காதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு !

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எனை இதயத்திலே நேசித்த

அனைவருக்கும்

நன்றி நவில்கிறேன் நான் !

பதிலுக்கு அவரை நேசிப்பேன்

நன்றியுடன்,

கடை வீதிகளுக்கோ

அல்லது

ஆலயத்துக்கோ செல்லும் முன்பு,

இல்லச் சிறைச் சுவருக் கருகே

சிறிது நேரம்

உரத்த குரலில் நான் பாடும்

இன்னிசைக் கேட்கத்

தமது கடமைகளை மறந்து

தங்கி நிற்போருக்கு

ஆழ்ந்த நன்றி !

பெருமூச்சு விடும் போது

என் குரல்

ஏற்ற இறக்கத்தில்

தெய்வீகக் கலை எழுப்பும் உன்

சொந்தக் கருவி

கைத்தவறி வீழுமுன் காலடியில்,

கண்ணீருடன் நான்

சொன்னதைக் கேட்டதும் !

அதற்கு நன்றி கூற

எனக்குச் சொல்லிக் கொடு

எப்படி உரைப்பதென !

எதிர்கால நீண்ட இல்வாழ்வுக்கு

எந்தன் ஆத்மா உணர்த்தும்

முழுப் பொருள் மீது குறிவைத்தடி !

நழுவிப் போகும்

இந்த வாழ்க்கையிலே

பொறுத்திருக்கும் காதலுக்குப்

பாராட்டு வேண்டும்

வரவேற்புடன் !

************

Poem -41

Sonnets from the Potuguese

By: Elizabeth Browing

I thank all who have loved me in their hearts,

With thanks and love from mine. Deep thanks to all

Who paused a little near the prison-wall

To hear my music in its louder parts

Ere they went onward, each one to the mart’s

Or temple’s occupation, beyond call.

But thou, who, in my voice’s sink and fall,

When the sob took it, thy divinest Art’s

Own instrument didst drop down at thy foot

To hearken what I said between my tears,–

Instruct me how to thank thee! Oh, to shoot

My soul’s full meaning into future years,

That they should lend it utterance, and salute

Love that endures, from Life that disappears!

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 1, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா