நண்பன்

This entry is part of 54 in the series 20080110_Issue

ரஜித்


இன்னும் ஒரேநாள்
மழை மண்ணை மறந்தால்
மரணிக்கும் பயிர்கள்
அப்போது

மழையாக இறங்குவான் நண்பன்

வெட்டவெளி
கூட்டமாய் சிட்டுக்கள்
கொட்டுகிறது மழை
குடை பிடித்தது ஓர் ஆலமரம்

அந்தக் குடையாக வருவான் நண்பன்

தத்தளிக்கிறது கட்டெறும்பு
கட்டுமரமானது
ஒரு காய்ந்த இலை

அந்தக் கட்டுமரமாக வருவான் நண்பன்

அணைந்து அணைந்து
எரிகிறது உயிர்
ஆக்ஸிஜனைவிட அவசரத் தேவை
பி பாசிடிவ் ரத்தம்

அந்த ரத்தமாக வருவான் நண்பன்


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation