காற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது !

This entry is part of 33 in the series 20080724_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மேனி கொதிக்குதடீ ! – தலைசுற்றியே
வேதனை செய்குதடீ !
வானி லிடைத்தை யெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார் !
மோனத் திருக்குதடீ ! – இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே !
நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ ?

பாரதியார் (கண்ணன் என் காதலி !)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 29
வாழ்நாள் குறுகியது !
++++++++++++++++++++++++

மறுபடியும் இதே மனித உடம்பில்
பிறப்பது அபூர்வம் !
புறக்கணித் தெறியாதே
சென்ற பிறப்பினில் பெற்ற
உன் நல்வினைப் பரிசை !
கடந்திடும் வாழ்வு ஒரு நொடியில் !
விழுந்த இலை மீண்டும்
கிளையில் சேராது !
பரவி விரிந்தது
ஆத்மா குடி புகும்
பிறவிப் பெருங்கடல் !
கிரிதரா !
விரைவில் ஏற்றுக் கொள்
என்னை !
எம்மை ஏந்திக் கொண்டு
படகாய் இந்த வாழ்வினைக்
கடக்க உதவுவது
உனது திருப்பெயர் !
பிறவிக் கடல் அலை கடந்திட
முக்தி அடைந்தவர்
ஒரே மொழியைப் பாடுகிறார்
மீராவோ டிணைந்து;
“உறங்கியது போதும் !
விழித்தெழு ! வாழும் நாட்கள்
சிறுத்தவை !”

*****************************
(English Translation By : Jane Hirshfield )
*****************************

(தொடரும்)

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 20, 2008)]

Series Navigation