எங்கும் அழகே!

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

கரு. திருவரசு


எடுப்பு
விரிந்தே நெடும்வானம் வாவென்குதே
விரைந்தோடி ஒன்றாக நான் கூடுவேன்
கண்ணிகள்
மண்ணிலே போகாதே என்றாடும் பூக்கள்
விண்ணிலே கண்காட்டி வாவென்னும் மீன்கள்
இங்குமழகே – அங்குமழகே
எங்குநான் சென்வேனடா
வெண்ணிலா மண்ணெல்லாம் பொன்னாக்க வந்தாள்
வெண்முகில் அங்கேனோ வீணாக வந்தான்
என்னபகையோ – என்ன உறவோ
இயற்கை விளையாட்டதோ
எண்ணமே வாழ்வாகும் என்றாரே கண்டார்
எங்குமே ஊடாடும் இன்பத்தில் நின்றால்
சொன்னமொழியின் – உண்மையறிவார்
இயற்கை உணர்வாரடா


thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு