மெளனமே…

This entry is part of 30 in the series 20080214_Issue

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் )


உன்னை மறந்தவர்களை
நம்பியது தவறு

அவர்கள்
உதிர்க்கத்தெரிந்தவர்கள்
உணரத்தெரியாதவர்கள்

ஒருவகையில்
அதுவும் நன்மைக்கே

இருப்பு இல்லை
என்பதை
முத்துக்களைக்காட்டியும்
கொட்டியும்
தெளிவாக்கிவிட்டார்கள்

இல்லையெனில்
அவர்களின் இருப்பு
வைரமோ வைடூரியமோ
மரகதமோ ரத்தினமோ கோமேதமோ
வியப்போடு வாழ்ந்திருப்பேன்

உன்னை
உடுத்தத்தெரியாதவர்களால்
எனக்கு லாபமே

லாபநட்ட கணக்கில்
நீ
எவ்வளவு பெரிய இருப்பு
என்பதை உணர்ந்து
உன்னை உடுத்திக்கொள்கிறேன்

உன்னை அணிவதால்
வரும்பெருமை
எதை அணிவதாலும்
வரப்போவதில்லை

இனி என்
அலங்காரமே நீதன்

அவர்களுக்கு நன்றியோடு
தொடர்கிறேன் பயணத்தை


pichinikkaduelango52@gmail.com

Series Navigation