பயம்

This entry is part of 31 in the series 20070524_Issue

ஆதிராஜ்


இந்தியா எங்கும் இளைஞர் மயம் – அந்த
இளமையில் அவர்க்கென்ன இன்பமயம்!

படிப்பவர் நினைப்போ உணர்வு மயம் – வேலை
பாங்கினில் தேடும் ஆசைமயம்!

கல்வி முடிந்தபின் கவலை மயம் – வேலை
காலி இல்லையே ‘போர்டு’ மயம்!

எதிர்காலம் ஏமாற்றமயம் – நாடு
எங்கு பார்த்தாலும் கிளர்ச்சிமயம்!

உழைக்கின்ற வேலை வியர்வைமயம் – ஒர்
உத்தியோகம் எனில் வெறும் எழுத்துமயம்!

துணிந்து முயற்சியில் இறங்க பயம் – தொழில்
தொடங்கவும் மனதில் தோல்வி பயம்!

உயர்ந்தவர் வாழ்க்கை உழைப்புபயம் – இதை
உணர்ந்து நடப்பவர்க்குண்டு ஜெயம்!

– ஆதிராஜ்.


Series Navigation