உடலின் சிறகுகள்

This entry is part of 33 in the series 20070405_Issue

ஹெச்.ஜி.ரசூல்


என்கனவுகளில் வந்து போகும்

சிறகு முளைத்த குதிரைகளில்

மிதக்க முயற்சிக்கிறேன்

என்னுடலில் முளைத்த சிறகுகளை

உதிர்த்துவிட முடியாமல்

எனது பறத்தல் தொடர்கிறது.

இறந்த உடலின் எலும்பொன்று

விசித்திர உருவெடுத்து

மலை உச்சியில் உட்கார்ந்து

ஆந்தையாகி கரைகிறது.

உடல்களை இறக்கவைத்து

எலும்புகளிலிருந்து திரும்பவும்

குஞ்சுஆந்தைகளை பறக்கவிட

தொடரும் எத்தனத்தில்

மீளமுடியாமல் உடல்கள் தவிக்கின்றன.

உடலின் சிறகுகள்

தொட்டு முத்தமிட்டுக் கொண்டே

ஏழாம் வானத்தில் நுழைகிறது

பறவைகளோடு சஞ்சரித்து கலந்து

வெளிவரமுடியாமல்

சிருஷ்டித்துக் கொண்டதொரு அர்ஷில்

எனக்கும் சில குழந்தைகள்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation