தாகூரின் கீதங்கள் – 42 முறிந்து போகும் காதல் !

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



என் காதலி ! உன் பாட்டின்
உட்பொருள் என்ன ?
உரைநடை வார்த்தையில்
தெரிவிப்பாய் !
காரிருள் ஆனது இரவு !
தாரகை மறைந்து போயின
மேகத்தில் !
மரத்து இலைகளின் ஊடே
பெருமூச்சு விடும் காற்று !
தளர்த்தி விடுகிறேன் எனது
தலை மயிரை !
நீல நிற அங்கி என்னைப்
போர்த்திக் கொண்டது
காரிருள் போல் !
உன் முகத்தை
என் நெஞ்சோடு
அணைத்துக் கொள்கிறேன் !
ஏகாந்த இனிமையில்
உன் இதயம்
ஏதோ முணுமுணுக்கும் !
கண்களை மூடிக்
காது கொடுத்துக் கேட்கிறேன் !

உன் முகத்தை இனி
நோக்கப் போவதில்லை நான் !
உன்னுரை முடித்ததும்
கண்மூடி இருவரும்
மௌனமாய் அமர்ந்திருப்போம் !
இரவில் முணுமுணுப்பவை
மரங்கள்தான் !
வெளுத்துப் போகுது இரவு !
உதிக்கப் போகுது
பொழுது !
கடைசி யாக நமது கண்கள்
கண்ணினை நோக்கி
விடை பெற்ற பின்
ஒவ்வொருவர் தேர்ந்தெடுத்த
வெவ்வேறு பாதையில்
விலகிச் செல்வோம் !
உன் பாட்டின்
உட்பொருள் என்ன ?
உரைநடை வார்த்தையில்
தெரிவிப்பாய்
என் காதலி !

************

1. The Gardener,
Translated By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 27 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா