காதல் நாற்பது (12) துன்ப மயமான இசை !

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



காதல் வெட்க மறியா தென்றால்
தகுதி யின்றி நான்
ஒதுக்கப்பட மாட்டேன் !
கன்னங்கள் வெளுப்பது உனது
கண்ணுக்குத் தெரிகிறது !
காதல் கனத்த நெஞ்சின் பளுவைத்
தாங்க முடியாமல் நடுங்கி
முறிந்து போயின
முழங் கால்கள் !
ஒரு காலத்தில் பெருமை தந்து,
களைத்து விட்ட இந்த
கவித்துவ வாழ்க்கை எப்படியோ
கால மேட்டில் ஏறிடும் !
காட்டு வெளியே
கோலக் குயில் ஒலிக்கும்
துன்ப மயமான குழலிசையைக்
கேளாம லிருப்பது அபூர்வம் !
எதற்காக இப்படி உழல வேண்டும் ?
அந்தோ என் இனியவனே !
உந்தன் ஒப்பிலா அறிவுக்கும்,
உயர்ந்த பீடத்துக்கும்,
நிகரில்லை நான் என்பது
வெளிப்படை !
நானுனை இன்னும் நேசிப்பதால்
நளின முடன் பலிவாங்கும்
அரிய என் காதலே
உரிமை ஆக்கும் உன்னை !
அந்தக் காதல் உணர்விலே
நான் இன்னும் வாழ்வது
வீண்தான் !
உனக்கு ஆசி வழங்க
என்னைச் சமர்ப்பணம் செய்வேன்
நின்முகம் நோக்கி !

********************

Poem -11
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

And therefore if to love can be desert,
I am not all unworthy. Cheeks as pale
As these you see, and trembling knees that fail
To bear the burden of a heavy heart,–
This weary minstrel-life that once was girt
To climb Aornus, and can scarce avail
To pipe now ‘gainst the valley nightingale
A melancholy music,–why advert
To these things? O Belovழூd, it is plain
I am not of thy worth nor for thy place!
And yet, because I love thee, I obtain
From that same love this vindicating grace,
To live on still in love, and yet in vain,–
To bless thee, yet renounce thee to thy face.

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 5, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா