ஈரம்

This entry is part [part not set] of 21 in the series 20090122_Issue

சுப்ரபாரதிமணியன்


ஈரம் : சிறுகதை : சுப்ரபாரதிமணியன்
============================

கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்ட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று முன்பிருந்தது. சமீபமாய் குறைந்து இன்னும் முன்னதாகவே என்றாகிவிட்டது. கதவை அடைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதை சிவக்கண்னனும் உணரந்திருந்தான்.
செல்வி கதவையடைப்பதற்கு முன் பனியன் கம்பெனியின் வேலை முடிந்து போதும் வேலை என்று புறந்தள்ளி விட்டு வருபவள்தான். ஆனாலும் ஏழெட்டு மணியாகி விடுகிறது. நன்கு இருட்டின பின்பு வந்து கதவைத் தட்டும் பேர்வழியாக மாறி விட்டாள். அவன் கதவைத்திறக்கிற ஒவ்வொரு நாளும் கத்துவது இப்படித்தான் இருக்கும். : ” முந்தியே வந்து தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்ற உசிரெ வாங்கறே”
அணையிலிருந்து வரும் பூச்சிகளிலிருந்து தப்பிப்பதற்காகக் கதவை அடைக்க வேண்டியிருக்கும். அணையைச் சுற்றியிருக்கிற எல்லா வீடுகளிலும் இப்படித்தான். முன்பெல்லாம் கொசுவை அடிப்பது போலத்தான் நினைத்து உடம்பில் ரத்தக்கறைகளைக் கொண்டிருந்தான். கொசுக்கள் ரொம்பவும்தான் கொழுத்துத் திரிகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவை கொசுக்களல்ல என்று தெரிந்தற்கே பல மாதங்களாகி விட்டன. அவை ஏதோவகைப் பூச்சிகள் , ரசாயனப்பூச்சிகள்ள்.
அணையில் தேங்கி நிற்கும் ரசாயனக் கழிவுகளைத் தின்று பெருத்து விட்டன. ரசாயனக்கழிவுகளின் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். இந்தப்பூச்சிகளும் விழுந்து எழுகிற போது ராட்சதையாக மாறி விடும். இல்லாவிட்டால் எப்படி இவ்வளவு žக்கிரம் கொழுக்கும். விவசாயத்திற்கென்று கட்டப்பட்ட அணை. சாயக்கழிவுகள் ஆற்றில் கலந்தோடி வந்து நிற்கிற இடமாகி விட்டது.
. அணை நிரம்பி விட்டது . வெடிக்கவிருக்கும் வெடிகுண்டைப்போல தகதகத்து நிற்கிறது. மதகுக் கதவுகள் இற்றுப் போய் விட்டன. அணைக்கதவுகளித் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் நீர் மெல்ல மெல்ல வழிய ஆரம்பிக்கும். அணை நிரம்பிய பின்பு திறந்து விடாமல் இருக்க முடியாது. சமீபமாய் பெருத்த மழை பெய்து விட்டது. திறந்து விட வேண்டாம் என்று கரையின் ஓரத்தில் இருக்கும் விவசாயிகள் கதறுகிறார்கள். சாயக்கழிவு தண்­ர்ரோடு கலந்து இருபது மைல்களுக்குப் பரவ எல்லாம் சாயமாகி விடுகின்றன என்று தூரத்து ஊர்காரர்களெல்லாம் அலறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவக்கண்ணனுக்கு எல்லாம் மூழ்கிப்போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சாயங்களை அடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக மனிதர்களை கும்பல்கும்பலாக அடித்துக் கொண்டு போகட்டும் என்றிருக்கும்.
கதவை அடைத்து விட்டால் இருக்கும் அசௌகரியங்களில் ஒன்று தண்­ர் லாரிகளின் பிரத்யேக ஓசையும் தட தடப்பும் சரியாகக் கேட்க முடியாமல் போவதுதான். அ€ணைக்கட்டும், சுற்றியுல்ள நிலமும் சாயம் பூத்து விட்டன.குடிப்பதற்கு லாயக்கற்று போய்விட்ட போது நாற்பது கி மீ க்கு அப்பாலிருந்து தடதடத்து தண்­ர் லாரிகள் வந்து போகின்றன. குடிக்கிற தண்­ரை ஏற்றி வரும் தண்­ர் லாரிகள். கதவை அடைத்து விட்டால் கதவுகளுக்குப் பின்னாலும் ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரம் கேட்டு விடுவதால் தண்­ர் லாரிகளின் ஹாரன் சப்தங்கள் சில சமயங்களில் கேட்காமல் போய் விடுவதுண்டு. யாராவது கதவைத் தட்டி சொல்லி விட்டுப் போங்களேன் என்று சிவக்கண்னன அலறியிருக்கிறான். ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லா கதறல்களும் அடக்கம் என்பது போலாகிவிட்டது.
ரசாயனப்பூச்சிகளை விரட்டுவதற்காக ஆளுக்கொரு உபாயம் வைத்திருக்கிறார்கள். சிவக்கண்ணனுக்கு எல்லாமே வினேதமாகத்தான் தெரிந்தன. கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டி பயமுண்டாக்கி துரத்திவிடலாம் என்றுதான் முன்னம் நினைத்திருந்தான். ஆனால் தேனடையை மேய்க்கும் தேனீக்கள் மாதிரி கொசகொசவென்று உடம்பை மொய்ப்பது சாதரணமாகிவிட்டது. சிவக்கண்ணனுக்குத் தெரிந்த ஒரே வித்தை வேப்பிலை புகை போடுவதுதான். முன்பெல்லாம் கொழுந்தை விட்டு விட்டு முற்றின இலைகளய்க் கொண்டு வந்து போட்டு புகையெழுப்புவான். கமறலுடன் அறைகள் முழுக்கப் பரவும். இப்போதெல்லாம் எவ்வளவு அடர்த்தியாய் புகை கிளம்பினாலும் கமறல் வருவதில்லை. முத்துசாமி செய்யும் வித்தையும் செலவும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. டுயூப்பிலிருந்து பற்பசை மாதிரி எதையோ பிதுக்கிக் -காள்வான். உள்ளங்கையில் வைத்து நசுக்கிக் கொண்டு முகர்ந்து பார்ப்பான். சரசரவென்று கைகள் மற்றும் கால்களில் பரவலாகத் தேய்த்துக் கொள்வான்.
” பறக்கிற டைனோசர் இருக்கா’
” இருந்திருக்கும் .இல்லீனன்ன நாலெட்டு வச்சு ஒரு தெருவையேன் அடச்சிக்குற டைனசரை சினிமாவிலெ காமிப்பாங்களா “‘. அவன் டுயூப் பிதுக்கலுக்கென்று செலவு செய்யும் தொகை செல்வியின் ஒரு வாரச் சம்பளத்திற்கு ஏக தேசம் வந்திருந்தது. லாரித்தண்­ரை நம்பாமல் மினரல் வாட்டர் கேனை ஊருக்குள் கொண்டு வந்தவன் முத்துசாமி என்ற பெயரும் பெருமையும் ஊருக்குண்டு. சிறுவாணித்தண்­ரின் சுவையை விட மினரல் கேன் தண்­ரின் சுவை அவனை திணறடித்தது என்பது சமீப சாதனை. இன்னொரு சாதனைச் செய்தி சமீபமாய் பதிந்தது என்னவென்றால் ஆயுத பூஜையின் போது செல்வி அவள் வேலை செய்யும் பனியன் கம்பனியிலிருந்து வழக்கமாய் கொண்டு வரும் பத்து படி பொட்டலத்துடன் ஒரு
டி சட்டையையும் கொண்டு வந்தது. கிடைத்த டி சட்டையைப் போடப்போகிற கற்பனை அவனைச் சுத்தமான அணை நீருக்குள் நீச்சடிக்க இறக்கி விட்ட மாதிரி இருந்தது. டி சர்டின் நீலமும் பச்சையும் சிவப்பும் கலந்த வர்ணக் கல€வை அவனுக்குப் பிடித்திருந்தது. ” நம்ம ஊரு அணையில உங்களை முக்கி எடுத்த மாதிரி இருக்கீங்களோ” ரசாயனப் பூச்சியென்று அவனை அவள் சொல்லாதது ஆறுதலாகத்தான் இருந்தது.
தண்ணிர் லாரி நேற்றுதான் வந்திருந்தது.இன்றைக்கு வராது என்பது மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. கதவைச் சாத்திவிட்டுப் புகை போடலாம்.. ஆரம்ப நிலையிலானக் கமறலைத் தவிர்த்து விட்டால் மூச்சு முட்டுவது கூடத் தெரியாது. கமறல் இல்போதெல்லாம் அபூர்வமாகத்தான் வருகிறது.
வேப்பிலைகளை மூலையில் சேர்த்திருந்தான். நேற்று நல்லூர் போனபோது வேப்பிலைலளைப் பறித்து பிளாஸ்டிக் பை ஒன்றில் நிரப்புவதற்கென்று ரொம்பதூரம்தான் போக வேண்டியிருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் மரங்களெல்லாம் மொட்டையாகி விட்டன. நல்லூர்ப்பக்கம் போகிற போது வெளுத்ததாய் சில தென்படும் விளக்கெண்ணெயைக் கண்களில் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கும். வேப்பங்குச்சிகளையும் கொஞ்சம் ஒடித்துப் போட்டுக் கொள்வான். பற்கள் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. கிருஸ்ணமூர்ர்த்தி பிரஸ் போட வேண்டாம். கைகளில் விளக்கவும். பற்பசை வேண்டாம் .ஆயுர்வேதப் பல்பொடி போதும். வேப்பங்குச்சி குறைந்தது நான்கு நாட்களுக்காகும். ஒரு முனையை ஒரு நாள் என்று ஆரம்பித்து நான்கு நாளில் பிடி அளவிற்கு வரும் வரையில் உபயோகப்படுத்துவதில் தன்னைத் தேர்ச்சியுள்ளவனாக்கிக் கொண்டான்.
புகை போடும் மண் சட்டிகள் அடிக்கடி உடைந்து போகின்றன.. சூடான நிலையில் அவற்றை கையில் தொடுவதும் , நகர்துவதும் சிரமமாக இருந்தது. பழைய ஒடுக்கு விழுந்த அலுமினியச் சட்டியை சமீபமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். செத்த எலியைத் தூக்குவது மாதிரி அலுமினியச் சட்டியைப் பயன்படுத்துவது அவனுக்குச் சுலபமாக இருந்தது..
வேப்பிலை பழுப்பு நிறத்துடன் துவண்டு போய் விட்டது. பிளாஸ்டிக் பையிலிருந்து கொட்டும் போது காய்ந்த இலைகளுக்கான சரசரப்பு வந்து விட்டது. காகிதங்களைப் போட்டு தீ மூட்டினான். சோம்பலுடன் எரிய ஆரம்பித்தது. ஒரு சொட்டு விளக்கெண்ணை அல்லது பெற்றோல் இருந்தால் சுலபமாகப் பற்றிக் கொள்ளும். குனிந்து ஊத சாம்பல் துணுக்குகள் முகத்தில் தெறித்தன.
மெல்ல புகை பரவ ஆரம்பித்ததும் முன் பக்க அறையின் இடது மூலையில் வைத்தான். உள் அறைக்குள் மெல்ல புகை பரவும் . தூக்கம் வரவில்லையென்றாலும் கண்களை மூடிக்கொண்டு கிடக்கல்லாம். ரசாயனப் பூச்சிகள் எங்காவது மூலைகளில் ஒதுங்கிக் கொள்ளட்டும். அவனே அவனைப் பாராட்டிக்கொள்வதைப் போல் வலது கையின் மேற்பகுதியைக் கொசுவை அதட்டுவது போலத் த்ட்டிக் கொண்டான். மெல்ல புகை ஆரம்பித்தது. லேசான கமறல் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. புகையினுள் மூழ்க ஆரம்பித்தான். இடது கையில் வந்து தைரியமாக உட்கார்ந்தது ஒரு ரசாயனப் பூச்சி. புகையை விழுங்கி அது சிவக்கண்ணனின் பாதி உடம்பிற்கு வந்தது. வாயைத் திறந்த போது புகை வெளிவந்தது. கண்களைச் சிமிட்டிக் கொண்டு அது வாயைத் திறந்தது.

* பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காக சிவக்கண்ணனை உட்கார வைத்திருந்தார்கள். பத்திரிக்கையாளார் சங்கத்தின் பெயர் அவன் தலைக்குப் பின்புறம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அடைபட்டிருந்தன. ஏகதேசம் நாற்காலிகளில் அடைபட்டிருந்தவர்களின் கைகளில் இருந்த கேமிராக்கள் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து நின்றன. வந்து சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் வந்த காரணத்தால் அவர்கள் கேட்டது ஒரே மாதிரியான கேள்விகள் சிவக்கண்ணனுக்கு அலுப்பைத் தந்திருந்தது.
சிவக்கண்ணனுக்கு கால்களில் ஒரு வலி ஆரம்பித்திருந்தது. வலது காலை எடுத்து இடது காலின் மேல் போட்டுக் கொண்டான். ஒருவகை ஆசுவாசமாய் பெருமூச்சு வந்தது.. பெரும்பான்மையோர் கேட்ட கேள்வி; :”ரசாயனப் பூச்சியை இந்த வெற்றிப் படத்தில் நடிக்க வைப்பதற்காக நீங்கள் எப்படி அதன் மொழியை புரிந்து கொண்டு கட்டளையிட ஆரம்பிதீர்கள் ”
ரரசாயனப் பூச்சியைப் பார்த்தான், தனது இடுப்பு உயரத்திற்கு இருந்தது. முப்பது நாற்பது கிலோ எடையாவது இருக்கும். சற்று சிரமப்பட்டுதான் இடுப்பில் அதை வைத்து இடுக்கிக் கொண்டு ஸ்டுடியோவிற்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் சென்றிருந்தான். அதன் கண்களில் ஒளிர்ந்த ஒளியில் இருட்டான பகுதி வெளிச்சமாகி இருந்தது. ஏதாவது சிரமம் வருகிற போது ராட்சத பூச்சியின் நகங்களச் சுலபமாக தற்காப்பிற்கென்று பயன்படுத்திக் கொள்ளலம். அவ்வளவு சௌகரியமான நீளத்தில் இருந்தது.
” படத்தில் ராட்சத மனிதர்களியெல்லாம் செத்த எலிகளத் தூக்கிப் போடுவது போல போடுகிறாயே ரசாயனப் பூச்சியே, உனது அன்பு முகத்தை தடவலாமா.” பெண் நிருபர் ஒருத்தி கேட்டாள். அவளின் கண்களில் ஒரு வகை பயம் இருந்தது. கேள்விகளைக் கேட்டு விட்டு நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். ” என்ன எதிர்பார்க்கிறிர்கள். எனது ராட்சத பூச்சி உங்களை நெருங்கி முத்தமிட வேண்டுமா அல்லது பலத்காரம் செய்ய வேண்டுமா ” சிவக்கண்ணன் ஆங்கிலத்தில் கேட்டபடி முறுவலித்தான். பெண் நிருபரும் சிரித்தாள். லேசான லிப்ஸ்டிக் அவளின் உதட்டை வžகரமாக்கியிருந்த்து. அவள் போட்டிருந்த காலர் சட்டையில் பறந்து கொண்டிருந்தது ஒர் பட்சி. ரசாயனப் பூச்சி காலர் சாட்டையில் இருந்த பட்சியஈப் பார்த்துக் கொண்டிருந்தது. உடம்பை அசைத்துக் கொண்டிருந்தாலும் பட்சி சற்றே பறப்பது போலக் க’ட்சியளித்தது.
” நீ துவம்சம் செய்ய யார் யாரோ இருக்கிறார்கள். தீயது தோற்கும்.” என்ற தர்மத்தை நீயும் வெற்றி பெற்றுச் சொல்லிக்கொண்டிருக்கிறாய் இப்படத்தில். ஆனால் நீ ரசாயனப் பூச்சியாக இல்லாமல், கிருஸ்ணப்பருந்தைப் போலவோ, ராட்சதப் புறாவைப் போலவோ இருந்திருந்தால் உனக்கு கோவில் கட்டலாம். “கிழ நிருபரின் தாடி ஏக தேசம் வெளுத்திருந்தது மீசைக்கு மட்டும் டை அடித்து அழுத்தமான கறுப்பாக்கியிருந்தார். அவர் போட்டிருந்த முரட்டுக் கதர் சட்டையின் அழுக்குச் சட்டைக்குப் புது நிறத்தைக் கொண்டு வந்திருந்தது.
” சினிமாவில் நடிக்கிற எல்லோருக்கும் கோவில் கட்டி விடுவீர்கள் போலிருக்கிறது. கதாநாயகர்கள், நாயகிகள் மூலஸ்தானத்தில் இருக்கும் போது இது போன்ற பட்சிகளும் ராட்சதபறவைகளும் மூல ஸ்தானத்தைப் பிடிக்க முடியாதே ” சொல்லி வைத்த மாதிரி எல்லா காமிராக்களும் மிளிர்ந்து மறைந்தன. வீடியோ காமிராக்களின் பிரேமிற்குள் ரசாயனப்பூச்சியின் ஒளிரும் கண்களை அடைத்தார்கள். எல்லோரும் வேலை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் போல அவசர கதியில் எழுந்தார்கள்..
” ராட்சத மனிதர்களையெல்லாம் அலாக்காகத் தூக்கிப் போடும் இப்பூச்சி ரசாயன அணைக்கட்டை வாரியெடுத்து எங்காவது கொண்டு போய் விடலாம் “. பூச்சியை நெருங்கியவர் சிவக்கண்ணனைப் பார்த்தபடி சொன்னார். திகைப்பில் பூச்ச்சியின் கண்கள் மிளிர்ந்தன.
” தற்கொலை செய்து கொண்ட நடிகையின் அம்மா பேட்டி அடுத்த ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. நட்சத்திர ஓட்டலில் நடிகையின் தற்கொலை பற்றின கிசுகிசுக்களுக்கு முறையான பதில் கிடைக்கலாம். நடிகையின் குடிப்பழக்கமும், மூன்றாவது காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள தாமதப்படுத்தியது பற்றி நிறைய ஹேஸ்யங்கள் கிடைக்கும். ” கலைந்து போவதில் žரான வேகம் இருந்த்து. பெண் நிருபர் ரசாயனப் பூச்சியின் அருகில் வந்தாள். அவளின் காலர் சட்டையில் இருந்த பட்சி மெல்லப் பறந்து கொண்டிருந்தது. ராசாயனப்பூச்சியின் சொரசொராக் கன்னத்தைத் தடவினாள். பூச்சிகிறங்கிப்போனது போல கண்களை மூடியிருந்தது. கண்களைத்திறக்காதபடி இறுக்கியிருந்த்து. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடிமறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடி மறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியபடியே இருந்தது. ” சினிமாவில் நடித்த ராட்சச பூச்சி ஆயிற்றே.. ஞாபகமாக இருக்கட்டுமே ” . இன்னொரு நிருபர் சற்றே முதிர்ந்த இறக்கையினைப் பிய்த்தெடுத்தார். ஒருவகை வரிசை அமைந்து விட்டது. வருகிற ஒவ்வொருவரும் ராட்சதப்பூச்சியின்யைத் தொட்டு அவர்களின் கைவிரல்களின் வலிமைக்கேற்ப அதன் உடம்பிலிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். ” பெர்லின் போயிருந்த போது கிழக்கு செர்மனிக்கும், மேற்கு செர்மனிக்கும் இடையிலான பெர்லின் சுவரின் இழந்த இடிந்த துண்டை எடிடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். இதுவும் இருக்கட்டுமே” ராட்சதப்பூச்சி அதன் இறகுகளை மெல்ல இழந்து முழு நிவாணமாகிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒளி வலுவிழந்திருந்தது. ஒரு வாகை சோம்பல் தன்மையுடன் கண்களைத் திறந்து மூடியது. கண் புருவத்திற்கு மேலிருந்த மயிர்களும் உதிர்ந்திருந்தன. சமையலுக்கென்று சுத்தம் செய்யப்பட்ட கோழி போல் பூச்சியின் உடம்பு நிர்வாணமாகிச் சிறுத்தது. ஓங்கித் தட்டினால் கொசுவைப் போலச் சிறுத்துவிடும் என்றபடி வலது கையினை முழுபலத்தையும் பிரயோகித்து கீழிறக்கினான்.
வேப்பிலை புகை முழுசாகக் குறைந்து போயிருந்தது. கண்களைத்திறக்காதபடி எரிச்சல் அப்பியிருந்ந்தது. வலது கையை உயர்த்தித் தாழ்த்தியபோது சற்றே ஈரம் தென்பட்டது. கொசு ஒன்றின் ரத்தக் கசிவு பிசுபிசுப்பாக ஒட்டியிருந்தது.

சுப்ரபாரதிமணியன் . subrabharathi@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்

ஈரம்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


இன்று சிலவேளை மழை பெய்யலாம் எனத் தோன்றியது. முற்றத்தில் காலை வெயில் பளீரென அடித்துக் கொண்டிருந்தது. எனினும் வானில் கருமேக மூட்டம் பல வடிவங்களைக் கொண்டு களைந்துகொண்டிருந்தது. அந்தக் குடிசை முழுதும் ஒரு பூனையின் மென்மயிரென அவிந்து கொண்டிருந்த நெல்லின் மணம் பரவிவிட்டிருந்தது. செல்லாயி அந்தப் பானையின் மூடியைத் தூக்கி நீர்மட்டம் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் முற்றாக அவிந்துவிடும். பின்னர் முற்றத்தில் பரத்திவிட்டு உடுப்புக் கழுவப் போகலாம்.

குடிசையின் ஒரு மூலையில் கயிற்று ஊஞ்சலில் தொங்கவிட்டிருந்த ஓலைப்பாயொன்றை எடுத்தாள். முற்றத்தில் வெயிலின் அடர்த்தி அதிகமாக இருந்த ஒரு இடத்தைப் பார்த்து பாயினை விரித்தாள். வெயில் தரையை விட்டு அவள் விரித்த பாயில் படுத்துக் கொண்ட சமயம் உள்ளே போய் நெற்பானையைத் துணியால் பிடித்துத் தூக்கமுடியாமல் தூக்கி வந்து பாயருகில் வைத்தாள். பெரும் அகப்பை கொண்டு நெல்லை அள்ளி அள்ளி பாயில் பரப்பத் தொடங்கினாள்.

வயல் வேலைக்கு ஒரு கூலியாகச் செல்லும் அவளுக்குக் கிடைத்த கூலிதான் இந்த ஒரு கூடை நெல். அவித்து, குத்திப் புடைத்து வைத்துக் கொண்டால் அவளுக்கும் விறகு வெட்டியான அவள் கணவனுக்கும் ஒரு மாத வயிற்றுப்பாட்டுக்குப் போதும். நாற்று நட, கதிரறுக்க எனச் சுற்றுவட்டாரத்தில் எங்கு வயல்வேலை நடந்தாலும் செல்லாயிக்கு அழைப்பிருந்தது. அவளது கைநேர்த்தியும், சுறுசுறுப்பும் அவளுக்கு நல்லபெயர் வாங்கிக் கொடுத்திருந்தது. வாங்கும் கூலிக்கு வஞ்சனை செய்யாமல் அவளும் உடல்பாடுபட்டு உழைத்தபடி இருந்தாள். குழந்தை பிறந்த பிறகு கூட இரண்டு மாதங்கள் மட்டுமே அவள் வேலைக்குச் செல்லாமல் இருந்தாள். பிறகு வயல்வெளி நிழல் மரங்களில் தொட்டில் கட்டிக் குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு அவள் தன்பாட்டுக்கு வேலை செய்தாள்.

வெயில் தன் ஆதிக்கத்தை இப்பொழுது நெல்லின் மேல் பரப்பத் தொடங்கியது. சூடாகப் பரத்தப்பட்டிருந்த நெல்லின் மேலிருந்து இலேசாகப் புகை கிளம்பியது. முழுவதுமாகப் பரத்தி முடித்தபின் எழுந்து நின்று ஒருமுறை முழுவதுமாகப் பார்த்தாள். ஏதோ ஒன்று குறைவது போலத் தோன்ற குடிசையருகில் வந்து எட்டி நின்று ஓலைக் கூரையின் பாக்குமரக் கம்புகளுக்கு இடையில் சொருகப்பட்டிருந்த உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடித் துண்டுகளை எடுத்துவந்து நெற்பாயின் நான்கு மூலைகளிலும் நடுவிலும் வைத்தாள். இனிக் காக்கை,குருவிகள் அண்டாது எனத் திருப்தியாக உள்ளே சென்றாள். அவளது ஆறுமாதக் குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருந்தது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆறுதலாக நேற்று இரவு தண்ணீர் ஊற்றிவைத்திருந்த எஞ்சிய பழஞ்சோற்றினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டாள். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை ஊறுகாய் என எடுத்துவைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

முருகையன் கீழ்த் தோட்டத்தில் இப்பொழுது விறகுவெட்டிக் கொண்டிருப்பான் என எண்ணிக் கொண்டாள். அவளது குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. எப்பாடு பட்டாவது பணம் கொஞ்சம் சேர்த்தெடுத்து , பக்கத்துப் பெரிய கோயிலுக்குத் தூக்கிப் போய் மொட்டையடித்துக் காதுகுத்தி ஒரு நல்லபெயராக வைக்கவேண்டுமென நேற்றிரவும் அவள் முருகையனிடம் சொல்லியிருந்தாள். அவனும் அதனை உத்தேசித்தே பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.

சாப்பிட்டு முடித்து, கழுவவேண்டிய அழுக்குத் துணிகளைத் தேடிக் கொண்டிருந்த சமயம் தொட்டிலில் இருந்த குழந்தை காலை உதைத்துச் சிணுங்க ஆரம்பித்தது. துணிகளை அப்படியே போட்டுவிட்டுக் குழந்தையருகில் வந்து சத்தமாக செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள். பழகிய குரலைக் கேட்டதும் குழந்தை புன்னகைத்தது. எடுத்து முத்தமிட்டுப் பால்கொடுத்தாள். ஒரு பழந்துணியை நிலத்தில் விரித்து குழந்தையைப் படுக்கவைத்தாள். வயிறு நிறைந்த திருப்தியில் அக்குடிசையின் ஓலைக் கூரை பார்த்துத் தனியாகக் கதைத்துக் கொண்டிருந்த அதன் வெற்றுக் கால்களுக்குக் கொலுசு வாங்கிப் போடவேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

குழந்தையின் அழுக்குத் துணிகளும், அவளதும் அவனதும் அழுக்குத் துணிகளுமாகச் சேகரித்ததற்கு மத்தியில் சவர்க்காரத்தையும் வைத்து மூட்டையாகக் கட்டினாள். ஒற்றையடிப் பாதையில் இறங்கி மேட்டில் ஏறி மீண்டும் இரண்டு பள்ளங்கள் இறங்கி நடந்தால் சிற்றோடை வரும். அவளுக்கு வேலைக்கு அழைப்பில்லாத நாட்களில் துணிகளையும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு துவைத்து வரப் போவது அவளது வழமை. ஓடைக் கரை மருதமரத்தில் ஒரு தொட்டிலைக் கட்டி, குழந்தையின் வயிற்றை நிரப்பித் தூங்கவிட்டாளானால் ஈரக் காற்றுக்கும், பெருமரத்தின் நிழலுக்குமான சுகம் கண்டு குழந்தை எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் நிம்மதியாக உறங்கும். எல்லாத் துணிகளையும் கழுவிவிட்டு, அவளும் குளித்து, குழந்தையையும் குளிப்பாட்டியெடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வருவாள்.

முற்றத்துக்கு வந்துபார்த்தாள். வெயில் நெல்லைப் பரிகசித்தபடி ஆவியாக்கிக் கொண்டிருந்தது. மேகக் கருமூட்டம் சூரியனைச் சில நேரங்களில் ஒளித்துவைத்தபடி அவளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. மழை வருமோ? போனமுறை அப்படித்தான். அடித்த வெயிலை நம்பி நெல் அவித்து முற்றத்தில் பரத்திவிட்டு, பக்கத்துக் கிராமத்து சின்னாச்சிக் கிழவியின் சாவுவீட்டுக்குப் போயிருந்த போது பேய்மழை பிடித்துக் கொண்டது. அவசரமாக ஓடிவரவும் முடியாது. மழை நின்ற பின்னால் வந்து பார்த்தால் முற்றத்தில் ஓடிய வெள்ள நீருக்குப் பாயில் நெல் இருந்த சான்றுக்காகச் சில நெல்மணிகள் மட்டுமே எஞ்சியிருந்தது. பல நாள் உழைப்பு. ஒரு மாத உணவு. எல்லாம் ஒரு பொழுது மழையில் வீணாகிப் போனதில் பெருஞ்சோகம் அப்பியது அவளில். முருகையன்தான் ‘விடு புள்ள, நமக்குக் கொடுப்பினை இல்ல..அவ்ளோதான்’ என்று ஆறுதல் சொன்னான்.

கடும் சூட்டோடு அடித்த வெயில் இப்போதைக்கு மழை வராது என்ற எண்ணத்தை அவளில் ஊன்றியது. உள்ளே போய் குழந்தைக்கு ஓடைக் கரையில் தொட்டில் கட்டவென வைத்திருந்த பழஞ்சேலையால் மூட்டையைச் சுற்றியெடுத்து குடிசைக்கு வெளியே கொண்டுவந்து வைத்தாள். குடிசையின் கொல்லைக் கதவை மூடிவிட்டு, குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். வெளிக்கதவுக்கான பூட்டினையெடுத்துக் கொண்டு வெளியே வந்து கதவைப் பூட்டினாள். துணிமூட்டையை எடுத்துத் தலையில் வைத்தவள் திரும்பவும் பரத்தியிருந்த நெல்லை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.

மேடு ஏறிப் பள்ளங்கள் இறங்கிவந்தவளுக்கு மூச்சு வாங்கியது. ஓடைக்கரை சலவைக் கல்லில் துணிகளை வைத்தவள் சலசலத்து ஓடும் ஓடையை ஒரு முறை கண்களால் மேய்ந்தாள். ஓடையில் இவளைத் தவிர யாரையும் காணவில்லை.தெளிந்த நீர். மழை பெய்தால் மட்டும் கலங்கிய நீராகி வெள்ளக் காடாகிவிடும். போன வருஷம் அடை மழை வந்தபோது இந்த மருத மரம் கூடப் பாதிவரை மூழ்கியதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.

துணிமூட்டையைச் சுற்றியிருந்த தொட்டில் சேலையைத் தனியாக எடுத்தாள். மருத மரத்தின் அண்டிய ஒரு கிளைக்குச் சேலையின் ஒரு முனையை எறிந்தவள் வாகாகத் தொட்டிலைக் கட்டிவிட்டாள். ஒரு கல்லில் அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுத்தாள். குடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் சொருக ஆரம்பித்தது குழந்தைக்கு. அப்படியே அள்ளியெடுத்தவள் அதன் நெற்றியில் மெலிதாக முத்தமிட்டாள். பின்னர் கட்டிய தொட்டிலில் படுக்கவைத்து கொஞ்சநேரம் ஆட்டிவிட்டாள்.

உடுத்திருந்த சேலையோடு ஓடையில் இறங்கினாள். முழங்கால் வரை நனைத்து ஓடிய தண்ணீரில் நின்றுகொண்டு ஒவ்வொரு துணியாக அலச ஆரம்பித்தாள். ஓடை மணலும், நழுவிய நீரும் காலடியில் குறுகுறுத்தது. சிறு மீன் குஞ்சுகள் காலுக்குக் கூச்சம் தந்தபடி கவ்வத் தொடங்கின. குளித்து முடித்துப் போய் மீன் வாங்கிவந்து முருகையன் வரும் போது சுடுசோற்றோடு மணக்க மணக்க மீன் கறி சமைத்து வைக்கவேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

வானம் கருக்கத் தொடங்கியது. அண்ணாந்து பார்த்தவளின் நெற்றியில் மழையின் முதல் துளி விழுந்தது. ஐயோ இன்றைக்கும் மழையா ? ஓடைக் கரைக்கு ஏறியவள் தூறல் வலுக்க முன்னர் குடிசைக்கு ஓடத் தொடங்கினாள். அவளது பல நாள் உழைப்பு. ஒரு மாத உணவு. மூச்சு வாங்க ஓடி வந்தவள் சிறு தூறலில் நனைந்திருந்த நெற்பாயின் நான்கு மூலைகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பிடித்து குடிசைத் திண்ணை வரை இழுத்துவந்தாள். இடுப்பில் கட்டியிருந்த சாவியை எடுத்து பூட்டினை விடுவித்துக் குடிசையைத் திறந்து நெற்பாயினை உள்ளே வைத்த பொழுது மழை வலுத்தது.

இப்பொழுது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அரும்பாடு பட்டுச் சேர்த்து, அவித்துக் காயவைத்த நெல்லை பெரும் மழையிலிருந்து காப்பாற்றியாகிவிட்டது .நிம்மதிப் பெருமூச்சு விட்டவளின் கண்களுக்கு குடிசைக்குள்ளிருந்த வெற்றுத் தொட்டில் கண்ணில் பட்டது. ‘ஐயோ என் குழந்தை’ எனப்பதறியவாறு குடிசையையும் பூட்டாமல் பெரும் மழையில் நனைந்தவாறு திரும்பவும் ஓடைக்கரைக்கு ஓடத் தொடங்கினாள்.
***************************************************

-,
இலங்கை.

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்

ஈரம்.

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

தாஜ்


என் பெயர்
அறிந்ததெப்படி?
யார்தான் நீங்கள்
உங்களை….
எப்படி விளிப்பது
உறவும்தான் என்ன?

இப்பொழுதும்
அந்த நட்சத்திரப்
பெருவெளிதானா……
புவியீர்ப்பு விசையை
மீறிய கணம்
துருவங்களிலும்
காந்தம் இல்லையா?

நித்தம்
கண்டக் காட்சிகள்
அகத்து உயிர்க்க
கண்களை
மீட்ட வில்லையா…..
காற்றில் கரைந்து
வாழும் யென்
பவழ மொழியில்
மௌன அலகுகள்
அதிராததும் ஏன்?

எந்த லோகம்
தாண்டினாலும்
நித்தம்
கேணியில்தானே குளியல்…..
அரண் எழுப்பி
நிழல் காக்கும்
ஊற்றுப் பெருக்கிங்கே
வற்றியா விட்டது?

மன்னிக்கனும்…..
யார் நீங்கள்?

********
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்