கீதாஞ்சலி (97) கண்கொள்ளாக் காட்சி!

This entry is part of 35 in the series 20061102_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஉன்னுடன் விளையாடும் போது,
ஒருபோதும்
உன்னை யாரென்று கேள்வி
கேட்ட தில்லை நான்!
உன்னிடம்
கூச்ச மில்லை எனக்கு! உன்னிடம்
அச்ச மில்லை எனக்கு!
கொந்தளிப்பில்
ஆடியது என் வாழ்வு!
தூங்கிக் கொண்டிருந்த என்னைத்
தோழனைப் போல்
அழைத்தாய் அதிகாலைப் பொழுதில்!
அடுத்து அடுத்து வரும்
வெளித் திடலில் கானகத்தே
வழி நடத்திச் சென்றாய் என்னை!
வாழ்ந்த அந்நாட்களில்
எனக்காக நீ பாடிய
உன் கீதங்களின்
உட்பொருளை அறிய உணர்ந்திலேன்!
ஆயினும்
என்குரல் ஈர்த்துக் கொண்டது,
பண்ணிசை நயத்தை!
துள்ளி ஆடியது என் நெஞ்சம்,
தக்க தாளத்திற் கியைந்து!
இக்கணத்தில்
விளையாட்டு வேளை முடிந்த போது
என்மீது திடீரெனப்
பொழிந்தது
என்ன கண்கொளாக் காட்சி?
உன் திருப்பாதம் தூக்கிய
உலக மானது
ஒளிமிக்க விழிகள் பெற்றுப்
பிரமித்து நிற்கும்,
அனைத்து விண்மீன்களின்
மௌனத்தில்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 29, 2006)]

Series Navigation