கடற்கரை

This entry is part of 34 in the series 20080424_Issue

ஆதி


அழகிய அச்சமும்
தோள்களில் முகம்
சாய்த்தும்
கைகள் கோர்த்து அலைகளில்
நாம் கால் நனைக்கும்
அந்த நெருங்கிய அவகாசங்கள்
மிக மெல்லியவை..

நம்மை அளவளாவி செல்லும்
அலைகள் அள்ளி சென்றது
பயம் மிகுந்த
உனது நாணத்தையும்
சிரிப்பையும்..

உனதந்த சிரிப்பு
எங்காவது சிப்பிகளில்
முத்துக்களாகி
இருக்கலாம்..
நாணம்பட முத்துக்கள்
சிவந்தும் இருக்கலாம்..

வருடல்களின் வர்ணங்களாய்
அலைகள் வரையும் ஈரங்களில்
மோதும் காற்றில்
முற்றி வெடிக்கிறது நமது
வரையரை மீறல்கள்..

அலையாய்
என் கைகளில் நீ
வளைந்து நெளிகளையில்
கரையாய் நான்
தாகம் கொள்கிறேன்
உன் ஈரங்களில்..

மலர் குவியலாய்
முகம் அள்ளி இதழ்களை
முகர விழைகையில்
கவிந்த உன் இமைகளில்
இருந்தும் குதித்தன
சில மீன்கள் மையல்களாய்
அலைகளில்..


அன்புடன் ஆதி
adhidin@gmail.com

Series Navigation