தேவதையின் கையில்

This entry is part of 32 in the series 20061207_Issue

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)அது என்று?
எப்போது?
எப்படி?
எப்போது என்பது
இரகசியம்

அது
அப்படி
இரகசியமாய் இருப்பதலாயே
அது
அவ்வளவு அதிசயம்!

இதுநாள்வரை
அதிசயமாகவே நிகழ்ந்து
அதிசயிக்கவைத்திருக்கிறது

அதிசயத்தை நிகழ்த்தி
அதிர்ச்சிக்க வைத்திருக்கிறது

எல்லாம் தருணங்களே எனினும்
இல்லை
எல்லா தருணங்களும் அப்படி

தவம்செய்து
தவித்திருக்கும் வேளையிலும்
இலவம்பஞ்சாகி ஏமாற்றியிருக்கிறது

ஏதொவென்று இருக்கும்வேளையிலும்
இதோ என்று உசுப்பியிருக்கிறது

விழித்திருக்கும் வேளையில்
என்
வலைமீனாகிவிடுகிறது அது

அந்த மழைத்துளி¢யில்
காலை மலர்நுனியில்
கனவின் கனவில் என்றெல்லாம்
அழகாய்ச்சொல்லாமல்
மனதை அம்மனமாக்கிக் காத்திருந்தேன்

எல்லாம்
என் விழித்தலில் இருக்கிறது
தேவதையின் தரிசனம்

என் தேடலெல்லாம்
தேவதையின் தரிசனமல்ல
தேவதைதரும் தரிசனம்

அங்கிருந்துதான்
என் திசைகள் தொடர்கின்றன

அந்த விழுதைப்பற்றித்தான்
தொங்கினேன்;ஆடினேன்

அந்தக்கணத்தில்தான்
தேவதையின்
சிறகுகளைப்பொருத்திக்கொள்கிறேன்

இருளில் ஓர் ஒளி
நெளியிது பாம்பாய்

பகலில் ஓர் இருட்டு
தெரிகிறது வெளிச்சமாய்

கனிகள் என் கைகளில்

எல்லாம்
அந்த ….
03.12.2006


03.12.2006

Series Navigation