வாழ்வின் பயணம்

This entry is part of 32 in the series 20070531_Issue

நீ “தீ”


வாழ்வின் பயணம்
புன்னகையால் தொடங்குகிறது,
இருண்மையின் இதழ்பிரிக்கப்பட்ட
தடாகத்தில்,
எதிர்பார்புகளின்றி
கடந்துசொல்ல முற்படுகிறோம்,
நம்முடைய பார்வையில்
நாம் செய்வது சரி என்று.
இப் பிரபஞ்சத்தை
நாம் தழுவிடாது தடுக்கும்
கட்டுப்பாடுகளை
தகர்க்க முயற்சிக்கிறோம்,
இதன் தொடர்சியாய்
கேவல் சப்தங்கள்,
ஏதற்காக எனும் புரிதலின்றியே
எண்ணங்கள் எரியூட்டப்படுகிறது,
சொல்லப்படாத ஆசைகளுக்காக,
மீண்டும் ஒருழுறை பிறந்திட
பயணம் முடிவடைகிறது.
இருண்மை ஆக்ரமிக்க தொடங்க
நம் புன்னகை நமக்கானதாகிறது.

ஆக்கம்: நீ “தீ”

Series Navigation