தாஜ் கவிதைகள்

This entry is part of 33 in the series 20080724_Issue

தாஜ்விடாது காதல்.
——————–

பக்கங்களாகப்
புரண்டுக் கொண்டிருக்கிறேன்.
சூழ்ந்து பரந்த சமூத்திரம்
நித்தம் அலைகழிக்கிறது
தழுவி மேவியே தாவ
முழுகாத தினமில்லை.
மனப் புணர்ச்சி நொடியும்
மங்காததோர் கிளர்ச்சி.
வாசிக்கவே கரையேறி
கவிழ்ந்ததுவே காட்சி.

***

பாவங்கள்.
————–

பார்க்கின்றோம்
நேற்றைக்கு
இன்னொரு நிலத்தில்
சிம்மாசனமிட்ட
பெருத்த யானைகள் எல்லாம்
இன்றைக்கு சாலைகளில்
பிச்சையெடுக்கப்
பழகிவிட்டது.
இதில்….
ஆசீர்வாதம் வேறு.

****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation