அந்தரங்கம்

This entry is part of 42 in the series 20080207_Issue

யோகப்ரபா………………..
….பயணங்களின் நடுவே
அதிகப்படியான அக்கறையுடன்
மறைப்பதாய் நினைக்கும் என்
ஆடை,
பாலியல் மீதான
குரூரப் பார்வைகளுக்கு
மத்தியில்
அதனையும் மீறிய
அங்க வர்ணிப்புகளில்
களிப்புறுகின்றன
அவன்களின் வக்கிரங்கள்…

அம்பலமாக்கப்படுகிறது
எல்லா நிலைகளிலும்
என்…..?

என் அந்தரங்கத்தை
நிர்வாணப்படுத்துகின்றன
எனது கண்கள்
அதையும் தாண்டி
அருவமாய் மறைகிறது
என் மனம்.


-யோகப்ரபா
yogaprabha_1985@yahoo.com

Series Navigation