வலியும் புன்னகைக்கும்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

கவிதா


கட்டில்

சுற்றிவர நாற்சுவரும்

பேசாமல் நிற்கிறது

பார்வையாளறாய்…

தனிமை

சுகம்தான் நீ இருக்கையில்…

இருட்டின் விரல்கள்

நீண்டென்னை பிடிக்கிறது.

இருட்டும்

இதம்தான் நீ இருக்கையில்.

நான் கட்டிய

என் வீட்டுக்கூரையும்

என்னை குனிந்து பார்கிறது.

உன் ஒரு வார்த்தையில்

குறுகித்தான் போனேனோ?

கவிதையாய் விழுந்த வார்த்தைகள்

இன்றென் மடியில் கனக்கிறது.

கொடும் பாறைகளாய்.

இதயத்திலிருந்து

பாம்பாய் ஊர்ந்தென்

சுவாசம் அடைக்கிறது

இந்த ஜன்னல் காற்றும்.

தொண்டைக்குள் சிறைபட்ட

வார்தைகள்… வருவதாயில்லை

இந்த நிலவு பாரேன்

வயதேரியதாய் சுருக்கம் வீழ்ந்து

இந்தனை அசிங்கமாய் போனதே.

நிசப்தம் உருமாறி

பெரும் குரல் எடுத்தழுகிறது

நான் மட்டும்

அமைதியாய்.

என்றுமில்லாத நிதானமாய்.

காதல் தோற்பதில்லை என்று

எனக்குத் தெரியும்

காதலர்கள் தோற் று போவதுண ;டுதானே

உன் வார்த்தை வலைகளில்

கட்டுண்டு காணமல் போன

என் உலகம்.

இதோ தரையில் உருண்டென்முன் கிடக்கிறது.

தோழ்வி எனக்கென்றாலும்.

இழப்பு உனக்குத்தான்.

போ.

06.02.08 கவிதா நோர்வே


kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா

கவிதா