காற்றினிலே வரும் கீதங்கள் -8 கறைப்படுத்தினார் !

This entry is part of 35 in the series 20080227_Issue

மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கறைப்படுத்தினார் !

கடுமை உடையதடீ – எந்த நேரமும்
காவலுன் மாளிகையில் !
அடிமை புகுந்த பின்னும் – எண்ணும் போதுநான்
அங்கு வருவதில்லை !
கொடுமை பொறுக்க வில்லை – கட்டுக் காவலும்
கூடிக் கிடக்குதங்கே !
நடுமை அரசியவள் – எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள் !

பாரதியார் (கண்ணம்மா என் காதலி)

காற்றினிலே வரும் கீதங்கள் -8
கறைப்படுத்தினார் !

காக்கை நிறத்திலே என்னைக்
கறைப் படுத்தினான் !
கருமேனியான் கறைப் படுத்தினான் !
களிமண் பாவைக்கு
இருபுறமும் அடி கிடைக்கும்
மத்தளம் போல் !
நர்த்தகிப் பெண்ணாக
சாதுக்கள் முன்
நடனம் ஆடினேன் !
நாட்டுப் புறத்தில் கிறுக்கி
நானென இகழ்ந்தார் !
குடிகாரி, காமக் கிழத்தி என்றெனை
அவமானம் செய்தார் !
இளவரசரைத் தூண்டி விட்டு
கிண்ணத்தில்
நஞ்சிட்டு எனைக் கொல்ல
வஞ்சித்தார் !
ஒருதுளி விடாமல் முழுதும்
அருந்தினேன் !
மீராவின் பிரபு கிரிதரனே
மெய்யாக எனது இளவரசன் !
காக்கை நிறத்திலே என்னைக்
கறைப் படுத்தியவன் !
பிறவிக்குப் பின் பிறவியாக
எனக்குத்தான் அவன்
உரிமை யானவன் !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 25, 2008)]

Series Navigation