காதல் நாற்பது (17) என்னிடத்தைத் தேர்ந்தெடு !

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கடவுள் தனது முன்னுக்கும் பின்னுக்கும்
இடையே வடித்த
கான சுரங்கள் அனைத்தையும்
தொடலாம் நீ
என்னரும் கவிஞனே !
தூய காற்றில் மௌனமாய்
மிதந்திடும் இன்னிசையை
மீட்டுவாய் நீ !
ஆரவார உலகத்தின் கூச்சல்களை
வேரறுப்பாய் நீ !
மனித இனம் கைவிட்ட நற்பலன்களை
மீட்டுவர
அவரது செவிகளுக்குள் ஊற்றி
மாற்று மருந்தளிப்பது
உன்னிசை !
அவ்வித முடிவுகட்கு உன்னை
அர்ப்பணிக்கும்
கடவுளின் நியதி !
உனக்காகக் காத்திருப்பது
எனது நியதி !
பெரும்பான்மைப் பலாபலன்களில் நான்
எவ்விதம் ஈடுபட வேண்டுமென
எண்ணுகிறாய் நீ ?
நம்பிக்கை கொண்டு உவகையுடன்
நானும் பாடவா ? அல்லது
மோனத்துடன்
என் மெல்லிய சோக நினைவுகள்
உன் கீதங்களுடன்
பின்னிக் கொள்ளவா ?
ஒரு மரத்தடி நிழலா ? அல்லது
ஓர் சமாதியா ?
எதன் மீது ஓய்வாக வேண்டும்
என்றோர் இடத்தைத் தேர்ந்தெடு நான்
பாடாதிருக்க ?

********************
Poem -17
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

My poet, thou canst touch on all the notes
God set between His After and Before,
And strike up and strike off the general roar
Of the rushing worlds, a melody that floats
In a serene air purely. Antidotes
Of medicated music, answering for
Mankind’s forlornest uses, thou canst pour
From thence into their ears. God’s will devotes
Thine to such ends, and mine to wait on thine.
How, Dearest, wilt thou have me for most use
A hope, to sing by gladly? or a fine
Sad memory, with thy songs to interfuse?
A shade, in which to sing–of palm or pine?
A grave, on which to rest from singing? . . . Choose.

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 16, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா