நெஞ்சோடு புலம்பல்!

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

அகரம்அமுதா



(கடலூர் அருகே தாழங்குடாவைச் சேர்ந்த ரேவதி பரங்கிப்பேட்டையருகே சின்னனூர் தேவநாத் இருவருக்கும் திருமணம் நடந்தது. முதலிரவில் வைத்து தாம்பந்திய உறவை வீடியோ படமாக மாப்பிள்ளையும்இ மாப்பிள்ளையின் மாமனும் எடுத்திருக்கின்றனர். மணப்பெண் போலீசில் புகார்.

பத்திரிக்கை செய்தி)

கல்லான கடவுள்களா

இல்லாம போனிகளா?

கொல்லாம எ(i)னக்கொல்லும்

கொடுமய கேட்டிகளா?

சிறுக்கிக்குப் பொறந்தமவ(ன்)

சீமைபோய் வந்தமவ(ன்

படுத்துயெனை படமெடுக்க

பழிநேரப் பாத்திகளா?

மானத்தக் காப்பவனே

மானத்தப் பறிச்சாக்கா

மூனு முடிச்செதுக்கு?

மொறயான ஒறவெதுக்கு?

நாலு சொவெரெதுக்கு?

நல்லிரவுந் தானெதுக்கு?

நாலுசனம் பாக்குதுன்னு

நாணமுண்டா நாய்களுக்கு?

தாய்காணா இடமெல்லா(ம்)

நாய்காண விட்டேனே?

வேசிக்குப் பொறந்தமவ(ன்)

மோசத்தச் செஞ்சானே?.

எட்டி இதழ்கடிச்சிக்

கொத்திக் கனிபறிச்சி

முட்டி உயிர் நசுக்கி

மூனுமொற ஆனபின்(N)ன

நாலுகண்ணும் தூங்கயி(N)ல

நல்லிரவும் போகயி(N)ல

மூனுகண்ணு விழுச்சிருக்க

மொதமொதலா பாத்ததென்ன?.

காத்தும் தீண்டாத

கட்டழகு பாகமெல்லாம்

?காமிரா? மொய்ததென்ன

கண்சிமிட்டிப் பாத்ததென்ன?.

வெடுக்குன்னு எழுந்தென்ன?

மேலாடை அணிஞ்சென்ன ?

பொசு;குன்னு போனஉயிர்

போன வழி மீளலையே!

கத்தி அழுதேனே

கதவொடைச்சிப் பார்த்தேனே

பொத்தி அழுதேனே….

பொலம்பித் தீத்தேனே…

ஒதவிக்கு ஊருசனம்

ஓடிவரக் கூடலையே…

கதறி அழுதாலும்

காமராக்கண் மூடலையே…

தாயப்படம் பிடிச்சபின்னே

தாரமெனப் பிடிச்சானே?

தாய்க்குப்பின் தாரமுன்னு

தாய்மொழியும் சொல்லிடுதே!

காரி உமிந்த்திட்டும்

கையெடுத்துக் கும்பிட்டும்

ஓடி ஒளிஞ்சானே

ஒளிஞ்சிபடம் பிடிச்சமவ(ன்)

அருந்ததி பாத்தேனே

வருந்தொயரம் பார்தேனா?

அம்மி மிதிச்சேனே

அசிங்கத்தக் கண்டேனா?

கால்விழுந்து வணங்கயில

கள்ளப்புத்தி அறிஞ்சேனா?

மேல்விழுந்து ஆடயில

விபரீதம் ஒணந்தேனா?

கருவோடு இருக்கயில

கள்ளிப்பால் கொடுக்காம

தொட்டிளில கெடக்கயில

தொண்டக்குழி நெரிக்காம

விட்டவளைச் சொல்லோனும்

விடங்கொடுத்துக் கொல்லோனும்

வட்டியோடு முதலாக

வாய்கரிசி போடோனும்?

கட்டிலி(N)ல சாஞ்சவனே!

கட்டையி(N)ல போறவனே!

பொத்திவெச்ச அழகையெல்லா(ம்)

ப்ள+பிலிம்மா எடுத்தவனே!

நேரடி ஒளிபரப்பா?

நா(i)ளக்கு ஒளிபரப்பா?

சின்னத் திரையினிலா?

சினிமா தேட்டரிலா?

சண்டாளி எம்மானம்

தவணையில போயிடுமா?

சம்மன்கண் சொத்தாட்டம்

சட்டுன்னு போயிடுமா?

நாளைக்கு விடிஞ்சாக்கா

நாலுசனம் கூடிடுமே?

நாலுசொவர் நடந்தக(i)த

நாஞ்சொல்ல நேர்ந்திடுமே?

சாயாத கதிராட்டம்

தலைநிமிர்ந்து பார்த்திடுமே

செய்யாத பிழைக்காக

சிரம்தாழ்த்தி நிக்கனுமே?

உள்ளத உள்ளபடி

ஒப்பாரி வைப்பேனா?

ஒளிச்சு அதமறச்சி

ஒருவாறு சகிப்பேனா?

எம(i)னப் பெத்துவிட்டு

எம்மேல ஏவிவிட்டு

செவனேன்னு மூளையில

சாஞ்சிவிட்ட சண்டாளி

?கியாஸ்?தான் விலையதிகம்

கேட்டாக்கா தரமாட்டா?

மண்ணெண்னை கொஞ்சோண்டு

மனமொவந்து தாராயோ?

உசுரோட எம்மானம்

ஒசரத்தில் பறக்கயில

பழுதும் கெ(i)டக்கலியே

பரண்இட்டு நான்தொங்க..1

கவிஆக்கம்: அகரம்அமுதா

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா