சு. சுபமுகி கவிதைகள்

This entry is part of 29 in the series 20080619_Issue

சு. சுபமுகிஎன் சினிமா

இன்றைய யுவதி நான்
இன்றைய சினிமா
எனக்குக் கற்றுத் தந்தது
வெறும் துப்பாக்கி கலாச்சாரம் தான்
என் நினைவில் நிற்பது
தோட்டா சத்தமும்
ரத்த வாடையுமே.
திரையில் தோன்றும்
அத்துமீறும் ஆபாசம்
மாற்றுகின்றது
என் இளைஞனை வக்ரமாய்.

உயிர்போக்கும் ஆசையை
ஒற்றை நொடியில் ஏற்படுத்துகின்றன
என் இளைஞன் மனதில்.

கலாச்சாரம் சாக்கடையாகிறது
சாக்கடை சந்தனமாகிறது இங்கே.

சாப்ட்வேர் கலாச்சாரம்
மாற்றுகின்றது
அவனை அவளாய்
அவளை அவனாய்என் இளைஞன்!

என் இளைஞனே!
எங்கே தேடுகிறாய் உன் உலகத்தை
கையில் பட்டச்சான்றிதழ்
மனதில் பில்கேட்ஸாய்
கற்பனையில் மிதக்கிறாய் நீ
அம்மாவின் புலம்பலும்,
தங்கையின் திருமண ஏக்கமும் கூட
அனர்த்தமாய் தோன்றுகின்றன.
இருந்தாலும் கூட
டீ செலவுக்காய் 5 ரூபாய்க்கு
அப்பாவின் சட்டையைதான் தேடுகிறாய் நீ!


ரகசியம்

ஒரு ரகசியம் சொல்கிறேன்
வயதுக்கு வந்த பெண்களின் வீட்டில்
இது தினம் நடப்பதுதான்
அம்மாவின் புலன் விசாரணை கண்வழியே வழியும்
காலையில் போட்ட பின்னல் கலையாமல் உள்ளதா?
அயர்ன் செய்து போட்ட தாவணி கசங்கியுள்ளதா?
புத்தகப்பையில் புதிதாக ஏதேனும் சேர்ந்துள்ளதா?
அம்மாவின் தேடல்கள் தொடரும்
மாற்றம் அடைந்த மகளின்
மனதை விட்டுவிட்டு.


சு சுபமுகி ( மாணவி )

அனுப்பியவர்: issunderakannan7@gmail.com

Series Navigation