எடுப்ப தொருகணம் !
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் ! . . . .
கண்ணன் எங்கள் அரசன் புகழினைக்
கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன் !

பாரதியார் (கண்ணன் என் அரசன் !)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 28
கண்ணன் என் அரசன் !
++++++++++++++++++++++++

கண்ணுக்கு இனியவன்
என்னாசைக் காதலன் !
பழகிடச் சுவை யானவன் !
மூச்சுக்கே மூச்சானது அவன் விடும்
மூச்சுதான் ! அனைத்துப்
படைப்புக்களும் அவன்
கடைக்கண் நோக்கில் நடப்பவை !
அவனது ஆத்மாதான்
புவி மாந்தர்க் கெல்லாம் ஆத்மா !
புளுகு நிறைந்தது இந்த உலகு !
போலி யானவர் குடிமாந்தர் !
கண்களில் தெரிவ தெல்லாம்
மண்ணில் வெற்றிடம் !
கணவன் மனைவி எனும் பிணைப்பு
போலியாகி விட்டது !
தன் மனைவி யென
என்னை உரிமை கொள்ளும்
உன்னத அரசன்
உமிழ்கிறார் என் பதியின் மீது !

நிஜமான என் மணவாளன்
உலக ஆசனத்தில்
ஒய்யாரமாய் அமர்ந்துள்ளவர் !
சூட்டிய அவர் மணமாலையைப்
பூரிப்போடு அணிந்துள்ள நான்
பொன்னும் பட்டாடையும்
புறக்கணிப்பேன் !
நெற்றியில் அவரிட்ட திலகம் ஏந்தி
புனித முனிவருடன்
பொழுது போக்குகிறேன் !
புனித அவரின் தாமரைப் பாதங்களே
எனது இல்லம் !
மீரா சொல்கிறாள் :
மெய்யான துயர் எதுவென்றால்
மானிட ராய்ப் பிறந்து
மகாப் பிரபுவைச்
சிறிதேனும்
அறியாமல் போவது !

*****************************
(English Translation By : Jane Hirshfield )
*****************************

(தொடரும்)

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 13, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 27 என்னிய நேசனே ! திரும்பி வா !

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

வருவாய், வருவாய், வருவாய் கண்ணா !
வருவாய், வருவாய், வருவாய் !
உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா !
உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா !
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !
கமலத் திருவோ டிணைவாய் கண்ணா !
இணைவாய் எனதா வியிலே கண்ணா !
இதயத் தினிலே அமர்வாய் கண்ணா !

பாரதியார் (வருவாய் கண்ணா !)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 27
என்னிய நேசனே ! திரும்பி வா !
++++++++++++++++++++++++

அந்தோ பிரபு !
எந்தன் காதலை எவரும்
முறிக்க முடியாது !
இறுகியது வைரம் போல்
என் பிணைப்பு
உன்னோடு !
உடைந்திடும் சுத்தியும் அதன்மேல்
அடித்திடும் போது !
என்னிதயம் உன்னுள் புகுந்திடும்
தங்கத்தில்
பொன்முலாம் பூசுவது போல் !
தடாகத்தில் தாமரைப் பூ
மலர்ந்து வருவது போல்
ஒட்டி வாழ்கிறேன்
உன்னோடு !
இரவு பூராவும்
உறங்காத பறவையாய்
நின்னுள்ளே குடியிருப்பேன்
என்னை இழந்த வண்ணம்
வெண்ணிலாக் கடக்கும் போது !
திரும்பி வா
அருமை நேசனே !

*****************************
(English Translation By : Jane Hirshfield )
*****************************

(தொடரும்)

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 7, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 26 சூடான நள்ளிரவுக் கண்ணீர் !

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா ! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம் ! கருகத் திருவுளமோ ?
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள் வளர்ந்த
வண்ண விளக்கி·து ! மடியத் திருவுளமோ ?

பாரதியார் (சுதந்திரப் பயிர்)

+++++++++

கண்கள் உறங்க ஒரு காரண முண்டோ
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே ?
பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார்
பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கிறான் ! . . . .
கண்கள் உறங்கவெனும் காரிய முண்டோ
கண்ணனைக் கையிரண்டும் கட்ட லின்றியே ?

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 26
சூடான நள்ளிரவுக் கண்ணீர் !
++++++++++++++++++++++++

எனதினிய தோழியே ! கேளாய் !
இப்பாதை தான்
இதய வாசல் திறப்பது
இடையூறு தன்னை நீக்கி !
இரவு பூராவும்
கண்ணீர் முத்தமிடும்
கருமேனியன் திருவடிகளில் !
புண்ணிய நீராடிக்
கண்ணனை நெருங்க முடிந்தால்,
மண்ணில் மீனாய்ப் பிறக்க
வேண்டி யிருப்பேன் இப்பிறப்பில் !
காய்கனிக் கொடை மூலம்
தேவனை அடைய முடிந்தால்
புனிதர் யாவரும்
அனுமாராய்ப் பிறக்க வேண்டும் !
இலை தழைகள் அளித்து
தலைவனை அருகலாம் என்றால்
ஆடுகள் அடையும் நிச்சயம்
ஈசனை நமக்கும் முன்பே !
கற்சிலை வழிபாடு
கடவுளை அடையச் செய்யு மெனில்
பல்லாண் டுக்கு முன்பே ஒரு
பாறைக் குன்றைச்
சீராட்டி இருப்பேன் !
மீராபாய் சொல்கிறாள் :
நள்ளிரவுக்
கண்ணீரின் சூடு
அண்ட வைக்கும் தன்னைக்
கடவுள் அருகே !

+++++++

கூக்கூ பறவையே !
மரத்தின்
உச்சக் கிளையில் வந்து நீ
உட்கார்ந்தாய்,
அடிநாதத் தொண்டையில்
இசைநாதம் எழுப்பி !
ஏனிந்தக்
காதல் துடிப்பு
வேதனைப் படுத்துது என்னை ?
ஆறாத
காயத்தில் உப்பிட்டுக்
காதல் கீதம் ஒன்றை நீ
கதறிப் பாடும் போது
காதில் படாது என் குடிசையில்
தூங்கி விட்டேன்
கண்ணயர்ந்து !

+++++++++

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 30, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 25 விலகிச் செல்லாது விதி !

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பிறந்தது மறக்குலத்தில் ! – அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் ! . . . .
நிறந்தனில் கருமை கொண்டான் ! – அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள் !
. . . . .
ஏழைகளைத் தோழமை கொள்வான் ! – செல்வம்
ஏறியவர் தமைக்கண்டு சீறி விழுவான் !
தாழவரும் துன்ப மதிலும், – நெஞ்சத்
தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வம் அளிப்பான் !
நாழிகைக்கோர் புத்தியுடையான் ! – ஒரு
நாளிலிருந்த படிமற்றோர் நாளினி லில்லை !
பாழிடத்தை நாடி இருப்பான் ! – பல
பாட்டினிலும், கதையிலும் நேரம் அழிப்பான் !

பாரதியார் (கண்ணன் என் தந்தை)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 25
விலகிச் செல்லாது விதி !
++++++++++++++++++++++++

எப்போது சந்திப்பேன்
எனது கருத்த கோமானை ?
அனுதினமும்
முடங்கிப் போகிறேன் எனது
கடமைப் பணிகளில்
ஈரேழு மணி நேரம் !
உறக்கத்தில் கிடக்கும்
ஒன்பது தோழியர் எழுந்திங்கு
இன்னும் வந்திலர் !
மகத்துவம் பெற்றது
மனிதப் பிறப்பென
மீரா சொல்கிறாள் !
பிறந்த பின் மாந்தர்
உறக்கத்தில்
வீணாக்கி விடுவர் பொழுதை !
ஒப்படைத்து விடு
உன்னைக்
கருமேனி யானுக்கு !
விலகிச் செல்லாது விதி
தன் பாதை
நழுவ விட்டு !

+++++++++

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 22, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 24 காதல் இல்லையா காசினியில் ?

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஆசை முகமறந்து போச்சே ! – இதை
ஆரிரிடம் சொல் வேனடி தோழி ?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் ! – எனில்
நினைவு முகமறக்க லாமோ ?

தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வைய முழுதுமில்லை தோழி !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 24
காதல் இல்லையா காசினியில் ?
++++++++++++++++++++++++

செவிதனில் கேட்கும் எனக்குத்
தொலைவினில்
குயிலினம் பாடும் காதல் கீதம் !
மயிலினம் முணங்கும்
மறைமொழிகள் !
கூக்கூப் பறவையின்
கூக்குரல்கள் !
வானம் அனைத்தும் பரவி
அடுக்கடுக்காய் மிதக்கும்
கரும் முகில்கள்
பெருமழை பெய்யும்
பேரிடி மின்ன லுடன் !
கருமை நிறத்தோனே !
காதல் என்னும்
நேசம் இல்லையா இந்தக்
காசினியில் ?
ஏனிந்த வேதனை தொடரும்
என்னை ?
காத்திருக்கிறாள் மீரா !
உனதோர்
கடைக்கண் பார்வைக்கு !

+++++++++

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 15, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் ?

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

தூண்டிற் புழுவினைப் போல் – வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக – எனது
நெஞ்சம் துடித்ததடீ !

+++++

உணவு செல்ல வில்லை – சகியே
உறக்கம் கொள்ள வில்லை.
மணம் விரும்ப வில்லை. – சகியே
மலர் பிடிக்க வில்லை.

+++++

பாலும் கசந்ததடீ ! – சகியே
படுக்கை நொந்ததடீ !
கோலக் கிளி மொழியும் – காதில்
குத்த லெடுத்ததடீ !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 23
யாரென் கதையை நம்புவார் ?
++++++++++++++++++++++++

கருமை நிறக் கண்ணா !
உறக்கம் எப்படி வரும் எனக்கு ?
படுக்கை விட்டுநீ அகன்ற பின்
வினாடியும் யுகமாய் நீள்கிறது !
ஒவ்வொரு கணமும்
கடும் வேதனை எழும் புதிதாய் !
மனைவி யில்லை
நானுனக்கு !
காதலன் தேடி வருவானா
காரிருள் வேளையில் ?
வீடுகளில்லை !
விளக்குகள் ஏற்ற வில்லை !
ஆறுதல் சொல்ல எனக்கு
யாருமில்லை !
எனது படுக்கை மீது
இட்டுள்ள மலர்கள்
முட்களாய்க் குத்துகின்றன !
புரண்டு புரண்டு உழல்கிறேன்
இரவு பூராவும் !
காதலன் ஒருவன் பாம்பு போல்
கையினைத் தீண்டி
உடற் முழுதும்
நஞ்சேறி
உயிர் போகு தென்று
யாரெனது
கதையை நம்புவார் ?

+++++++++

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 8, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 22 பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

வேதங்கள் கோத்து வைத்தான் ! அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை !
வேதங்கள் என்று புவியோர் – சொல்லும்
வெறுங்கதைத் திரளில் அவ்வேத மில்லை !
வேதங்கள் என்ற வற்றுள்ளே – அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு !
வேதங்க ளின்றி ஒன்றில்லை ! – இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகள் எல்லாம் !

++++++

துயரில்லை ! மூப்பு மில்லை ! – என்றும்
சோர்வில்லை ! நோயொன்றும் தொடுவ தில்லை !
பயமில்லை ! பரிவொன் றில்லை ! – எவர்
பக்கமும் நின் றெதிர்ப்பக்கம் வாட்டு வதில்லை !
நயமிகத் தெரிந்தவன் காண் – தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான் !

பாரதியார் (கண்ணன் என் தந்தை)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 22
பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !
++++++++++++++++++++++++

கருமை நிறக் கண்ணா !
எனது வேண்டுதல் கேளாய் !
உனது சேவகி நான்.
நினதொரு
தெய்வீகத் தெரிசனம்
பைத்தியமாய் ஆக்கிய தென்னை !
உன் பிரிவு எனதுடலைத்
தின்று வருகிறது !
உன்னால்தான்
நானொரு யோக மாதாய்ப்
போனது !
மறைமுக மாக அறைகளில்
திருநீறைப் பூசி வழிபட்டு
ஊர் ஊராக
நானலைந்து வருகிறேன்
மான் தோலைப் போர்த்திக் கொண்டும்
மேனியை எரித்து
வீணாக்கிக் கொண்டும் !

+++++++

காடு, மேடு சுற்றிச் சுற்றி
நானும்
கானம் பாடி வருகிறேன்
குரலை உயர்த்தி
இரங்கத் தக்க முறையில் !
பிறப்பும் இறப்பும் இல்லாதவனே !
உனது யாசகி
என்னை ஏற்றுக் கொள் !
இன்புற அணைத்து நீ
துன்பத் துக்கு முடிவு கட்டு !
மீரா சொல்கிறாள் :
“எனக்கு மீளும்
பிறப்பையும் இறப்பையும்
துறப்பது உறுதி,
எப்போதும்
கருமேனியான் திருவடிகளை
இறுகப் பற்றினால்.”

+++++++++

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 2, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நாடு முழுதும் சுற்றிநான் – பல
நாட்கள் அலைந்திடும் போதினில் – நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே – தடி
ஊன்றிச் சென்றார் ஓர் கிழவனார் . . . .
என்னுள்ளத் தாசை அறிந்தவர் – மிக
இன்புற் றுரைத்திட லாயினர் – “தம்பி
நின்னுளத் திற்குத் தகுந்தவன் – சுடர்
நித்திய மோனத் திருப்பவன் . . . . கண்ணன்
தன்னைச் சரணென்று போவையேல் – அவன்
சத்தியம் கூறுவன்,” என்றனர்.

பாரதியார் (கண்ணன் என் சற்குரு)

++++++++++++++++++++++++

காற்றினிலே வரும் கீதங்கள் – 21
எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !

கருமை நிறக்கண்ணா ! அடியாள்
உன்னிடம் அடைக்கலம் !
என்னைக் காப்பது
எவ்விதம்
என்று அறிபவன் நீ ஒருவனே !
அறுபத்தெட்டு புண்ணிய தளமனைத்தும்
அலைந்து வந்தேன் தாறுமாறாய் !
ஆயினும் உன்னுடன்
உறவு பூணாத தோல்வியை
ஒப்புக் கொள்ளும்
உணர்வு எனக் கில்லை !
எந்தன் கூக்குரல் கேளாய் !
இந்தப் புவியில் இருக்கும்
எந்தப் பந்தமும்
சொந்தமாய்த் தெரிய வில்லை
எனக்குரிய தென்று !
உனை நம்பி மீரா உன்னிடம்
வந்து விட்டாள் !
செய்வதினி என்ன வென்பதுன்
கைவசம் உள்ளது.
அந்தோ முராரி !
நாமழைக்கும்
பூமியெனும் இந்தக்
கயிற்று முடிச்சி யிலிருந்து
அவிழ்த்து விடு என்னை !

+++++++++

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)
************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 26, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் !

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

இங்கிதனால் யானும்
இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான்,
“இடைச்சாதி நான்” என்றான்.
“மாடு கன்று மேய்த்திடுவேன் !
மக்களை நான் காத்திடுவேன்.
வீடு பெருக்கி
விளக்கேற்றி வைத்திடுவேன். . . . .
காதல் பெரிதெனக்கு !
காசு பெரிதில்லை !” . . . .
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல்
வண்ணமுறக் காக்கின்றான். . . .
எங்கிருந்தோ வந்தான் !
இடைச்சாதி என்று சொன்னான் !
இங்கிவனை யான்பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் !

பாரதியார் (கண்ணன் என் காவலன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 20
ஏழையின் காதலன் !

பாலைவனக் குடிவாசி
படிப்பறி வில்லாதவள் !
பற்களில்
கடித்த மாங்கனி
இனித்தது !
பழக்க வழக்கம்
மிக்க மோசம் ! கீழினத்தவள் !
அழுக்கு மேனி !
ஒழுக்க மில்லாதவள் ! அவள் தின்ற
எச்சிற் கனியை
எடுத்துச் சுவைத்தான்
கோமகன் !
ஏனெனில் நேசிக்கத் தெரிந்தவள்
அந்தக் குடிவாசி !

பகட்டு வாழ்வுக்கும்
பட்டிப் புழுதிக்கும்
முரண் அறியாத அப்பாவி !
வேதம் அறியாதவள் ! ஆயினும்
காதல் அமுதைச் சுவைத்தவள் !
இரதம் தூக்கிச் செல்லும்
அந்தக் குமரியை ! இப்போது
சொர்க்கத்தில் உள்ளாள் இறைவன்
பக்கத்தில்
பேரின்பக் கடலில் மூழ்கி !
ஏழையின் கோமகன்
இரக்கப் படுவான் யார் மீதும் !
மீரா சொல்கிறாள்:
அவளும் தான்
இடையர் குலப் பெண்ணாய்
உதித்தவள்
முன்னைப் பிறப்பில் !

+++++++++

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 18, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான் !

ஆண்டாள் (திருப்பாவை)

காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !

எளியவர் பேணிடும் கோமகன்
என் கனவிலே வந்து
எனை மணந்தார் சகோதரி !
முப்பத்து முக்கோடித் தேவரும் ஆடிப்
பாராட்டுவார்
வருகை தந்து விழாவுக்கு !
கருமேனியான்
கனவிலே வந்தான்
எனது மணமக னாக !
தோரணப் பந்தல்
தோன்றிய தென் கனவிலே !
கைத்தலம் பற்றினோம் சகோதரி !
கனவில் மணந்து
பிரபு, எளியவர் தோழன்,
மீராவைச் சயன அறைக்கு
அணைத்துச் செல்வான் !
முற்பிறப்பின் புனிதச் செயல்
நற்பலன் அளிக்கிறது
பிற்பொழுதில் !

ஆயிரம் நன்றி ஜோதிடரே !
கருநிறத் தான் வருகை தனை
அறிவித் தமைக்கு !
மோகத்தில் கண் மூடும்
ஆத்மா சயன அறை
நோக்கி ஏகும் !
ஐம்புலன்கள் தோழிகளாய்
ஒன்று கூடி
ஒப்பிலா இன்பம் அளிக்க
ஓடிச் செல்லும் !
ஒயில் தோற்றம் கண்டதும்
வேதனை தீரும் !
காதல் மோகம் கனிந்து
தாகம் எழும் !
இன்பக் கடலில் மூழ்கும்
என்னுடல் !

(திருத்தம் செய்யப்பட்டது)

காற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது !

யோகியே ! உன் அந்தரங்க
இரகசியத்தை
அறிய முடியாதவள் நான் !
அங்கங்களில் திருநீறு பூசி,
உத்திராட்ச மாலை கழுத்தில் சூடி,
புனித வேடத்தில்
குகையில் அமர்ந்து தவம் செய்தேன் !
கருமேனியான் மீது
காதல் மோகம் ! அந்தோ இல்லை !
மடியாத அவன்
மன அந்தரங் கத்தைத் தொட
முடியாதவள் நான் !
மீராவுக்கு
எதிர்ப்படுவ தெல்லாம்
விதியின் கை
எழுதி வைத்தவை !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 12, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது !

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் – நீ
கண்டுவர வேணுமடித் தங்கமே தங்கம் !
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்
ஏதெனிலும் செய்வமடித் தங்கமே தங்கம் ! . . . .
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் – அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

++++++++++++++++++++++++

காற்றினிலே வரும் கீதங்கள் – 18
விதி எழுதி வைத்தது !

கருமேனியான் மட்டுமென் கண்களின்
காட்சி தோழீ !
கருமை பொங்கும்
கரிய மேனியில் என்ன மினிமினுப்பு !
இருளின் மயக்கத்திலே மூழ்கித்
தவிக்கிறேன்.
ஆடும் தளங்களில் என்
பாதம் படும்போ தெல்லாம்
மீரா காண்பது
காரிருள் அடர்த்தி
நேர்வழிப் பாதையில் !
காட்டுப் பாதையில்
போவது சுலபம் !

யோகியே ! உனது அந்தரங்க
இரகசியத்தை
அறிய முடியாதவள் நான் !
உறுப்புகளில் திருநீறு பூசி,
உத்திராட்ச மாலை கழுத்தில் சூடி,
புனித வேடத்தில்
குகையில் அமர்ந்து தவம் செய்தேன் !
கருமேனியான் மீது
காதல் மோகம் ! அந்தோ இல்லை !
மடியாத அவன்
மன அந்தரங் கத்தைத் தொட
முடியாதவள் நான் !
மீராவுக்கு
எதிர்ப்படுவ தெல்லாம்
விதியின் கை
எழுதி வைத்தவை !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 6, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் !

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல்
வைர மணிகள் உண்டோ ?
சீர்பெற்று வாழ்வற்கே – உன்னைப்போல்
செல்வம் பிரிது முண்டோ ?

பாரதியார் (கண்ணம்மா என் குழந்தை)
++++++++++++++++++++++++

காற்றினிலே வரும் கீதங்கள் – 17
ஆத்ம தாகம் தீர்ப்பவன் !

கருமேனி யான் மேலிடும்
காதல் முத்திரை இது !
கண்கள் புல்லரிக்க வேண்டும்
ஞான ஒளியுடன்
என் நேசனே !
மணமகள் போல் நகையணிந்தேன்
எனது காதலனை விரைவில்
வரவழைக்க !
சாவதற்கு மட்டும் பிறக்கும்
சாதா மனிதனைத்
தேர்ந் தெடுக்க வில்லை நான் !
உடைக்க முடியாத
வைரக்கல் அவன் !
கருமேனியான்
அருகில் படுக்க விருப்பம் !
பிறவிக்குப் பின்வரும் பிறவியில்
மீராவின்
ஆத்ம தாகம் தீர்ப்பான் !
காத்திருக்கிறாள்
கண்ணன் வருகைக்கு !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 22, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 16 பெண்ணாய் ஏன் பிறக்க வேண்டும் ?

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் – மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம் !
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் – அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே !

பாரதியார் (கண்ணம்மா என் காதலன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 16
பெண்ணாய் ஏன் பிறக்க வேண்டும் ?

வாழ்க்கையில் பிறப்பது எதற்கு ?
மீண்டும் மீண்டும்
பிறப்பது எதற்கு ?
பெண்ணாய்ப்
பிறப்பதற்கு என்ன காரணம்
இருக்கிறது ?
போன பிறப்பில் செய்த
புண்ணிய வினைகள் என்பார் !
நாளுக்கு நாள் ஆயுள் குறையுது !
மீளாது போன வாலிபம் !
கிளையில் ஒடிந்த இலையும்
சுழன்று முறியும் !
வாழ்வெனும் வெறிகொண்ட
சாகரத்தின்
வடிவங்களை நோக்கினால் அமைதி
இலாத திருப்பங்கள் தான் !
அலை அடிப்புகள் அத்தனையும்
இழுத்துச் செல்லும் !
என்னினிய நேசனே !
இந்தத் தோணியை இழுத்துச் செல்
விரைவில்
கரை சேர்ப்பதற்கு !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 22, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு !

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

வான மழை நீயெனக்கு !
வண்ண மயில் நானுனக்கு !
பானமடி நீ யெனக்கு !
பாண்டமடி நானுனக்கு !

பாரதியார் (கண்ணம்மா என் காதலி)

காற்றினிலே வரும் கீதங்கள் – 15
கருமேனியான் வருகை அறிவிப்பு !

மேல் வானத்தின்
மழைக் கால மேக மூட்டம்
நொந்து போன இந்த இதயத்தில்
இன்ப மூட்டி விட்டது !
கால மழை வீழ்ச்சியும்
தூரல் மழை முணுமுணுப்பும்
கருமேனியான் திரும்பி
வருவதைச் சொல்லும் !
பொங்கி எழும் நெஞ்சமே !
நீர் சுமக்கும் வான் முகிலில்
தீ நாக்கு மின்னல் முதலில்
தெறித்து வீசிப் பிறகு
இடி இடிக்கும் !
தடதட வென அடிக்கும்
அசுர மழை !
வேனிற் கால வெக்கையை
விரட்டி விடும் காற்று !
மீரா சொல்கிறாள் :
பொறுத்தது போதும் !
வேளை வந்து விட்டது
வீதியில் நீ
கீதம் பாடிச் செல்ல !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 15, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு !

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

திக்குத் தெரியாத காட்டில் – உனைத்
தேடித் தேடி இளைத் தேனே ! . . . .
கால்கை சோர்ந்து விழலானேன் ! – இரு
கண்ணும் துயில்படர லானேன் !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 14
சிறிய படகுக்கு வழிகாட்டு !

கடலில் மிதந்து செல்ல
இச்சிறிய
படகுக்கு வழிகாட்டு !
பயணக் கட்டணம் தருவதற்குக்
கையில் என்ன உள்ளது ?
மாறும் நம்முலகில் துயரைத் தவிர
வேறில்லை ! அதன்
பிடியிலிருந்து
விடுவிப்பாய் என்னை !
கர்ம வினையின்
எட்டுப் பிணைப்புகள் என்னைக்
கட்டிப் போட்டுள்ளன !
கோடிக் கணக்காய்
கருப்பைகளில் நெளிகின்றன
படைக்கும்
பிறவிகள் எல்லாம் !
கோடிக் கணக்கில் சிசுக்களாய்
வெவ்வேறு வடிவத்தில்
நாமாக
வெளிப்படு கின்றோம் !
மீரா அழுகிறாள் :
கருமை நிறக் கண்ணா !
தூரக் கரையிலே
சேர்த்திடு
சிறிய படகினை
பிறப்பையும் இறப்பையும்
முடிவாக நிறுத்தி !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 8, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நேரம் முழுவதிலும் அப்பாவி தன்னையே – உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் !
தீர ஒரு சொலின்று கேட்டு வந்திட்டால் – பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம் !

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடித் தங்கமே தங்கம் ! . . . .
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான் ? – அவை
யாவும் தெளிவு பெறக் கேட்டுவிடடீ !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 13
காதல் யாசகி நான் !

கருமை நிறக் கண்ணா ! அடியாள்
விரும்புவது உன் காதலில்
ஒரு பகுதியே !
என் குறைகள் என்ன வாயினும்
இன்பக் கடலாக நீ
எனக்குரியவன் ! உலகம்
என்ன தீர்ப்பை எனக்கு வழங்கினும்
என்னிதயத்தை மாற்றாது
எதுவும் ! உனது
வாயிதழ்கள் உதிர்க்கும்
வார்த்தை ஒன்றே போதும் !
பிறவிக்குப் பின்வரும் பிறவிகளில்
உன் காதல் சிறு பங்கை
நான் யாசிப்பவள் !
மீரா சொல்கிறாள்:
கருமை நிறக் கண்ணா !
அரணுக் குள்ளே நீ நுழைந்து
எல்லை தாண்டி
ஏந்திப் போய் விட்டாய்
இந்த மடந்தையை !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 1, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 12 உறங்காமல் விழித்துள்ளவள் !

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பாலும் கசந்ததடீ ! – சகியே
படுக்கை நொந்ததடீ !
கோலக் கிளிமொழியும் – காதில்
குத்தல் எடுத்தடீ !

உணவு செல்ல வில்லை – சகியே
உறக்கம் கொள்ள வில்லை !
மணம் விரும்ப வில்லை ! – சகியே
மலர் பிடிக்க வில்லை !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 12
உறங்காமல் விழித்துள்ளவள் !

உலகம் உறங்கிய போதினும்
விழித்துக் கிடக்கிறாள் தோழீ
ஒதுக்கப் பட்ட
ஒருத்தி
அரண்மனைக் குள்ளே
பலகணிக் கருகே
விண்மீன்களை
எண்ணிக் கொண்டு !
கண்ணீர்த் துளிகளை
யாரோ ஒருத்தி
ஆரமாய்த் தொடுக்கிறாள் நூலில்
கோர்த்து !
உறங்காமல் கிடக்கிறாள்
ஒதுக்கப் பட்ட
ஒருத்தி !
திடீரென மறைந்தது
இரவு !
இன்ப இராப் பொழுதை
இழந்து போனாள்
மீரா !
பெருந்துயர் களைந்திடும்
கருமேனியானைச்
சேராமல் தவிக்கிறாள்
மீரா !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 24, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் !

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் ?
கண்ண என்னகத்தே
கால்வைத்த நாள்முதலாய்,
எண்ணம் விசாரம்
எதுவும் அவன் பொறுப்பாய்
செல்வம், இளமாண்பு
சீர் சிறப்பு, நற்கீர்த்தி
கல்வி, அறிவு, கவிதை சிவயோகம் . . .
ஒளிசேர் நலமனைத்தும்
ஓங்கி வருகின்றன காண் !
கண்ணனை நான் ஆட்கொண்டேன் !
கண்கொண்டேன் !

பாரதியார் (கண்ணன் என் சேவகன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 10
சரண் புகுந்திடுவாள் !

எனக்குரிய கருமேனி யானைத்
எட்டாத இடத்திலே வைத்தார் !
ஆனால் நான்
அவனின்றி வாழ்வேனா ?
சாதுக்களோடு
போவதும் வருவதுமாய்
திரிந்து கொண்டு
பூரிப்போடு வாழ்கிறேன்
கிரிதரனோடு !
உலக எலிப் பொறியில்
பிடி படாது
நடமாடி வருகிறேன் !
உடம்பே என் உடமை ! ஆயினும்
அடகு வைப்பேன் அதனை !
எனது மனது என்றோ
களவு போனது !
மோகத்தில் மூழ்கி
மீரா ஓடுகிறாள்
உளறிடும்
ஊராரை எல்லாம் விட்டு !
சரண் புகுந்திடுவாள்
மரண மில்லா
கருநிறத்தா னோடு !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 17, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 10 நிலையற்ற வாழ்வு !

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

தூண்டிற் புழுவினைப்போல் – வெளியே
சுடர் விளைக்கினைப்போல்
நீண்ட பொழுதாக – எனது
நெஞ்சம் துடித்ததடீ !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 10
நிலையற்ற வாழ்வு !

உலகில் இந்த வாழ்வு
நிலையற்றது !
ஏனந்த பாரத்தைச் சுமக்கிறாய் ?
தந்தை தாய் உறவிலே
சந்ததி பிறக்கும் !
ஆக்கப்படும் வாழ்வுக் கடலில்
தாக்குவது கர்மா !
வெகுமதி யாகப்
பொருள் மட்டும் சேமித்து
வீணாக்குவர் வாழ்வினை
மானிடர் !
வாங்குவதும், விற்பதுவுமான
அவரது வாழ்வு
பயனற்றது !
கீதங்களாய்ப் பாடுகிறேன்
கிரிதரனின்
காதல் வாழ்க்கையை !
பித்தோடு ஆடி வருகிறேன்
சித்தர்க ளோடு !
ஏதும் என்னைப்
பாதிக்கப் போவ தில்லை !
மீரா சொல்கிறாள் :
கார்முகில் வண்ணா ! உன் சக்தி
தூண்டி விட்டு
எல்லையைத்
தாண்டுவது நான்தான் !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 9, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் !

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

புல்லாங் குழல்கொண்டு வருவான் – அமுது

பொங்கித் ததும்பும்நற் கீதம் படிப்பான் !

கள்ளால் மயங்குவது போல – அதைக்

கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம் !

பாரதியார் (கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை)

காற்றினிலே வரும் கீதங்கள் – 9

புல்லாங்குழல் ஊதுவோன் !

ஆற்றங் கரைப் பக்கத்திலே

கேட்டது

புல்லாங் குழலிசை !

உடைந்து போன இதயமே !

புல்லாங் குழல் வாசிப்போன்

விண்ட உனது நெஞ்சைச்

சேர்ப்பான் என்ற

தீர்மான

நம்பிக்கையா உனக்கு ?

ஆற்று நீரும் கருமையானது !

கரிய நிறத்தில் ஆடை அணிந்த

கிரிதரன் இன்னும்

கறுப்பாய்த் தோன்றுகிறான் !

மூங்கில் தண்டு போன்ற

புல்லாங் குழலில்

பொங்கி எழும்

புனித இசைக் கானம்

மீராவின் மனதைக்

கிரங்க வைக்கிறது !

பிரபு கிரிதரா !

தடுமாறும் இந்த ஆத்மாவை

விடுவிப் பாயா இந்தத்

தவிப்பிலிருந்து ?

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire

(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern

Harper Prennial

A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 3, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் -8 கறைப்படுத்தினார் !

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கறைப்படுத்தினார் !

கடுமை உடையதடீ – எந்த நேரமும்
காவலுன் மாளிகையில் !
அடிமை புகுந்த பின்னும் – எண்ணும் போதுநான்
அங்கு வருவதில்லை !
கொடுமை பொறுக்க வில்லை – கட்டுக் காவலும்
கூடிக் கிடக்குதங்கே !
நடுமை அரசியவள் – எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள் !

பாரதியார் (கண்ணம்மா என் காதலி)

காற்றினிலே வரும் கீதங்கள் -8
கறைப்படுத்தினார் !

காக்கை நிறத்திலே என்னைக்
கறைப் படுத்தினான் !
கருமேனியான் கறைப் படுத்தினான் !
களிமண் பாவைக்கு
இருபுறமும் அடி கிடைக்கும்
மத்தளம் போல் !
நர்த்தகிப் பெண்ணாக
சாதுக்கள் முன்
நடனம் ஆடினேன் !
நாட்டுப் புறத்தில் கிறுக்கி
நானென இகழ்ந்தார் !
குடிகாரி, காமக் கிழத்தி என்றெனை
அவமானம் செய்தார் !
இளவரசரைத் தூண்டி விட்டு
கிண்ணத்தில்
நஞ்சிட்டு எனைக் கொல்ல
வஞ்சித்தார் !
ஒருதுளி விடாமல் முழுதும்
அருந்தினேன் !
மீராவின் பிரபு கிரிதரனே
மெய்யாக எனது இளவரசன் !
காக்கை நிறத்திலே என்னைக்
கறைப் படுத்தியவன் !
பிறவிக்குப் பின் பிறவியாக
எனக்குத்தான் அவன்
உரிமை யானவன் !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 25, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் !

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கூண்டுக் கிளியினைப் போல் – தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன் !
வேண்டும் பொருளை யெல்லாம் – மனது
வெறுத்து விட்டதடீ !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

எனது அடங்காத மோகம் !

நான் உனக்கு அடியாள் !
கயிறில் கட்டி விடு என்னை
மீரா உனது அடிமை !
அதிகாலையில் எழுந்து
அமர்ந்தி ருக்கிறாள் தோட்டத்தில்.
பிருந்தாவனக்
காட்டுப் பாதை யெல்லாம்
மீராவின்
கானங்கள் வட்டமிடும் !
பிறவிக்குப் பின் பிறவியாய்த்
தொடரும் என்னை
உடற் காய்ச்சல் ! உனது நினைவுகள் !
அடங்காத மோகம் !
உனைக் காணும் ஆவலில்
உடுத்திக் கொள்வேன் காவி அங்கியை !
மனதை
ஒருமைப் படுத்த
பிருந்தாவனம் செல்வார் சாதுக்கள் !
மாய வித்தைகள் புரிவார்
முனிவர்கள் !
புனிதர் உச்சரிப்பார் தெய்வீகக்
கீர்த்தனைகள் !
மீரா ஆழ்ந்து நேசிப்பவள் பிரபு !
இரகசிய மானவள் !
ஒவ்வோர் இரவிலும் அவள்
மனமுடைந்து போய்க்
காத்துக் கிடக்கிறாள்
ஆற்றங்
கரையிலே அவன்
கண்ணோரக் காட்சிக்கு !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 18, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் -6 கண்ணனுக்குத் காத்திருக்கிறாள் !

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கண்கள் உறங்க ஒரு காரணமுண்டோ
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே ?
பெண்கள் எல்லோரும் அவர்வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த “கண்ணனுக்குத் காத்திருக்கிறாள்” !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

கண்ணனுக்குத் காத்திருக்கிறாள் !

உரையாட மாட்டான் என்னுடன்
கருமேனியான் !
அருமைச் சகோதரி !
பயனில்லாமல் ஏன் இன்னும்
பாழும் உடம்பு மூச்சிழுத்து விடுகிறது ?
அடுத்தோர் இரவும் கடந்தது !
உடுப்பு அங்கியை
இழுப்பார் யாரு மில்லை !
என்னுடன் உரையாட மாட்டான்
கண்ணன் !
ஆண்டுகள் சென்றன, ஆயினும்
அரவம் கேட்க இல்லை !
“இடிமழை பெய்யும் போது
வருவான்,” என்றவர் சொன்னார் !
இடிமின்னல் ஊடுருவிச் செல்லும்
முகிலைக் கிழித்து !
விடியும் வரை துடிக்குது
கடிகாரம்
“டிக்டிக்” எனவே !
பற்றிக் கொள்ளும் பயம் என்னை !
கருமேனியான் அடிமை
மீராவுக்கு
வாழ்நாள் முழுவதும்
ஆறத் துயரத்திலே
நீளும் இரவுகள் !

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 11, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 11, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உணவு செல்ல வில்லை – சகியே
உறக்கம் கொள்ள வில்லை !
மணம் விரும்ப வில்லை – சகியே
மலர் பிடிக்க வில்லை !
குணம் உறுதி யில்லை – எதிலும்
குழப்பம் வந்ததடீ !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

புனித மீராவின் வாழ்க்கை வரலாறு (1498-1550):

பதினைந்தாம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் வாழ்ந்த பக்திப் பாடகி மீராபாய் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்று, இசைக்கலை, பாடல் புனைதல், நாட்டியக் கலை, வில்வித்தை ஆகியவற்றில் கைதேர்ந்து அரச குடும்பத்தில் உதித்த இளவரசி. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலே வாழ்ந்த கவிக்குயில் ஆண்டாளும் மீராவைப் போல் கண்ணன் மீது காதல் கொண்டு காவியப் பாக்களைப் புனைந்தார். மீரா கண்ணன் மீது காதல் கொண்டு நெஞ்சுருகிப் பாடிய பக்திப் பரவசப் பாடல்கள் 500 ஆண்டுகளாய்ப் பாரத நாடெங்கும் பரவிக் கமழ்ந்து வருகின்றன. ஒருமுறை அப்போது தில்லியை ஆண்ட மொகாலாய மன்னர் அக்பரும், அவரது அரசாங்கக் கவிஞர் தான்சேனும் மாறுவேடம் பூண்டு, கல்லையும் உருக்கும் மீராவின் கானங்களைக் கேட்க வந்ததாக வரலாற்றில் அறியப்படுகிறது. அவரது அரிய வாழ்க்கையை வெள்ளித்திரைக் கதையாக எடுத்துக் காலம்சென்ற இசைவாணி எம். எஸ். சுப்புலட்சுமி தமிழிலும், இந்தியிலும் மீராவாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். மீராபாய் சுகமான அரண்மனை வாழ்க்கையைத் துறந்து கண்ணனிடம் மோகங் கொண்டு இசைக்கானங்கள் பாடி ஊர் ஊராய்ப் புனித சாதுக்களுடன் அலைந்து திரிந்தார்.

1498 ஆண்டில் செல்வந்த ராஜபுத்திர அரச குடும்பத்து இளவரசியாக மீரா ஆஜ்மீருக்கு அருகில் இருக்கும் மேர்த்தா என்னும் ஊரில் பிறந்தார். பதினெட்டு வயதில் (1516) மேவார் பட்டத்து இளவரசர் போஜ ராஜரை மணந்தார். ஐந்தாண்டுகள் கழித்துப் போரிலே கணவர் மாண்டு போனார். மீராபாய் மெதுவாக இசைக்கானங்கள் பாடுவதில் ஈடுபட்டு கண்ணன் மீது பக்திப் பரவசம் ஏற்பட்டு, ஆவேசமாகப் பாடி ஆலயங்களில் புனித சாதுக்களுடன் நடமாட ஆரம்பித்தார். அரச குடும்பத்துப் பெண்ணொருத்தி இவ்விதம் வெளியே தனியாகப் பாடிக்கொண்டு பரதேசி போல் வாழ்வது, பட்டத்தை ஏற்றுக் கொண்ட மைத்துனர் ரத்தன் சிங், மற்றும் அடுத்து அரசராகிய அவரது சகோதரர் விக்ரம் சிங் ஆகிய இருவருக்கும் அறவே பிடிக்க வில்லை. ஆயினும் அரசாங்க கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிப் புரட்சி மாதாய் மாறிய மீரா, தான் எண்ணியவாறு விடுதலைக் குயிலாக வெளியேறி பக்திப் பாடகியாக ஊர் ஊராய்த் திரிந்து வந்தார்.

சென்றவிட மெல்லாம் கண்ணன் மீது மீரா இன்னிசைக் கானங்களைப் பாடிக் கொண்டு பெருந்திரளைக் கவர்ந்து பெரும் புகழடைந்து வந்தார். மீராவின் கானங்கள் அவர் இறந்த பிறகுதான் எழுதப்பட்டன. பாடலைக் கேட்டவர், சேமிக்க உதவியவர் அவரது மூலப் பாடல்களை சிறிது மாற்றி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. கலைஞானிகள் மீராவின் கானங்கள் மூலத்திலிருந்து மாற்ற மில்லாதவை என்பதை ஏற்க மறுத்தாலும், மீராவின் பக்திக் கானங்கள் வட இந்தியாவில் இலக்கியத் திறத்தைப் பெற்றுள்ளன. கிடைத்த மொத்தப் பாடல்கள் சுமார் 200 என்பது தெரிய வருகிறது. மீராவின் ஒரே நோக்கம், கண்ணன் மீது கொண்ட மோகக் காதலால் பாடல்களைப் பாடி மகிழ்வது. பிருந்தா வனத்தில் கண்ணனைச் சுற்றிவரும் கோபியரில் ஒருத்தியாகத் தன்னை கற்பனித்துக் கொண்டாள். கண்ணனே தன் கணவன் என்று கானங்களில் பாடி வந்தாள் !

நான்கு முறைகள் மீராவைக் கொல்ல ராஜபுத்திர அரசு முயன்றதாக அறியப் படுகின்றது. முதலில் மீராவின் கணவன் இறந்த பிறகு, உடன்கட்டையில் எரிக்க மீராவைப் பிடிக்க வந்ததாகவும், புனித சாதுக்கள் அவளைக் காப்பாற்றியதாகவும் தெரிகிறது. அவளுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி, அடுத்து நச்சுப் பாம்பை பெட்டியில் விட்டுக் கொல்ல முயற்சி, பிறகு ஊசிமுனைக் கம்பி முட்களைப் படுக்கையில் இட்டுக் கொல்ல முயற்சி செய்ததாகவும் வரலாற்றில் உள்ளன !

மீரா கண்ணனைக் கிரிதர கோபாலா என்று அழைக்கிறாள். வேறோர் இடத்தில் கருமை நிறக் கண்ணா என்று விளிக்கிறாள். காக்கை நிறத்தோனே, மன மோகனா, ஹரி கிருஷ்ணா, கவர்ந்த கள்வனே என்றெல்லாம் கானங்களில் விவரிக்கின்றாள். கண்ணனே தன் கணவன் என்று பாடிப் பாடிக் களிப்படைகிறாள். கடைசியில் மீராவின் மைத்துனர்கள் மனமிறங்கி மீராவின் கீர்த்தியை மெச்சி அவளை மீண்டும் அரண்மனையில் வரவேற்க விரும்பி ஒரு குழுவை அனுப்பினார்கள். அப்போது அவள் அவர்களிடம் கேட்டுக் கொண்டது இதுதான். இறுதியாக ஒருமுறை ஆலயத்தில் காதலன் கண்ணனிடம் அந்த இரவு தங்கிக் கீதம் இசைத்து விட்டுக் காலையில் வருவதாகப் போனவள், பிறகு மீளவே இல்லை. காலையில் அவளது போர்வையும், கூந்தல் முடியும் ஆலயத்தில் கிடந்தனவே தவிர புனித மீரா எப்படிக் காணாமல் போனாள் என்பது மர்மாகப் போய்விட்டது !

**********************

புனித மீராவின் கீதங்கள் : 5 கண்ணனிடம் அடைக்கலம் !

வெள்ளித் தண்டைகளைக்
கணுக்காலில் கட்டித்
துள்ளி நடனம் ஆடினேன் ! நான்
பித்தாகி விட்டே னென்று
பேசிக் கொண்டார் நகர மாந்தர் !
அரசப் பரம்பரைக்கு
இழுக்கு செய்வேன் என்றிகழ்ந்தார்
என் மாமியார் !
நஞ்சைக் கலந்து எனக்கொரு
கிண்ணத்தில் அனுப்பினார்
நாட்டு இளவரசர் !
சிரித்தேன் நான் குடிக்கும் போது !
புரிய வில்லையா அவருக்கு ?
உடம்பும் உள்ளமும்
இழக்கக் கூடியவை அல்ல !
அவ்விரண்டை முன்பே கருமேனியான்
கவ்விக் கொண்டான் !
மீராவின் பிரபு கிரிதரனிடம்
அவள் என்றோ
அடைக்கலம் செய்தவள்
தன்னை !

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (Jan 30, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 4, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 4 கண்ணனுடன் கலந்தேன் !

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை – இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ ?
சின்னஞ் சிறுகுழந்தை என்ற கருத்தோ ? – இங்கு
செய்யத் தகாத செய்கை செய்த வருண்டோ ?

பாரதியார் (கண்ணம்மா என் காதலி)

புனித மீராவின் வாழ்க்கை வரலாறு (1498-1550):

பதினைந்தாம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் வாழ்ந்த பக்திப் பாடகி மீராபாய் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்று, இசைக்கலை, பாடல் புனைதல், நாட்டியக் கலை, வில்வித்தை ஆகியவற்றில் கைதேர்ந்து அரச குடும்பத்தில் உதித்த இளவரசி. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலே வாழ்ந்த கவிக்குயில் ஆண்டாளும் மீராவைப் போல் கண்ணன் மீது காதல் கொண்டு காவியப் பாக
்களைப் புனைந்தார். மீரா கண்ணன் மீது காதல் கொண்டு நெஞ்சுருகிப் பாடிய பக்திப் பரவசப் பாடல்கள் 500 ஆண்டுகளாய்ப் பாரத நாடெங்கும் பரவிக் கமழ்ந்து வருகின்றன. ஒருமுறை அப்போது தில்லியை ஆண்ட மொகாலாய மன்னர் அக்பரும், அவரது அரசாங்கக் கவிஞர் தான்சேனும் மாறுவேடம் பூண்டு, கல்லையும் உருக்கும் மீராவின் கானங்களைக் கேட்க வந்ததாக வரலாற்றில் அறியப்படுகிறது. அவரது அரிய வாழ்க்கையை
ெள்ளித்திரைக் கதையாக எடுத்துக் காலம்சென்ற இசைவாணி எம். எஸ். சுப்புலட்சுமி தமிழிலும், இந்தியிலும் மீராவாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். மீராபாய் சுகமான அரண்மனை வாழ்க்கையைத் துறந்து கண்ணனிடம் மோகங் கொண்டு இசைக்கானங்கள் பாடி ஊர் ஊராய்ப் புனித சாதுக்களுடன் அலைந்து திரிந்தார்.

1498 ஆண்டில் செல்வந்த ராஜபுத்திர அரச குடும்பத்து இளவரசியாக மீரா ஆஜ்மீருக்கு அருகில் இருக்கும் மேர்த்தா என்னும் ஊரில் பிறந்தார். பதினெட்டு வயதில் (1516) மேவார் பட்டத்து இளவரசர் போஜ ராஜரை மணந்தார். ஐந்தாண்டுகள் கழித்துப் போரிலே கணவர் மாண்டு போனார். மீராபாய் மெதுவாக இசைக்கானங்கள் பாடுவதில் ஈடுபட்டு கண்ணன் மீது பக்திப் பரவசம் ஏற்பட்டு, ஆவேசமாகப் பாடி ஆலயங்களில் புனித ச
துக்களுடன் நடமாட ஆரம்பித்தார். அரச குடும்பத்துப் பெண்ணொருத்தி இவ்விதம் வெளியே தனியாகப் பாடிக்கொண்டு பரதேசி போல் வாழ்வது, பட்டத்தை ஏற்றுக் கொண்ட மைத்துனர் ரத்தன் சிங், மற்றும் அடுத்து அரசராகிய அவரது சகோதரர் விக்ரம் சிங் ஆகிய இருவருக்கும் அறவே பிடிக்க வில்லை. ஆயினும் அரசாங்க கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிப் புரட்சி மாதாய் மாறிய மீரா, தான் எண்ணியவாறு விடுதலைக் குய
லாக வெளியேறி பக்திப் பாடகியாக ஊர் ஊராய்த் திரிந்து வந்தார்.

சென்றவிட மெல்லாம் கண்ணன் மீது மீரா இன்னிசைக் கானங்களைப் பாடிக் கொண்டு பெருந்திரளைக் கவர்ந்து பெரும் புகழடைந்து வந்தார். மீராவின் கானங்கள் அவர் இறந்த பிறகுதான் எழுதப்பட்டன. பாடலைக் கேட்டவர், சேமிக்க உதவியவர் அவரது மூலப் பாடல்களை சிறிது மாற்றி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. கலைஞானிகள் மீராவின் கானங்கள் மூலத்திலிருந்து மாற்ற மில்லாதவை என்பதை ஏற்க மறுத்தா
லும், மீராவின் பக்திக் கானங்கள் வட இந்தியாவில் இலக்கியத் திறத்தைப் பெற்றுள்ளன. கிடைத்த மொத்தப் பாடல்கள் சுமார் 200 என்பது தெரிய வருகிறது. மீராவின் ஒரே நோக்கம், கண்ணன் மீது கொண்ட மோகக் காதலால் பாடல்களைப் பாடி மகிழ்வது. பிருந்தா வனத்தில் கண்ணனைச் சுற்றிவரும் கோபியரில் ஒருத்தியாகத் தன்னை கற்பனித்துக் கொண்டாள். கண்ணனே தன் கணவன் என்று கானங்களில் பாடி வந்தாள் !

நான்கு முறைகள் மீராவைக் கொல்ல ராஜபுத்திர அரசு முயன்றதாக அறியப் படுகின்றது. முதலில் மீராவின் கணவன் இறந்த பிறகு, உடன்கட்டையில் எரிக்க மீராவைப் பிடிக்க வந்ததாகவும், புனித சாதுக்கள் அவளைக் காப்பாற்றியதாகவும் தெரிகிறது. அவளுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி, அடுத்து நச்சுப் பாம்பை பெட்டியில் விட்டுக் கொல்ல முயற்சி, பிறகு ஊசிமுனைக் கம்பி முட்களைப் படுக்கையில் இட
டுக் கொல்ல முயற்சி செய்ததாகவும் வரலாற்றில் உள்ளன !

மீரா கண்ணனைக் கிரிதர கோபாலா என்று அழைக்கிறாள். வேறோர் இடத்தில் கருமை நிறக் கண்ணா என்று விளிக்கிறாள். காக்கை நிறத்தோனே, மன மோகனா, ஹரி கிருஷ்ணா, கவர்ந்த கள்வனே என்றெல்லாம் கானங்களில் விவரிக்கின்றாள். கண்ணனே தன் கணவன் என்று பாடிப் பாடிக் களிப்படைகிறாள். கடைசியில் மீராவின் மைத்துனர்கள் மனமிறங்கி மீராவின் கீர்த்தியை மெச்சி அவளை மீண்டும் அரண்மனையில் வரவேற்க விரும்ப
ஒரு குழுவை அனுப்பினார்கள். அப்போது அவள் அவர்களிடம் கேட்டுக் கொண்டது இதுதான். இறுதியாக ஒருமுறை ஆலயத்தில் காதலன் கண்ணனிடம் அந்த இரவு தங்கிக் கீதம் இசைத்து விட்டுக் காலையில் வருவதாகப் போனவள், பிறகு மீளவே இல்லை. காலையில் அவளது போர்வையும், கூந்தல் முடியும் ஆலயத்தில் கிடந்தனவே தவிர புனித மீரா எப்படிக் காணாமல் போனாள் என்பது மர்மாகப் போய்விட்டது !

**********************

புனித மீராவின் கீதங்கள் : 4
கண்ணனுடன் கலந்தேன் !

கருமேனியான் நிறம் ஒன்றாய்க்
கலந்து கொண்டது
மீராவின் உடம்பில் !
பிற நிறம் யாவும் கழுவப் பட்டன !
கண்ணனுடன் உறவு !
உண்ணும் உணவு சிறிதளவு !
வழிபடும் போது என் விரல்
சுற்றும் உத்திராட்சைக் கொட்டைகள்
செந்நிறப் பூக்கள்,
முத்துக்கள் போன்றவை !
நெற்றி வளையம்
மோதிரம் பெண்மைக்குப்
போதிய அடையாளச் சின்னங்கள் !

முன்பு குருநாதர் உபதே சித்தது :
எவர் என்னை ஏற்றாலும் சரி,
எதிர்த் தாலும் சரி,
இராப் பகலாய் நான்
கிரிதரன்
ஒருவனைப் புகழ்வேன்.
நான் தேர்ந்தெடுத்த பாதை
நூற்றாண் டுகளாய் உன்னத
மானிடர் பின்பற்றியது !
பணத்தைக்
களவாட வில்லை நான் !
எவரையும்
காயப் படுத்த வில்லை நான் !
என்ன தவறுக்கு
என்னைக் குற்றம் சுமத்துவாய் நீ ?
யானை முதுகுச் சவாரியில்
அசைந்த என்னை இப்போது ஏன்
கழுதைமேல்
ஏறிடச் சொல்கிறாய் ?
கவனமாய்ப் பேசு !

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (Jan 30, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 28, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

புனித மீராவின் கீதங்கள் : 1
கடைவீதியில் வாங்கிய கருமேனியான் !

கடைவீதிக்குச் சென்று, நண்பனே !
கருமேனி யானை வாங்கி வந்தேன் !
களவெனச் சொல்லட்டும் !
ஏமாற்று எனச் சொல்லட்டும் !
முரசடித்து வாங்கி வந்தேன்
கருப்பெனச் சொல்லட்டும் !
வெளுப்பெனச் சொல்லட்டும் !
பாரமெனச் சொல்லட்டும் !
பளுவில்லை எனச் சொல்லட்டும் !
தராசில் நிறுத்தே வாங்கி வந்தேன் !
ஈடாகத் தந்தேன் என் இல்வாழ்வை !
என் நகர வாழ்வை ! என் நகைகள் எல்லாம் !
மீரா சொல்கிறாள்:
பிரபு கிரிதரன் தன் கணவன் என்று !
உறங்கும் போது அருகில் இரு,
உறுதி சொல்ல வில்லையா
முன் பிறப்பில் நீ எனக்கு ?

(ஹிந்தி மூலம் : ஜடாயு)
(ஆங்கில மூலம் : ராபர்ட் பிலை)

புனித மீராவின் கீதங்கள் : 2
என்னைப் பிரிந்து செல்லாதே !

விட்டுச் செல்லாதே ! விட்டுச் செல்லாதே !
தொட்டுத் தொழுவேன்
நின்னிரு பாதங்களை !
என்னை அர்ப்பணம் செய்தேன்
உன்னிடமே !
பக்திப் பாதைக்குத்
திக்குத் தெரிய வில்லை
எவருக்கும் !
எங்கு செல்வதென
எனக்கொரு வழிகாட்டு !
எந்தன் உடலை ஓர்
சந்தனக் கட்டு
வாசனை வத்தியாய் மாற்றிட
ஆசை எனக்கு !
தீயால் வத்தியை ஏற்றிவை !
சாய்ந்து நான் வீழ்ந்து
சாம்பலாய்ப் போன பிறகு என்
தூசியை உன் மேனியில்
பூசிக்கொள் !
மீரா சொல்கிறாள்:
பிரபு கிரிதரா !
என்னிடம் உள்ளது ஒரு
மின்மினித் தீபம் !
அதனைப்
பின்னிக் கொள்ள விழைவேன்
உன் ஒளியுடன் !

(ஹிந்தி மூலம் : ஜடாயு)
(ஆங்கில மூலம் : ராபர்ட் பிலை)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு !

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன் !
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன் !
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன் !
சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன் !

பாரதியார் (கண்ணம்மா என் காதலி)

புனித மீராவின் வாழ்க்கை வரலாறு (1498-1550):

பதினைந்தாம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் வாழ்ந்த பக்திப் பாடகி மீராபாய் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்று, இசைக்கலை, பாடல் புனைதல், நாட்டியக் கலை, வில்வித்தை ஆகியவற்றில் கைதேர்ந்து அரச குடும்பத்தில் உதித்த இளவரசி. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலே வாழ்ந்த கவிக்குயில் ஆண்டாளும் மீராவைப் போல் கண்ணன் மீது காதல் கொண்டு காவியப் பாக்களைப் புனைந்தார். மீரா கண்ணன் மீது காதல் கொண்டு நெஞ்சுருகிப் பாடிய பக்திப் பரவசப் பாடல்கள் 500 ஆண்டுகளாய்ப் பாரத நாடெங்கும் பரவிக் கமழ்ந்து வருகின்றன. ஒருமுறை அப்போது தில்லியை ஆண்ட மொகாலாய மன்னர் அக்பரும், அவரது அரசாங்கக் கவிஞர் தான்சேனும் மாறுவேடம் பூண்டு, கல்லையும் உருக்கும் மீராவின் கானங்களைக் கேட்க வந்ததாக வரலாற்றில் அறியப்படுகிறது. அவரது அரிய வாழ்க்கையை வெள்ளித்திரைக் கதையாக எடுத்துக் காலம்சென்ற இசைவாணி எம். எஸ். சுப்புலட்சுமி தமிழிலும், இந்தியிலும் மீராவாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். மீராபாய் சுகமான அரண்மனை வாழ்க்கையைத் துறந்து கண்ணனிடம் மோகங் கொண்டு இசைக்கானங்கள் பாடி ஊர் ஊராய்ப் புனித சாதுக்களுடன் அலைந்து திரிந்தார்.

1498 ஆண்டில் செல்வந்த ராஜபுத்திர அரச குடும்பத்து இளவரசியாக மீரா ஆஜ்மீருக்கு அருகில் இருக்கும் மேர்த்தா என்னும் ஊரில் பிறந்தார். பதினெட்டு வயதில் (1516) மேவார் பட்டத்து இளவரசர் போஜ ராஜரை மணந்தார். ஐந்தாண்டுகள் கழித்துப் போரிலே கணவர் மாண்டு போனார். மீராபாய் மெதுவாக இசைக்கானங்கள் பாடுவதில் ஈடுபட்டு கண்ணன் மீது பக்திப் பரவசம் ஏற்பட்டு, ஆவேசமாகப் பாடி ஆலயங்களில் புனித சாதுக்களுடன் நடமாட ஆரம்பித்தார். அரச குடும்பத்துப் பெண்ணொருத்தி இவ்விதம் வெளியே தனியாகப் பாடிக்கொண்டு பரதேசி போல் வாழ்வது, பட்டத்தை ஏற்றுக் கொண்ட மைத்துனர் ரத்தன் சிங், மற்றும் அடுத்து அரசராகிய அவரது சகோதரர் விக்ரம் சிங் ஆகிய இருவருக்கும் அறவே பிடிக்க வில்லை. ஆயினும் அரசாங்க கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிப் புரட்சி மாதாய் மாறிய மீரா, தான் எண்ணியவாறு விடுதலைக் குயிலாக வெளியேறி பக்திப் பாடகியாக ஊர் ஊராய்த் திரிந்து வந்தார்.

சென்றவிட மெல்லாம் கண்ணன் மீது மீரா இன்னிசைக் கானங்களைப் பாடிக் கொண்டு பெருந்திரளைக் கவர்ந்து பெரும் புகழடைந்து வந்தார். மீராவின் கானங்கள் அவர் இறந்த பிறகுதான் எழுதப்பட்டன. பாடலைக் கேட்டவர், சேமிக்க உதவியவர் அவரது மூலப் பாடல்களை சிறிது மாற்றி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. கலைஞானிகள் மீராவின் கானங்கள் மூலத்திலிருந்து மாற்ற மில்லாதவை என்பதை ஏற்க மறுத்தாலும், மீராவின் பக்திக் கானங்கள் வட இந்தியாவில் இலக்கியத் திறத்தைப் பெற்றுள்ளன. கிடைத்த மொத்தப் பாடல்கள் சுமார் 200 என்பது தெரிய வருகிறது. மீராவின் ஒரே நோக்கம், கண்ணன் மீது கொண்ட மோகக் காதலால் பாடல்களைப் பாடி மகிழ்வது. பிருந்தா வனத்தில் கண்ணனைச் சுற்றிவரும் கோபியரில் ஒருத்தியாகத் தன்னை கற்பனித்துக் கொண்டாள். கண்ணனே தன் கணவன் என்று கானங்களில் பாடி வந்தாள் !

நான்கு முறைகள் மீராவைக் கொல்ல ராஜபுத்திர அரசு முயன்றதாக அறியப் படுகின்றது. முதலில் மீராவின் கணவன் இறந்த பிறகு, உடன்கட்டையில் எரிக்க மீராவைப் பிடிக்க வந்ததாகவும், புனித சாதுக்கள் அவளைக் காப்பாற்றியதாகவும் தெரிகிறது. அவளுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி, அடுத்து நச்சுப் பாம்பை பெட்டியில் விட்டுக் கொல்ல முயற்சி, பிறகு ஊசிமுனைக் கம்பி முட்களைப் படுக்கையில் இட்டுக் கொல்ல முயற்சி செய்ததாகவும் வரலாற்றில் உள்ளன !

மீரா கண்ணனைக் கிரிதர கோபாலா என்று அழைக்கிறாள். வேறோர் இடத்தில் கருமை நிறக் கண்ணா என்று விளிக்கிறாள். காக்கை நிறத்தோனே, மன மோகனா, ஹரி கிருஷ்ணா, கவர்ந்த கள்வனே என்றெல்லாம் கானங்களில் விவரிக்கின்றாள். கண்ணனே தன் கணவன் என்று பாடிப் பாடிக் களிப்படைகிறாள். கடைசியில் மீராவின் மைத்துனர்கள் மனமிறங்கி மீராவின் கீர்த்தியை மெச்சி அவளை மீண்டும் அரண்மனையில் வரவேற்க விரும்பி ஒரு குழுவை அனுப்பினார்கள். அப்போது அவள் அவர்களிடம் கேட்டுக் கொண்டது இதுதான். இறுதியாக ஒருமுறை ஆலயத்தில் காதலன் கண்ணனிடம் அந்த இரவு தங்கிக் கீதம் இசைத்து விட்டுக் காலையில் வருவதாகப் போனவள், பிறகு மீளவே இல்லை. காலையில் அவளது போர்வையும், கூந்தல் முடியும் ஆலயத்தில் கிடந்தனவே தவிர புனித மீரா எப்படிக் காணாமல் போனாள் என்பது மர்மாகப் போய்விட்டது !

**********************

புனித மீராவின் கீதங்கள் : 3
மூச்சு விடுவதே பெரும்பாடு !

ஏதோ ஒருகரம் நீண்டு எனது
கண்களின் ஒளியைக் கைப் பற்றும் !
கவர்ச்சி எழும்கரு மேனியின் மீது,
கருமேனி யான் கூந்தலின் மீது !
பிழைத்தி ருப்பதே பெரும்பணி எனக்கு !
நாடிவரும் என்னகம் நாட்டியத் திறமை !
நிலவுபோல் தெரியும் மிடுக்குள அவன்முகம்.
முறுவல் புரியக் கண்டேன் ஒருபுறம் !
மென்மைக் குரலில் மீண்டும் மறைவாய்
என்னிடம் சொல்வர் என் குடும் பத்தார் :
“என்றுமே அவனைப் பாராய்” எனவே.
விடுதலை பெற்றவை எனதிரு விழிகள் !
விதிகளைக் கேட்டால் வெடித்துச் சிரிக்கும் !
மீராவின் விழிகள் என்றவை அறியும் !
எதையும் சுமக்கும் தோள்கள் எனக்கு !
எவ்விதப் புகாரும் அசைக்கா தென்னை !
மீரா கேட்கிறாள் :
கிரிதரன் வலுவிலா தெப்படி வாழ்வேன் ?

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (Jan 30, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 22, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 2 என்னைப் பிரிந்து செல்லாதே !

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எண்ணி எண்னிப் பார்த்தேன் – அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் – அங்ஙனே
கண்ணின்முன் நின்றதடி !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

புனித மீராவின் வாழ்க்கை வரலாறு (1498-1550):

பதினைந்தாம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் வாழ்ந்த பக்திப் பாடகி மீராபாய் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்று, இசைக்கலை, பாடல் புனைதல், நாட்டியக் கலை, வில்வித்தை ஆகியவற்றில் கைதேர்ந்து அரச குடும்பத்தில் உதித்த இளவரசி. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலே வாழ்ந்த கவிக்குயில் ஆண்டாளும் மீராவைப் போல் கண்ணன் மீது காதல் கொண்டு காவியப் பாக்களைப் புனைந்தார். மீரா கண்ணன் மீது காதல் கொண்டு நெஞ்சுருகிப் பாடிய பக்திப் பரவசப் பாடல்கள் 500 ஆண்டுகளாய்ப் பாரத நாடெங்கும் பரவிக் கமழ்ந்து வருகின்றன. அவரது அரிய வாழ்க்கையை வெள்ளித்திரைக் கதையாக எடுத்துக் காலம் சென்ற இசைவாணி எம். எஸ். சுப்புலட்சுமி தமிழிலும், இந்தியிலும் மீராவாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். மீராபாய் சுகமான அரண்மனை வாழ்க்கையைத் துறந்து கண்ணனிடம் மோகங் கொண்டு இசைக்கானங்கள் பாடி ஊர் ஊராய்ப் புனித சாதுக்களுடன் அலைந்து திரிந்தார்.

1498 ஆண்டில் செல்வந்த ராஜபுத்திர அரச குடும்பத்து இளவரசியாக மீரா ஆஜ்மீருக்கு அருகில் இருக்கும் மேர்த்தா என்னும் ஊரில் பிறந்தார். பதினெட்டு வயதில் (1516) மேவார் பட்டத்து இளவரசர் போஜ ராஜரை மணந்தார். ஐந்தாண்டுகள் கழித்துப் போரிலே கணவர் மாண்டு போனார். மீராபாய் மெதுவாக இசைக்கானங்கள் பாடுவதில் ஈடுபட்டு கண்ணன் மீது பக்திப் பரவசம் ஏற்பட்டு, ஆவேசமாகப் பாடி ஆலயங்களில் புனித சாதுக்களுடன் நடமாட ஆரம்பித்தார். அரச குடும்பத்துப் பெண்ணொருத்தி இவ்விதம் வெளியே தனியாகப் பாடிக் கொண்டு பரதேசி போல் வாழ்வது, பட்டத்தை ஏற்றுக் கொண்ட மைத்துனர் ரத்தன் சிங், மற்றும் அடுத்து அரசராகிய அவரது சகோதரர் விக்ரம் சிங் ஆகிய இருவருக்கும் அறவே பிடிக்க வில்லை. ஆயினும் அரசாங்க கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிப் புரட்சி மாதாய் மாறிய மீரா, தான் எண்ணியவாறு விடுதலைக் குயிலாக வெளியேறி பக்திப் பாடகியாக ஊர் ஊராய்த் திரிந்து வந்தார்.

சென்றவிட மெல்லாம் கண்ணன் மீது மீரா இன்னிசைக் கானங்களைப் பாடிக் கொண்டு பெருந்திரளைக் கவர்ந்து பெரும் புகழடைந்து வந்தார். மீராவின் கானங்கள் அவர் இறந்த பிறகுதான் எழுதப்பட்டன. பாடலைக் கேட்டவர், சேமிக்க உதவியவர் அவரது மூலப் பாடல்களை சிறிது மாற்றி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. கலைஞானிகள் மீராவின் கானங்கள் மூலத்திலிருந்து மாற்ற மில்லாதவை என்பதை ஏற்க மறுத்தாலும், மீராவின் பக்திக் கானங்கள் வட இந்தியாவில் இலக்கியத் திறத்தைப் பெற்றுள்ளன. கிடைத்த மொத்தப் பாடல்கள் சுமார் 200 என்பது தெரிய வருகிறது.
மீராவின் ஒரே நோக்கம், கண்ணன் மீது கொண்ட மோகக் காதலால் பாடல்களைப் பாடி மகிழ்வது. பிருந்தா வனத்தில் கண்ணனைச் சுற்றிவரும் கோபியரில் ஒருத்தியாகத் தன்னை கற்பனித்துக் கொண்டாள். கண்ணனே தன் கணவன் என்று கானங்களில் பாடி வந்தாள் !

நான்கு முறைகள் மீராவைக் கொல்ல ராஜபுத்திர அரசு முயன்றதாக அறியப் படுகின்றது. முதலில் மீராவின் கணவன் இறந்த பிறகு, உடன்கட்டையில் எரிக்க மீராவைப் பிடிக்க வந்ததாகவும், புனித சாதுக்கள் அவளைக் காப்பாற்றியதாகவும் தெரிகிறது. அவளுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி, அடுத்து நச்சுப் பாம்பை பெட்டியில் விட்டுக் கொல்ல முயற்சி, பிறகு ஊசிமுனைக் கம்பி முட்களைப் படுக்கையில் இட்டுக் கொல்ல முயற்சி செய்ததாகவும் வரலாற்றில் உள்ளன !

மீரா கண்ணனைக் கிரிதர கோபாலா என்று அழைக்கிறாள். வேறோர் இடத்தில் கருமை நிறக் கண்ணா என்று விளிக்கிறாள். காக்கை நிறத்தோனே, மன மோகனா, ஹரி கிருஷ்ணா, கவர்ந்த கள்ளனே என்றெல்லாம் கானங்களில் விவரிக்கின்றாள். கண்ணனே தன் கணவன் என்று பாடிப் பாடிக் களிப்படைகிறாள். கடைசியில் மீராவின் மைத்துனர்கள் மனமிறங்கி மீராவின் கீர்த்தியை மெச்சி அவளை மீண்டும் அரண்மனையில் வரவேற்க விரும்பி ஒரு குழுவை அனுப்பினார்கள். அப்போது அவள் அவர்களிடம் கேட்டுக் கொண்டது இதுதான். இறுதியாக ஒருமுறை ஆலயத்தில் காதலன் கண்ணனிடம் அந்த இரவு தங்கிக் கீதம் இசைத்து விட்டுக் காலையில் வருவதாகப் போனவள், பிறகு மீளவே இல்லை. காலையில் அவளது போர்வையும், கூந்தல் முடியும் ஆலயத்தில் கிடந்தனவே தவிர புனித மீரா எப்படிக் காணாமல் போனாள் என்பது மர்மாகப் போய்விட்டது !

**********************

என்னைப் பிரிந்து செல்லாதே !

புனித மீராவின் கீதங்கள் : 2

விட்டுச் செல்லாதே ! விட்டுச் செல்லாதே !
தொட்டுத் தொழுவேன்
நின்னிரு பாதங்களை !
என்னை அர்ப்பணம் செய்தேன்
உன்னிடமே !
பக்திப் பாதைக்குத்
திக்குத் தெரிய வில்லை
எவருக்கும் !
எங்கு செல்வதென
எனக்கொரு வழிகாட்டு !
எந்தன் உடலை ஓர்
சந்தனக் கட்டு
வாசனை வத்தியாய் மாற்றிட
ஆசை எனக்கு !
தீயால் வத்தியை ஏற்றிவை !
சாய்ந்து நான் வீழ்ந்து
சாம்பலாய்ப் போன பிறகு என்
தூசியை உன் மேனியில்
பூசிக்கொள் !
மீரா சொல்கிறாள்:
மலைகளைத் தூக்கு பவனே !
என்னிடம் உள்ளதோர்
மின்மினித் தீபம் !
அதனைப்
பின்னிக் கொள்ள விழைவேன்
உன் ஒளியுடன் !

(ஆங்கிலத்தில் : ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.
2. Mira Bhai By : Swami Sivananda (Jan 30, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 14, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கீதங்களில் மூழ்கிப் போய் நான்
சாதுக்களுடன் அலைகிறேன்
வீதியின் வழியே !
எதையும் களவாட வில்லை !
எவரையும் காயப் படுத்த வில்லை !
யாரென்னைப் புறக்கணிப்பார் ?
யானை மீதிருந்து கீழே
நானிறங்கிக் கழுதை முதுகில்
ஏறுவேன் என்று நீ
நினைக்கிறாயா ?

புனித மீரா கானங்கள் (1498-1550)

வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்தினில் எனைக் காணடி என்றான்;
கண்கள் உறங்கல் எனும் காரியமுண்டோ
கண்ணனைக் கையிரண்டும் கட்டலின்றியே ?

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

புனித மீராவின் வாழ்க்கை வரலாறு :

பதினைந்தாம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் வாழ்ந்த பக்திப் பாடகி மீராபாய் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்று, இசைக்கலை, பாடல் புனைதல், நாட்டியக் கலை, வில்வித்தை ஆகியவற்றில் கைதேர்ந்து அரச குடும்பத்தில் உதித்த இளவரசி. அவள் கண்ணன்
மீது காதல் கொண்டு நெஞ்சுருகிப் பாடிய பக்திப் பரவசப் பாடல்கள் 500 ஆண்டுகளாய்ப் பாரத நாடெங்கும் பரவிக் கமழ்கின்றன. அவரது அரிய வாழ்க்கையை வெள்ளித்திரைக் கதையாக எடுத்துக் காலம்சென்ற இசைவாணி எம். எஸ். சுப்புலட்சுமி தமிழிலும், இந்தியிலும் மீராவாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். மீராபாய் சுகமான அரண்மனை வாழ்க்கையைத் துறந்து கண்ணனிடம் மோகங் கொண்டு இசைக்கானங்கள் பாடி ஊர் ஊராய்ப் புனித சாதுக்களுடன் அலைந்து திரிந்தார்.

1498 ஆண்டில் செல்வந்த ராஜபுத்திர அரச குடும்பத்து இளவரசியாக மீரா ஆஜ்மீருக்கு அருகில் இருக்கும் மேர்த்தா என்னும் ஊரில் பிறந்தார். பதினெட்டு வயதில் (1516) மேவார் பட்டத்து இளவரசர் போஜ ராஜரை மணந்தார். ஐந்தாண்டுகள் கழித்துப் போரிலே கணவர் மாண்டு போனார். மீராபாய் மெதுவாக இசைக்கானங்கள் பாடுவதில் ஈடுபட்டு கண்ணன் மீதி பக்திப் பரவசம் ஏற்பட்டு, ஆவேசமாகப் பாடி ஆலயங்களில் புனித சாதுக்களுடன் நடமாட ஆரம்பித்தார். அரச குடும்பத்துப் பெண்ணொருத்தி இவ்விதம் வெளியே தனியாகப் பாடிக்கொண்டு பரதேசி போல் வாழ்வது, பட்டத்தை ஏற்றுக் கொண்ட மைத்துனர் ரத்தன் சிங், மற்றும் அடுத்து அரசராகிய அவரது சகோதரர் விக்ரம் சிங் ஆகிய இருவருக்கும் அறவே பிடிக்க வில்லை. ஆயினும் அரசாங்க கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிப் புரட்சி மாதாய் மாறிய மீரா, தான் எண்ணியவாறு விடுதலைக் குயிலாக வெளியேறி பக்திப் பாடகியாக ஊர் ஊராய்த் திரிந்து வந்தார்.

சென்றவிட மெல்லாம் கண்ணன் மீது மீரா இன்னிசைக் கானங்களைப் பாடிக் கொண்டு பெருந்திரளைக் கவர்ந்து பெரும் புகழடைந்து வந்தார். மீராவின் கானங்கள் அவர் இறந்த பிறகுதான் எழுதப்பட்டன. பாடலைக் கேட்டவர், சேமிக்க உதவியவர் அவரது மூலப் பாடல்களை சிறிது மாற்றி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. கலைஞானிகள் மீராவின் கானங்கள் மூலத்திலிருந்து மாற்ற மில்லாதவை என்பதை ஏற்க மறுத்தாலும், மீராவின் பக்திக் கானங்கள் வட இந்தியாவில் இலக்கியத் திறத்தைப் பெற்றுள்ளன. கிடைத்த மொத்தப் பாடல்கள் சுமார் 200 என்பது தெரிய வருகிறது. மீராவின் ஒரே நோக்கம், கண்ணன் மீது கொண்ட மோகக் காதலால் பாடல்களைப் பாடி மகிழ்வது. பிருந்தா வனத்தில் கண்ணனைச் சுற்றிவரும் கோபியரில் ஒருத்தியாகத் தன்னை கற்பனித்துக் கொண்டாள். கண்ணனே தன் கணவன் என்று கானங்களில் பாடி வந்தாள் !

நான்கு முறைகள் மீராவைக் கொல்ல ராஜபுத்திர அரசு முயன்றதாக அறியப் படுகின்றது. முதலில் மீராவின் கணவன் இறந்த பிறகு, உடன்கட்டையில் எரிக்க மீராவைப் பிடிக்க வந்ததாகவும், புனித சாதுக்கள் அவளைக் காப்பாற்றியதாகவும் தெரிகிறது. அவளுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி, அடுத்து நச்சுப் பாம்பை பெட்டியில் விட்டுக் கொல்ல முயற்சி, பிறகு ஊசிமுனைக் கம்பி முட்களைப் படுக்கையில் இட்டுக் கொல்ல முயற்சி செய்ததாகவும் வரலாற்றில் உள்ளன !

மீரா கண்ணனைக் கிரிதர கோபாலா என்று அழைக்கிறாள். வேறோர் இடத்தில் கருமை நிறக் கண்ணா என்று விளிக்கிறாள். காக்கை நிறத்தோனே, மன மோகனா, ஹரி கிருஷ்ணா, கவர்ந்த கள்ளனே என்றெல்லாம் கானங்களில் விவரிக்கின்றாள். கண்ணனே தன் கணவன் என்று பாடிப் பாடிக் களிப்படைகிறாள். கடைசியில் மீராவின் மைத்துனர்கள் மனமிறங்கி மீராவின் கீர்த்தியை மெச்சி அவளை மீண்டும் அரண்மனையில் வரவேற்க விரும்பி ஒரு குழுவை அனுப்பினார்கள். அப்போது அவள் அவர்களிடம் கேட்டுக் கொண்டது இதுதான். இறுதியாக ஒருமுறை ஆலயத்தில் காதலன் கண்ணனிடம் அந்த இரவு தங்கிக் கீதம் இசைத்து விட்டுக் காலையில் வருவதாகப் போனவள், பிறகு மீளவே இல்லை. காலையில் அவளது போர்வையும், கூந்தல் முடியும் ஆலயத்தில் கிடந்ததே தவிர புனித மீரா எப்படிக் காணாமல் போனாள் என்பது மர்மாக உள்ளது !

**********************

கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !

கடைவீதிக்குச் சென்று நண்பனே
கருமேனி யானைப் பெற்று வந்தேன் !
இரவில் வணங்கிக் கொள் நீயவனை.
பகலில் பற்றிக் கொள்வேன் நானவனை.
முரசடித்து வந்தேன் அனுதினமும்
மெய்யாக அவனைக் கைக் கொளவே !
நிரம்பக் கொடை அளிப்பது நான் என்றாய் !
மிகவும் குறைவென நான் சொல்வேன் !
தராசில் நிறுத்தேன் நான் அவனை
மெய்யாக அவனைக் கைக் கொளவே !
ஈடாகத் தந்தேன் என் இல்வாழ்வை
என் நகர வாழ்வு, என் பொன் நகைகள் !
மீரா சொல்கிறாள்: “இப்போது அந்தக்
கருமேனி யான் தன் கணவன் என்று !
அருகில் இரு நான் உறங்கும் போது !
உறுதி அளித்தாய் நீ முன் பிறப்பில் !”

(ஆங்கிலத்தில் : ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 7, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா